2022 ஆம் ஆண்டு வடகிழக்கு பருவமழையின்போது 6 மாவட்டத்தின் 25 வட்டங்களை வறட்சி பாதித்த பகுதிகளாக அறிவித்த தமிழ்நாடு அரசு  அதனை அரசிதழில் வெளியிட்டுள்ளது.


கடந்த 2022 ஆம் ஆண்டு வடகிழக்குப் பருவமழை காலத்தில் குறைந்த மழைப்பொழிவால்  25 வட்டாரங்களில் 33 சதவீதத்திற்கும் அதிகமாக பயிர்சேதம் ஏற்பட்டது. இந்த இடங்களை நேற்றைய தினம் ‘மிதமான வேளாண் வறட்சி’ கொண்ட பகுதிகளாக தமிழ்நாடு அரசு அறிவித்தது. 


இதுதொடர்பாக வெளியான அறிக்கையில், 01.10.2022 முதல் 31.12.2022 வரையிலான வடகிழக்கு பருவமழைக் காலத்தில் குறைவான மழைப்பொழிவு ஏற்பட்டது. இதன் காரணமாக பயிர்கள் வாடியது.கிட்டதட்ட 33 சதவீதத்திற்கும் அதிகமான பயிர்கள் பாதிப்புக்கு உள்ளானதால் தமிழகத்தில் புதுக்கோட்டை, ராமநாதபுரம், சிவகங்கை, தென்காசி, தூத்துக்குடி மற்றும் விருதுநகர் மாவட்டங்களில் உள்ள 25 வட்டாரங்கள் ‘மிதமான வேளாண் வறட்சி’ பகுதிகளாக அறிவிக்கப்பட்டுள்ளது. 


இதில் ராமநாதபுரம் மாவட்டத்தில் போகலூர், கடலாடி, கமுதி, மண்டபம், முதுகுளத்தூர், நயினார்கோவில், பரமக்குடி, ஆர்.எஸ்.மங்கலம், இராமநாதபுரம், திருப்புல்லாணி, திருவாடானை ஆகிய பகுதிகள் இடம் பெற்றுள்ளது. இதேபோல் தென்காசி மாவட்டத்தில் ஆலங்குளம், கடையநல்லூர், கீழப்பாவூர், மேலநீலிதநல்லூர், சங்கரன்கோவில் ஆகிய இடங்களும், தூத்துக்குடி மாவட்டத்தில் ஆள்வார்திருநகரி, விருதுநகர் மாவட்டத்தில் நரிக்குடி, திருச்சுழி ஆகிய பகுதிகளும் இடம் பெற்றுள்ளது. மேலும் புதுக்கோட்டை மாவட்டத்தில் ஆவுடையார்கோவில், மணமேல்குடி பகுதிகளும், சிவகங்கை மாவட்டத்தில் தேவகோட்டை, இளையான்குடி, காளையார்கோவில்,மானாமதுரை ஆகிய இடங்களும் இந்த பட்டியலில் இடம் பெற்றுள்ளது. 


இதுதொடர்பாக தேவையான நடவடிக்கையை எடுக்குமாறு வருவாய் நிர்வாக ஆணையர் மற்றும் மாநில நிவாரண ஆணையர் ஆகியோருக்கு அறிவுறுத்தல் வழங்கப்படுவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்த நிலையில் அரசின் இந்த அறிவிப்பு அரசிதழில் வெளியிடப்பட்டுள்ளது.


மேலும் படிக்க:  Kolai Review: வித்தியாசமான மேக்கிங்... துப்பறியும் நிபுணராக விஜய் ஆண்டனி ஈர்த்தாரா... ‘கொலை’ படத்தின் முழு விமர்சனம் இதோ..!


Aneethi Review: பதைபதைக்க வைக்கும் காட்சிகள்... வசந்தபாலனின் அநீதி படம் சூப்பரா? ..சுமாரா? - முழு விமர்சனம் இதோ..!


CM Stalin EXCLUSIVE Interview: ஏபிபி நாடுவுடன் முதல்வர் ஸ்டாலின்! பூரண மதுவிலக்கு முதல் வாரிசின் வளர்ச்சிவரை.. சுளீர் கேள்விகளும் பளீர் பதில்களும்! மெகா எக்ஸ்குளூசிவ்