TN Rain News Today LIVE : சீர்காழியில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் நாளை நேரில் ஆய்வு
Tamil Nadu Rain Update LIVE: சென்னையின் பல்வேறு பகுதிகளில் அதிகாலையிலும் இடியுடன் கூடிய கனமழை பெய்து வருகிறது.
கனமழையால் பாதிக்கப்பட்டுள்ள சீர்காழியில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் நாளை நேரில் சென்று ஆய்வு செய்ய உள்ளார்.
அடுத்த 3 மணி நேரத்திற்குள் 28 மாவட்டங்களில் ஆங்காங்கே இடி, மின்னலுடன் கூடிய மிதமான மழைக்கு வாய்ப்புள்ளதாக சென்னை வானிலை மையம் தகவல் தெரிவித்துள்ளது. அதன்படி சென்னை, காஞ்சிபுரம், திருவள்ளூர், செங்கல்பட்டு, ராணிப்பேட்டை, வேலூர், திருவண்ணாமலை, கள்ளக்குறிச்சி, விழுப்புரம், கடலூர், பெரம்பலூர், அரியலூர், மதுரை, ராமநாதபுரம் மற்றும் டெல்டா மாவட்டங்கள் உள்ளிட்ட 28 மாவட்டங்களில் மழை பெய்ய வாய்ப்பு உள்ளது.
காஞ்சிபுரம் மாவட்டம் செம்பரம்பாக்கம் ஏரிக்கான நீர்வரத்து 2,200 கன அடியாக உள்ளது. இதையடுத்து ஏரியில் இருந்து திறக்கப்படும் நீரின் அளவு 1, 000 கன அடியாக நீடிக்கிறது.
சென்னையின் பல்வேறு பகுதிகளில் அதிகாலையிலும் இடியுடன் கூடிய கனமழை பெய்து வருகிறது. அதன்படி, பெருங்குடி, கிண்டி, சைதாப்பேட்டை, தேனாம்பேட்டை, ஆயிரம்விளக்கு, ராயப்பேட்டை உள்ளிட்ட பல்வேறு பகுதிகளிலும் தற்போதுவரை கனமழை நீடித்து வருகிறது.
சென்னையில் மழை தொடரும் என்றும், மயிலாடுதுறை, நாகை, தஞ்சை, திருவாரூர் ஆகிய மாவட்டங்களில் அடுத்த 3 மணிநேரத்தில் இடி மின்னலுடன் மழைக்கு வாய்ப்பு இருப்பதாகவும் சென்னை வானிலை மையம் தகவல் தெரிவித்துள்ளது.
சென்னையில் வடகிழக்கு பருவமழை இயல்பை விட 27 சதவீதம் அதிகளவில் பெய்துள்ளதாக வானிலை ஆய்வுமையம் தகவல் தெரிவித்துள்ளது.
தமிழ்நாட்டில் அடுத்த 3 மணி நேரத்தில் சென்னை உட்பட 23 மாவட்டங்களில் மிதமான மழைக்கு வாய்ப்புள்ளதாக வானிலை ஆய்வு மையம் தகவல் தெரிவித்துள்ளது.
செம்பரம்பாக்கம் ஏரியில் இருந்து திறக்கப்படும் நீர் அளவு விநாடிக்கு 1,000 கனஅடியாக அதிகரிக்கப்பட்டுள்ளது. முதற்கட்டமாக 500 கனஅடி நீர் திறக்கப்பட்ட நிலையில், தற்போது 1,000 கனஅடியாக அதிகரிப்பு. 1,000 கனஅடி நீர் திறப்பால் கரையோர மக்கள் பாதுகாப்பாக இருக்கும்படி காஞ்சிபுரம் ஆட்சியர் அறிவுறுத்தல்
வடகிழக்கில் நிலைகொண்டிருந்த ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு பகுதி வலுவிழந்தது - சென்னை வானிலை மையம்
செம்பரம்பாக்கம் ஏரி நீர்திறப்பு இன்று மாலை 3 மணிக்கு 500லிருந்து 1000 கன அடியாக உயர்கிறது
இன்று (12-11-22) மாலை 3 மணிக்கு செம்பரம்பாக்கம் ஏரியிலிருந்து ஆயிரம் கன அடி உபரிநீர் திறந்து விடப்படுகிறது கரையோர உள்ள மக்கள் பாதுகாப்பாக இருக்கும்படி மாவட்ட ஆட்சித் தலைவர் கேட்டுக் கொண்டுள்ளார்.
