ராணிப்பேட்டை, திருவண்ணாமலை, கள்ளக்குறிச்சி, பெரம்பலூர், திருச்சி, புதுக்கோட்டை, சிவகங்கை, ராமநாதபுரம் ஆகிய  8 மாவட்டங்களில் இன்று கனமழைக்கு வாய்ப்பு உள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.


வட கடலோர மாவட்டங்களான காஞ்சிபுரம், செங்கல்பட்டு, திருவள்ளூர், சென்னை மிக கனமழை பெய்ய வாய்ப்புள்ளதாகவும் சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.


90 கி.மீ. வேகத்தில் காற்று


புயல் கரையைக் கடக்கும்போது 90 கி.மீ. வேகத்தில் காற்று வீசக்கூடும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.


சட்டென்று மாறிய புயல் நிலை


நேற்று (நவ.28) மதியம் ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு மண்டலம் புயலாக வலுப்பெற்று, கரையை நெருங்கும்போது வலுவிழந்து, மீண்டும் ஆழ்ந்த தாழ்வு மண்டலமாகவே  கரையைக் கடக்கும் என்று கூறப்பட்டிருந்தது. எனினும் பிறகு நேற்று மாலை புயல் உருவாகாது என்று வானிலை மையம் சார்பில் கணிக்கப்பட்டிருந்தது. 


பின்பு இன்று காலை நிலவரப்படி இந்த தாழ்வு மண்டலமானது அடுத்த மூன்று மணி நேரத்தில் புயலாக மாறும் என்று சென்னை வானிலை மைய இயக்குனர் பாலச்சந்திரன் தெரிவித்தார். இந்த நிலையில், சென்னை வானிலை மையம், ராணிப்பேட்டை, திருவண்ணாமலை, கள்ளக்குறிச்சி, பெரம்பலூர், திருச்சி, புதுக்கோட்டை, சிவகங்கை, ராமநாதபுரம் ஆகிய  8 மாவட்டங்களில் இன்று கனமழைக்கு வாய்ப்பு உள்ளதாக தற்போது தெரிவித்துள்ளது. 


சென்னை உள்ளிட்ட 7 மாவட்டங்களுக்கு ரெட் அலர்ட்


வட கடலோர மாவட்டங்களான காஞ்சிபுரம், செங்கல்பட்டு, திருவள்ளூர், சென்னை ஆகிய மாவட்டங்களுக்கு மிக கனமழை பெய்ய வாய்ப்புள்ளதாகவும் சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. நாளை சென்னை உள்ளிட்ட 7 மாவட்டங்களுக்கு ரெட் அலர்ட் விடுக்கப்பட்டுள்ளது.