TN School Leave: அடுத்த 3 நாட்களுக்கு கனமழை பெய்ய வாய்ப்புள்ளது என்று வானிலை ஆய்வு மையம் அறிவித்துள்ளது. 


அடுத்த 3 நாட்களுக்கு கனமழை தொடரும்


தமிழகத்தில் வடகிழக்கு பருவமழை தொடங்கி வெளுத்து வாங்கி வருகிறது. தொடக்கத்தில் குறைவான  மழையே பெய்தாலும், கடந்த ஒரு வாரமாக பரவலாக நல்ல மழை பெய்து வருகிறது. குறிப்பாக மேற்கு தொடர்ச்சி மலையையொட்டிய மாவட்டங்கள் மற்றும் தென் மாவட்டங்களில் தொடர்ந்து விடாமல் மழை பெய்து வருகிறது. மேலும், சென்னை மற்றும் அதனை சுற்றியுள்ள செங்கல்பட்டு, காஞ்சிபுரம், திருவள்ளூர் மாவட்டங்களில் நேற்று தொடங்கிய கனமழை விட்டுவிட்டு தொடர்ந்து பெய்து வருகிறது. மேலும், தென்கிழக்கு வங்கக் கடல் பகுதியில் ஒரு காற்றழுத்த தாழ்வுப் பகுதி நேற்று உருவாகி உள்ளது. அது மேலும் வலுவடையும் என்பதால் 6 மாவட்டங்களுக்கு நேற்று மிக கனமழை பெய்யும் என வானிலை ஆய்வு மையம் எச்சரித்து உள்ளது.


விழுப்புரம், கடலூர், மயிலாடுதுறை, தஞ்சை, திருவாரூர், நாகை ஆகிய மாவட்டங்களில் மிக கனமழை பெய்ய வாய்ப்புள்ளது. அதேபோல, காஞ்சிபுரம், செங்கல்பட்டு, திருவண்ணாமலை, கள்ளக்குறிச்சி, பெரம்பலூர்,  அரியலூர், திருச்சி, புதுக்கோட்டை மாவட்டங்களில் இன்று கனமழை பெய்ய வாய்ப்புள்ளது என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. புதுச்சோரி மற்றும் காரைக்கால் ஆகிய பகுதிகளின் கடலோரப் பகுதிகளில் ஒரு சில இடங்களில் இன்று கனமழை முதல் மிக கனமழை வரை பெய்ய வாய்ப்புள்ளதாக வானிலை மையம் அறிவித்திருந்தது. அதேபோல, தெற்கு அந்தமான் கடல் பகுதிகளில் ஒரு வளிமண்டல மேலடுக்கு சுழற்சி நிலவுகிறது. இதன் காரணமாக அடுத்த மூன்று நாட்களுக்கு கனமழை தொடரும் என்று வானிலை மையம் அறிவித்துள்ளது.


இன்று (நவம்பர் 15) எங்கெல்லாம் பள்ளிகளுக்கு விடுமுறை?


இதற்கிடையில்,  தமிழ்நாட்டில் பல்வேறு மாவட்டங்களில் நேற்று முன் தினம் முதல் மழை பெய்து வருகிறது. இதனால், நேற்று நாகை, திருவாரூர், தஞ்சை, திருவண்ணாமலை, விழுப்புரம், அரியலூர், கடலூர், மயிலாடுதுறை  ஆகிய மாவட்டங்களில் பள்ளி, கல்லூரிகளுக்கு விடுமுறை அறிவிக்கப்பட்டது.


இந்நிலையில், நேற்று காலை முதலே பல்வேறு மாவட்டங்களில் மழை பெய்து வருகிறது. அதன்படி சென்னையில் இன்று அதாவது நவம்பர் 15ஆம் தேதி பள்ளிகளுக்கு மட்டும் விடுமுறை அறிவித்து மாவட்ட ஆட்சியர் உத்தரவிட்டுள்ளார். அதேபோல், திருவள்ளூரிலும் கனமழை எச்சரிக்கை காரணமாக இன்று (நவம்பர் 15) பள்ளி, கல்லூரிகளுக்கு விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது. 




மேலும் புதுச்சேரி, காரைக்கால் பகுதிகளிலும் தொடர்ந்து கனமழை பெய்து வருகிறது. இதனால் அங்கு பள்ளி, கல்லூரிகளுக்கு இன்று (நவம்பர் 15) விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது. இத்தகவல் அதிகாரப்பூர்வ அறிவிப்பாக அறிவிக்கப்பட்டுள்ளது. 


மேலும் தமிழகத்தில் மற்ற மாவட்டங்களில் எவ்வித அதிகாரப்பூர்வ அறிவிப்பும் வெளியாகவில்லை. கனமழை எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ள விழுப்புரம், கடலூர், மயிலாடுதுறை, தஞ்சை, திருவாரூர், நாகை, காஞ்சிபுரம், செங்கல்பட்டு, திருவண்ணாமலை, கள்ளக்குறிச்சி, பெரம்பலூர்,  அரியலூர், திருச்சி, புதுக்கோட்டை மாவட்டங்களில் இன்று பள்ளிகளுக்கு விடுமுறை அளிக்க வாய்ப்பு இருக்கிறது எனத் தெரிகிறது. இருப்பினும், தற்போது வரை எந்த ஒரு ஒரு அதிகாரப்பூர்வ அறிவிப்பும் வரவில்லை என்பது குறிப்பிடத்தக்கது. 




மேலும் படிக்க


Rain Alert : தமிழகத்தில் அடுத்த 3 மணி நேரத்தில் இடி மின்னலுடன் கூடிய மழை - எந்தெந்த மாவட்டங்களில்?