Chembarambakkam Lake : இன்று (12-11-22) மாலை 3 மணிக்கு செம்பரம்பாக்கம் ஏரியிலிருந்து ஆயிரம் கன அடி உபரிநீர் திறந்து விடப்படுகிறது கரையோர உள்ள மக்கள் பாதுகாப்பாக இருக்கும்படி மாவட்ட ஆட்சித் தலைவர் கேட்டுக் கொண்டுள்ளார்.
தமிழ்நாட்டில் நீர்வளத்துறை பராமரிப்பில் உள்ள 2,786 பாசனக் குளங்கள் முழுகொள்ளளவை எட்டி நிரம்பியுள்ளன. தமிழ்நாட்டில் அதிகபட்சமாக மதுரை மாவட்டத்தில் மொத்தமுள்ள 1340 குளங்களில் 871 பாசனக் குளங்கள் நிரம்பின.
தஞ்சை மாவட்டத்தில் 327 பாசனக் குளங்கள் முழு கொள்ளளவை எட்டி 100 சதவீதம் நிரம்பியுள்ளன. திருவண்ணாமலை 150, புதுக்கோட்டை 158, சிவகங்கை 179,ராணிப்பேட்டை 134, திருச்சி 51 பாசனக் குளங்கள் நிரம்பின. திண்டுக்கல் 89, கிருஷ்ணகிரி 73, கள்ளக்குறிச்சி 74, சேலம் 56 பாசனக் குளங்கள் நூறு சதவீதம் நிரம்பின.
கல்வராயன் மலைப்பகுதியில் கனமழையால் பெரியார் நீர்வீழ்ச்சியில் கடும் வெள்ளப்பெருக்கு. கோமுகி அணையிலிருந்து நீர்வரத்து அதிகரிப்பால் அணையில் இருந்து வினாடிக்கு 1200 கன அடி நீர் வெளியேற்றம்.
தமிழகத்தில் அதிகபட்சமாக சீர்காழியில் 44 செமீ மழை பதிவானது - சென்னை வானிலை மையம்
தமிழகத்தில் மழை பாதிப்பு குறித்து அமைச்சர்கள், உயர்மட்ட அதிகாரிகளுடன் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் ஆலோசனை நடத்தினார். மாவட்டங்களில் நடந்து வரும் மீட்பு, நிவாரப்பணிகள் குறித்து கேட்டறிந்தார்.
பெரம்பலூர் : நீர்வரத்து அதிகரிப்பால் வெள்ளாறு கரையோர மக்களுக்கு வெள்ள அபாய எச்சரிக்கை விடப்பட்டுள்ளது.
நேற்று காலை முதல் இன்று காலை வரையிலான நிலவரப்படி, விழுப்புரம் மாவட்டத்தில் மொத்தம் 1402.80 மில்லி மீட்டர் அளவு மழைப் பதிவாகி உள்ளது. இதில், சராசரியாக 66.80 மில்லி மீட்டர் அளவு மழைப் பதிவாகி உள்ளது. மாவட்டத்தில் அதிகபட்சமாக, வானூரில் 101 மில்லி மீட்டர் அளவு மழையும், கோலியனூரில் 96 மில்லி மீட்டர் அளவு மழையும், வளவனூரில் 92 மில்லி மீட்டர் அளவு மழையும் பதிவாகி இருக்கிறது.
இதில் குறைந்தபட்சமாக, அரசூரில் 30 மில்லி மீட்டர் அளவு மழையும், திருவெண்ணெய்நல்லூரில் 32 மில்லி மீட்டர் அளவு மழையும், மணம்பூண்டியில் 56 மில்லி மீட்டர் அளவு மழையும் பதிவாகி இருக்கிறது. இதேபோல், மாவட்ட அளவில் 3 வீடுகள் பகுதியாகவும், 2 வீடுகள் முழுமையாகவும் சேதம் அடைந்துள்ளது.
