TN Rain News LIVE: கடலூர் மாவட்டத்தில் பள்ளி, கல்லூரிகளுக்கு நாளை விடுமுறை

TN Rain News LIVE Updates: வடகிழக்கு பருவமழை காரணமாக சென்னை, திருவள்ளூர், காஞ்சிபுரம், செங்கல்பட்டு மாவட்டங்களில் கனமழை பெய்ய உள்ளது. தமிழ்நாடு மழை தொடர்பான அப்டேட்களை இங்கு தெரிந்து கொள்ளுங்கள்.

சுதர்சன் Last Updated: 14 Oct 2024 09:03 PM
விழுப்புரம்: நாளை பள்ளி, கல்லூரிகளுக்கு விடுமுறை

விழுப்புரம் மாவட்டத்தில் தொடர் மழை காரணமாக நாளை (15.10.2024) விழுப்புரம் மாவட்டத்தில் உள்ள அனைத்து பள்ளிகளுக்கு மட்டும் விடுமுறை என மாவட்ட ஆட்சித்தலைவர் டாக்டர் சி.பழனி.,இ.ஆ.ப., அவர்கள் அறிவித்துள்ளார். 

விழுப்புரம்: நாளை (15.10.2024) பள்ளிகளுக்கு மட்டும் விடுமுறை
கடலூர் மாவட்ட பள்ளி மற்றும் கல்லூரிகளுக்கு நாளை (15.10.2024) விடுமுறை

வடகிழக்கு பருவமழையை முன்னிட்டு முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக கடலூர் மாவட்ட பள்ளி மற்றும் கல்லூரிகளுக்கு நாளை (15.10.2024)விடுமுறை அளிக்கப்படுகிறது என மாவட்ட ஆட்சித்தலைவர் சிபி ஆதித்யா செந்தில்குமார் தெரிவித்துள்ளார். 

TN Rain News LIVE: கனமழை முன்னெச்சரிக்கை: கடலூர் மாவட்டத்தில் பள்ளி, கல்லூரிகளுக்கு நாளை விடுமுறை

வடகிழக்கு பருவமழையினை முன்னிட்டு முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக கடலூர் மாவட்ட பள்ளி மற்றும் கல்லூரிகளுக்கு நாளை (15.10.2024)விடுமுறை அளிக்கப்படுகிறது என மாவட்ட ஆட்சித் தலைவர் திரு.சிபி ஆதித்யா செந்தில்குமார் தெரிவித்துள்ளார். 

TN Rain News LIVE: கனமழை எச்சரிக்கை - உதவி, புகார் எண்கள் அறிவிப்பு - தமிழ்நாடு அரசு

வடகிழக்குப் பெருநகர முன்னிட்டு பருவமழையினை சென்னை மாநகராட்சிக்குட்பட்ட பகுதிகளில் பொதுமக்கள் மழை தொடர்பான புகார்கள் மற்றும் மீட்புப் பணிகள் தொடர்பாக மாநகராட்சியின் 150 இணைப்புகளுடன் கூடிய 1913 என்ற உதவி எண்ணிலும் கட்டுப்பாட்டு அறையில் உள்ள 044 2561 9204, 044 2561 9206 மற்றும் 044 2561 9207 என்ற தொலைபேசி எண்ணிலும் தொடர்பு கொண்டு தெரிவிக்கலாம்.

TN Rain News LIVE: தேனி சுற்றுவட்டாரத்தில் கனமழை 

 


தேனி மற்றும் அதன் சுற்றுவட்டார இடங்களில் 2 மணி நேரம் கனமழை பெய்து வருகிறது. ஆண்டிப்பட்டி, கடமலைக்குண்டு, மயிலாடும்பாறை, வருஷநாடு உள்ளிட்ட இடங்களில் கனமழை பெய்து வருகிறது. அதேபோல் உளுந்தூர்பேட்டை மற்றும் அதன் சுற்றுவட்டார இடங்களில் அரை மணி நேரமாக மிதமான மழை பெய்து வருகிறது. 

