Watch Video: ஒரே ஒரு நொடிதான்! முதியவர் எடுத்த விபரீத முடிவு...வந்தே பாரத் ரயில் முன் நடந்த சம்பவம்!
திரூர் ரயில் நிலையத்தில் தண்டவாளத்தை கடக்க முதியவர் முயன்ற போது, அதிவேகமாக வந்த வந்தே பாரத் ரயில் மயிரிழையில் இடிக்காமல் சென்றது பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

Watch Video: திரூர் ரயில் நிலையத்தில் தண்டவாளத்தை கடக்க முதியவர் முயன்ற போது, அதிவேகமாக வந்த வந்தே பாரத் ரயில் மயிரிழையில் இடிக்காமல் சென்றது பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
வந்தே பாரத் ரயில்:
இந்திய ரயில்வே துறையை நவீனப்படுத்தும் முயற்சியில் மத்திய அரசு சமீபகாலமாக செயல்பட்டு வருகிறது. இந்திய ரயில்வே துறையில் மிகவும் அதிவேக ரயிலாகவும், மிகவும் சொகுசான ரயிலாகவும் வந்தே பாரத் ரயில் இயங்கி வருகிறது. இந்த வந்தே பாரத் ரயில் பெட்டிகள் சென்னை ஐசிஎப் தொழில்சாலையில் இருந்து தயாரிக்கப்படுகிறது. இந்த வந்தே பாரத் ரயில் பயணிகள் மத்தியில் பெரும் வரவேற்பை பெற்றுள்ளது. இதனால் பல்வேறு வழித்தடங்களில் இந்த ரயில்கள் இயக்கப்பட்டு வருகின்றன. தமிழ்நாட்டை பொருத்தவரை, சென்னை - கோவை, சென்னை - நெல்லை, சென்னை இருந்து பெங்களூர் வழியாக மைசூர் என மொத்த மூன்று ரயில்கள் இயக்கப்பட்டு வருகிறது.
வைரல் வீடியோ:
இந்நிலையில், வந்தே பாரத் ரயில் முன் நடந்த சம்பவம் தொடர்பாக ஒரு அதிர்ச்சியூட்டும் வீடியோ ஒன்று இணையத்தில் வேகமாக பரவி வருகிறது. அதன்படி, கேரளாவில் உள்ள திரூர் ரயில் நிலையத்தில் நேற்று மாலை 5 மணிளவில் வந்தே பாரத் ரயில் வந்து கொண்டிருந்தது. அங்கு இருக்கும் ரயில் நடைமேடையில் பயணிகள் நின்றுக் கொண்டிருந்தனர். இவர்களுக்கு எதிரில் முதியவர் ஒருவர் தண்டவாளத்தை கடப்பதற்கு தயாரானார். ஆனால், நடைமேமையில் இருக்கும் பயணிகள் முதியவரை வர வேண்டாம் என்று கூச்சலிட்டனர்.
ஆனால், அவர் கேட்கவில்லை. தண்டாவளத்தில் குறுக்கே முதியவர் வந்து கொண்டிருந்ததை பார்த்த ரயிலின் லோகோ பைலட் ஹாரன் ஒலி எழுப்பினார். ரயில் வேகமாக வந்த கொண்டிருந்ததால், ரயிலையும் நிறுத்த முடியாத சூழல் ஏற்பட்டது. சரியாக ரயில் நடைமேடையை வேகமாக கடக்கவும், முதியவர் நடைமேடையில் கால் வைத்து ஏறி உள்ளார். ரயில் வரும் ஒரு வினாடிக்கும் குறைவான நேரத்தில் அவர் நடைமேடையில் ஏறி உள்ளார்.
இதனை அடுத்து, அங்கிருந்த பயணிகள் இவரை கடுமையாக திட்டியதோடு, இனி இவ்வாறு நடக்கக் கூடாது என்று அறிவுறுத்தினர். இந்த காட்சிகளை அங்கிருந்த ஒருவர் வீடியோ பதிவு செய்து இணையத்தில் வெளியிட்டார். இந்த வீடியோ இணையத்தில் வைரலானதை அடுத்து, போலீசார் இந்த முதியவர் யார்? எங்கிருந்து வருகிறார்? என்று விசாரித்து வருகின்றனர். கேரளாவை பொருத்தவரை இரண்டு வந்தே பாரத் ரயில்கள் இயக்கப்பட்டு வருகிறது. காசர்கோடு முதல் திருவனந்தபுரம் வரை இயக்கப்படுகிறது. ஆலப்புழா வழியாக ஒரு ரயிலும், கோட்டயம் வழியாக மற்றொரு ரயிலும் இயக்கப்பட்டு வருகின்றன என்பது குறிப்பிடத்தக்கது.