கிருஷ்ணகிரி மாவட்டத்தில் தொடர் மழையின் காரணமாக இன்று பள்ளி, கல்லூரிகளுக்கு விடுமுறை என அம்மாவட்ட ஆட்சியர் அறிவித்துள்ளார்.
கனமழை காரணமாக செம்பரம்பாக்கம் ஏரிக்கு நீர்வரத்து வினாடிக்கு 1,510 கன அடியாக அதிகரித்துள்ளது. செம்பரம்பாக்கம் ஏரியிலிருந்து வினாடிக்கு 500 கன அடி நீர் வெளியேற்றப்பட்டு வருகிறது.
மயிலாடுதுறை மாவட்டத்தில் விடிய விடிய பெய்த அதீத கனமழையால் சீர்காழியில் 43 சென்டிமீட்டர் மழை பதிவாகியுள்ளது, இதனால் மாவட்ட முழுவதும் வெள்ளத்தில் மூழ்கியுள்ளது.
சென்னையில் தொடர் கனமழை காரணமாக பல்வேறு இடங்களில் மழைநீஎ தேங்கியுள்ளது. இதனால் வாகனஓட்டிகள் மற்றும் மக்கள் வேலைக்கு செல்ல முடியாமல் அவதிப்பட்டு வருகின்றனர்.
நீலகிரி, கோயம்புத்தூர், திருப்பூர், கடலூர், ஈரோடு, விழுப்புரம், காஞ்சிபுரம், செங்கல்பட்டு, திருவள்ளூர், சென்னை, திருவண்ணாமலை, வேலூர், ராணிப்பேட்டை, திருப்பத்தூர்,கள்ளக்குறிச்சி, சேலம், தர்மபுரி, கிருஷ்ணகிரி, நாமக்கல், கரூர், ராமநாதபுரம், விருதுநகர், மதுரை, திண்டுக்கல், தென்காசி, திருநெல்வேலி, தூத்துக்குடி மற்றும் கன்னியாகுமரி ஆகிய மாவட்டங்களில் அடுத்த ஓரிரு மணி நேரத்தில் இடியுடன் கூடிய லேசானது முதல் மிதமானது வரை மழை பெய்யக்கூடும்
மயிலாடுதுறை, தஞ்சாவூர், திருவாரூர், நாகை, கடலூர் ஆகிய மாவட்டங்களுக்கு ரெட் அலர்ட் விடப்பட்டுள்ளது.
ராமநாதபுரம் மாவட்டத்தில் பள்ளிகளுக்கு மட்டும் விடுமுறை அளித்து மாவட்ட ஆட்சியர் உத்தரவிட்டுள்ளார்.
னமழை காரணமாக சென்னை, செங்கல்பட்டு, திருச்சி, கடலூர், காஞ்சிபுரம், திருவள்ளூர், மயிலாடுதுறை, விழுப்புரம், திருவாரூர், நீலகிரி, வேலூர், அரியலூர், சேலம், கரூர், பெரம்பலூர், தஞ்சாவூர், புதுக்கோட்டை, தருமபுரி, திருவண்ணாமலை, கள்ளக்குறிச்சி,தேனி, திண்டுக்கல், கோவை, மதுரை ஆகிய 24 மாவட்டங்களில் உள்ள பள்ளி, கல்லூரிகளுக்கு இன்று விடுமுறை அளித்து அம்மாவட்ட ஆட்சியர்கள் உத்தரவிட்டுள்ளனர்.