TN Rain News LIVE: சென்னையில் காற்றுடன் மிதமான மழை 

 


சென்னையில் பல்வேறு இடங்களில் காற்றுடன் மிதமான மழை பெய்து வருகிறது. ஆதம்பாக்கம், வேளச்சேரி, பள்ளிக்கரணை உள்ளிட்ட பகுதிகளில் காற்றுடன் மிதமான மழை பெய்து வருகிறது. எம்.ஆர்.சி நகர், பட்டினப்பாக்கம், மந்தை வெளி, மயிலாப்பூர், திருவான்மியூர் பகுதிகளில் மழை பெய்து வருகிறது. 


 

TN Rain News LIVE: கனமழை எச்சரிக்கை - திருப்பதியில் விஐபி தரிசனம் ரத்து

 


கனமழை எச்சரிக்கை காரணமாக திருப்பதியில் 16ஆம் தேதி விஐபி தரிசனம் ரத்து செய்யப்படுவதாக தேவஸ்தானம் அறிவிக்கப்பட்டுள்ளது. பக்தர்களின் நலனை கருத்தில் கொண்டு 16ஆம் தேதி விஐபி தரிசனம் ரத்து செய்யப்படுவதாக அறிவிக்கப்பட்டுள்ளது. 

TN Rain News LIVE: விழுப்புரம் சுற்றுவட்டாரத்தில் மிதமான் மழை - எங்கெல்லாம்?

விழுப்புரம் மாவட்டம் கோலியனூர், வளவனூர், முண்டியம்பாக்கம், விக்கிரவாண்டி, அரசூர் உள்ளிட்ட பகுதிகளில் மிதமான மழை பெய்து வருகிறது. மரக்காணம், கோட்டகுப்பம், கூனிமேடு, அனுமந்தை, ஆலப்பாக்கம், மண்டவாய் உள்ளிட்ட பகுதிகளிலும் மழை பெய்து வருகிறது. திண்டிவனம், கூட்டேரிப்பட்டு, தீவனூர், வானூர் உள்ளிட்ட பகுதிகளில் மிதமான மழை பெய்து வருகிறது. 


இதனிடையே திருச்செந்தூரில் சுமார் 80 அடி வரை கடல் உள்வாங்கியதால் பக்தர்கள் அதிர்ச்சி அடைந்துள்ளனர். 

TN Rain: புதுச்சேரி மற்றும் காரைக்காலில் பள்ளி, கல்லூரிகளுக்கு விடுமுறை அறிவிப்பு!


கனமழை எச்சரிக்கை காரணமாக புதுச்சேரி மற்றும் காரைக்காலில் உள்ள அரசு மற்றும் அரசு உதவிபெறும் பள்ளிகள், தனியார் பள்ளிகள், அனைத்து கல்லூரிகளுக்கும் நாளை செவ்வாய்க்கிழமை (15.10.2024) விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது. 



Background

தமிழ்நாடு முழுவதும் இந்த மாதம் தொடங்கியது முதலே தொடர்ந்து மழை பெய்து வருகிறது. வடகிழக்கு பருவமழை காரணமாக 20 செ.மீட்டர் அளவுக்கு மழை பதிவாகும் என ஏற்கனவே வானிலை மையம் தெரிவித்துள்ளது.


கடந்த சில நாட்களாகவே சென்னை உள்ளிட்ட பல மாவட்டங்களில் பகல் நேரங்களில் ஓரளவு வெயில் அடித்தாலும் இரவு நேரத்தில் அதிகளவு மழை பெய்து வருகிறது.


சென்னை மக்களே உஷார்:


சென்னை உள்பட பல மாவட்டங்களில் நேற்றும் மழை இரவு நேரத்தில் வெளுத்து வாங்கியது. சென்னை வானிலை ஆய்வு மையம் வெளியிட்ட அறிவிப்பின்படி, தமிழ்நாடு முழுவதும் காலை 7 மணி வரை பல மாவட்டங்களிலும் மழை கொட்டித் தீர்க்கப்போகிறது.


- - - - - - - - - Advertisement - - - - - - - - -

TRENDING NOW

© Copyright@2024.ABP Network Private Limited. All rights reserved.