நீலகிரி, திருவாரூர், அரியலூர், மயிலாடுதுறை மாவட்டங்களில் பள்ளி கல்லூரிகளுக்கு விடுமுறை
கனமழை எதிரொலி.. சென்னையில் பள்ளி கல்லூரிகள் விடுமுறை
கனமழை எதிரொலியால் தமிழ்நாட்டில் 4 மாவட்டங்களில் உள்ள பள்ளி, கல்லூரிகளுக்கு நாளை விடுமுறை அளித்து ஆட்சியர்கள் உத்தரவிட்டுள்ளனர். இதுவரை சென்னை, திருவள்ளூர், கடலூர், காஞ்சிபுரம் ஆகிய 4 மாவட்டங்களில் விடுறை அறிவிக்கப்பட்டுள்ளது.
கனமழை எதிரொலியால் சென்னையில் உள்ள பள்ளி , கல்லூரிகளுக்கு நாளை விடுமுறை அளித்து மாவட்ட ஆட்சியர் உத்தரவிட்டுள்ளார்.
தமிழ்நாட்டில் நிலவம் வானிலை காரணமாக சாலை மார்க்கமாக மதுரை விமான நிலையம் சென்றடைந்தார் பிரதமர் மோடி.
சென்னை புளியந்தோப்பில் உள்ள ஆஞ்சநேயர் கோவிலில் நடைபெறவிருந்த 5 திருமணங்கள், இன்று மழை காரணமாக தாமதமாகின.
திருமண விழாக்களுக்கு அணிவகுத்து நின்ற தம்பதிகள், கோயிலின் உள்ளே தேங்கியிருந்த தண்ணீரின் வழியாக நனைந்து கொண்டே கோயிலுக்குள் சென்றனர்.
கடலூர் மற்றும் டெல்டா மாவட்டங்களுக்கு ரெட் அலர்ட்
தமிழ்நாட்டிலுள்ள 5 மாவட்டங்களுக்கு அடுத்த 24 மணி நேரத்துக்கு ரெட் அலர்ட் விடுக்கப்பட்டுள்ளதால் அதிகன மழைக்கு வாய்ப்புள்ளது. மயிலாடுதுறை, தஞ்சாவூர், திருவாரூர், நாகை, கடலூர் ஆகிய மாவட்டங்களுக்கு வானிலை மையம் ரெட் அலர்ட் விடுத்துள்ளது.
திருவள்ளூர், ராணிபேட்டை, காஞ்சிபுரம் ஆகிய மாவட்டங்களில் நாளையும் கனமழை இருக்கும் - வானிலை ஆய்வு மையம்
நளினி உள்ளிட்ட 6 பேரை விடுதலை செய்ய உச்சநீதிமன்றம் உத்தரவு
சென்னையில் இன்று ஓரிரு இடங்களில் மிக கனமழைக்கு வாய்ப்பு இருக்கிறது என்று சென்னை வானிலை ஆய்வு மைய தென் மண்டல தலைவர் பாலச்சந்திரன் தெரிவித்தார்.
கோயம்புத்தூர் கார் குண்டுவெடிப்பு விவகாரத்திற்கு பிறகு முதல்வர் தலைமையில் காவல்துறை உயர் அதிகாரிகள் ஆலோசனை கூட்டம் நடைபெற்றது.
102 பேரில் 90 நபர்களிடம் ரகசிய சோதனை மற்றும் விசாரணையை தமிழக போலீசார் நடத்து முடித்துள்ளனர்.
புதுச்சேரியில் பரவலாக மழை பெய்து வருகிறது. புதுச்சேரியில் சுமார் 7 செ.மீ. மழை பதிவாகியது.
சென்னையில் கனமழை பெய்து வரும் நிலையில், பொதுமக்கள் புகார் தெரிவிக்க, 044-25619206, 044-25619207, 044-25619208 என்ற எண்கள், 9445477205 என்ற வாட்ஸ்அப் எண்ணில் அழைக்கலாம் என்று சென்னை மாநகராட்சி தெரிவித்துள்ளது.
அடுத்த 3 மணி நேரத்திற்குள்ளாக திருவள்ளூர் பகுதிகளில் லேசான மழை பெய்வதற்கான வாய்ப்பு உள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்தது.
சென்னையில் அடுத்த 3 மணி நேரத்திற்கு மழை வாய்ப்பிருப்பதாக வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
ராணிப்பேட்டை, திருவள்ளூர், காஞ்சிபுரம் ஆகிய மாவட்டங்களில் அதி கனமழைக்கு வாய்ப்புள்ளதாக ரெட் அலர்ட் எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.
ஈரோடு மாவட்டத்தில் பரவலாக மழை பெய்து வருகிறது.
அடுத்த 3 மணி நேரத்திற்குள்ளாக கலவை,சோளிங்கர்,வாலாஜாபேட்டை பகுதிகளில் லேசான மழை பெய்வதற்கான வாய்ப்பு உள்ளது என்று வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
கனமழை காரணமாக இன்று நடைபெறவிருந்த சிதம்பரம் அண்ணாமலை பல்கலைக்கழக தேர்வு ஒத்திவைக்கப்பட்டுள்ளது. தேர்வு தேதி பின்னர் அறிவிக்கப்படும் என்று பல்கலை. பதிவாளர் அறிவித்துள்ளார்.
வட தமிழக கடலோர பகுதிக்கு இன்று ரெட் அலர்ட் எச்சரிக்கையை வானிலை ஆய்வு மையம் விடுத்துள்ளது.
நவம்பா் 15ம் தேதி வாக்கில் வங்கக்கடலில் புதிய புயல் உருவாக வாய்ப்பு இருப்பதாகத் தனியார் வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. அடுத்த வாரம் வட கடலோர மாவட்டங்களில் அதீத கன முதல் மிக கனமழை பெய்ய வாய்ப்பு உள்ளதாகவும் தகவல் வெளியாகியுள்ளது.
சென்னையின் நேற்று இரவு முதல் பெய்து வரும் கனமழை காரணமாக சென்னையின் பல்வேறு சாலைகளிலும் மழைநீர் தேங்கியுள்ளது.
கள்ளக்குறிச்சி, விழுப்புரம், ஆத்தூர் உள்ளிட்ட பகுதிகளில் அதிகாலை முதலே கனமழை பெய்து வருகிறது.
பட்டினப்பாக்கம், சாந்தோம், மெரினா, சேப்பாக்கம், திருவல்லிக்கேனி, சிந்தாதிரிப்பேட்டை உள்ளிட்ட சென்னையின் பல்வேறு பகுதிகளில் பலத்த மழை பெய்து வருகிறது.
சென்னை திருவள்ளூர் காஞ்சிபுரம் செங்கல்பட்டு உள்ளிட்ட தமிழகத்தில் 20 மாவட்டங்கள் மற்றும் புதுவை, காரைக்கால் ஆகிய பகுதிகளில் அடுத்த மூன்று மணி நேரத்திற்கு இடி மின்னலுடன் கூடிய மிதமான மழைக்கும், கிருஷ்ணகிரி தர்மபுரி சேலம் நாமக்கல் உள்ளிட்ட தமிழகத்தில் 18 மாவட்டங்களில் அடுத்த மூன்று மணி நேரத்திற்கு இடி மின்னழுடன் கூடிய லேசான முதல் மிதமான மழைக்கும் வாய்ப்புள்ளது என்று சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
அடுத்த 3 மணி நேரத்திற்குள்ளாக பல்லாவரம்,ஆலந்தூர்,கிண்டி,குன்றத்தூர்,மாம்பலம்,வேளச்சேரி,மாதவரம் பகுதிகளில் லேசான மழை பெய்வதற்கான வாய்ப்பு உள்ளது.
அடுத்த 3 மணி நேரத்திற்குள்ளாக எழும்பூர், புரசைவாக்கம் பகுதிகளில் மிதமான மழை பெய்வதற்கான வாய்ப்பு உள்ளது
கனமழை காரணமாக திருவண்ணாமலை, சேலம் ஆகிய மாவட்டங்களில் உள்ள பள்ளி, கல்லூரிகளுக்கு இன்று விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது.
சென்னையில் அடுத்த 3 மணி நேரத்திற்கு கனமழைக்கு வாய்ப்புள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
Background
Tamil Nadu Rain Update LIVE:
நேற்று வங்கக்கடலில் நிலவிய ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு பகுதி இன்று காற்றழுத்தத் தாழ்வுப் பகுதியாக வலுவிழந்து வட தமிழகம், புதுவை மற்றும் அதனை ஒட்டியுள்ள பகுதிகளில் நிலவுகிறது.
கனமழை :
இதன் காரணமாக நேற்று காலை 6 மணிமுதல் சென்னை மற்றும் அதனை சுற்றியுள்ள பகுதிகளில் மழை பெய்யவில்லை. மழை இல்லாத காரணத்தினால் சாலையில் தேங்கியிருந்த தண்ணீர் முழுவதும் வெளியேற்றப்பட்டு, வாகன ஓட்டிகள் சிரமமில்லாமல் வாகனங்களை இயக்கினர். பொதுமக்களில் அன்றாட வாழ்க்கையும் இயல்பு நிலைக்கு திரும்பியது. இந்தநிலையில், நேற்று இரவு முழுவதும் சென்னையில் மழையின் தாக்கம் மீண்டும் தொடங்கியது. நேற்று இரவு தொடங்கிய கனமழை விட்டு விட்டும், அதிகாலை நேரத்தில் தொடர்ந்து பெய்தும் வந்தது. இதனால் சென்னையில் உள்ள சாலைகளில் மீண்டும் தண்ணீர் தேங்கி குளம்போல் காட்சி அளிக்கிறது.
சென்னையின் பல்வேறு பகுதிகளில் அதிகாலையிலும் இடியுடன் கூடிய கனமழை பெய்து வருகிறது. அதன்படி, பெருங்குடி, கிண்டி, சைதாப்பேட்டை, தேனாம்பேட்டை, ஆயிரம்விளக்கு, ராயப்பேட்டை உள்ளிட்ட பல்வேறு பகுதிகளிலும் தற்போதுவரை கனமழை நீடித்து வருகிறது.
மழை நிலவரம் :
13.11.2022: தமிழ்நாடு, புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளில் அனேக இடங்களில் இடிமின்னலுடன் கூடிய லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும். நீலகிரி, கோயம்புத்தூர், திருப்பூர், திண்டுக்கல், தேனி, மதுரை, விருதுநகர், தென்காசி, தூத்துக்குடி, திருநெல்வேலி மற்றும் கன்னியாகுமரி மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் கனமழை பெய்யவாய்ப்புள்ளது.
14.11.2022: தமிழ்நாடு, புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளில் ஒருசில இடங்களில் இடிமின்னலுடன் கூடிய லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும்.
15.11.2022: தமிழ்நாடு, புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளில் ஒருசில இடங்களில் இடிமின்னலுடன் கூடிய லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும்.
16.11.2022: தமிழ்நாடு, புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளில் ஓரிரு இடங்களில் லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும்.
சென்னை :
அடுத்த 24 மணி நேரத்திற்கு வானம் பொதுவாக மேகமூட்டத்துடன் காணப்படும். நகரின் ஒருசில பகுதிகளில் இடிமின்னலுடன் கூடிய மிதமான மழை பெய்யக்கூடும் ஓரிரு இடங்களில் கனமழை பெய்யக்கூடும். அதிகபட்ச வெப்பநிலை 29-30 டிகிரி செல்சியஸ் மற்றும் குறைந்தபட்ச வெப்பநிலை 24 டிகிரி செல்சியஸ் அளவில் இருக்கக்கூடும். அடுத்த 48 மணி நேரத்திற்கு வானம் பொதுவாக மேகமூட்டத்துடன் காணப்படும். நகரின் ஒருசில பகுதிகளில் இடிமின்னலுடன் கூடிய மிதமான மழை பெய்யக்கூடும். அதிகபட்ச வெப்பநிலை 30 டிகிரி செல்சியஸ் மற்றும் குறைந்தபட்ச வெப்பநிலை 24-25 டிகிரி செல்சியஸ் அளவில் இருக்கக்கூடும்.
- - - - - - - - - Advertisement - - - - - - - - -