சென்னையில் கனமழை பாதித்த பகுதிகளை முதலமைச்சர் ஸ்டாலின் நேரில் ஆய்வு செய்து வருகிறார். தமிழகம் மற்றும் சென்னையின் பல பகுதிகளில் கடுமையான மழை மற்றும் வெள்ள பாதிப்பு ஏற்பட்டுள்ளது. இதன் காரணமாக, பொது மக்களின் இயல்பு வாழ்க்கை பாதிக்கப்பட்டுள்ளது.    


 






இந்நிலையில், புரசைவாக்கம், பெரம்பூர், ரெட்டேரி உள்ளிட்ட பாகுதிகளில் மழையின் பாதிப்புகள் குறித்து முதல்வர் நேரடியாக ஆய்வு செய்து வருகிறார். மின்சார விநியோகம், மழைநீர் வடிகால் மற்றும் கழிவுநீர் மேலாண்மை  குறித்து அதிகாரிகளிடம்  கேட்டறிந்தார். பாதுகாப்பு மற்றும் ஆரோக்கியத்தை உறுதி செய்ய தேவையான அனைத்து நடவடிக்கைகளும் மேற்கொள்ளப்படும்  என்று அங்கிருந்த பொது மக்களுக்கு ஆறுதல் அளித்தார்.   




இந்த ஆய்வில் முதல்வருடன், நகராட்சித் துறை அமைச்சர் கே.ன் நேரு,  அறநிலையத் துறை அமைச்சர் சேகர்பாபு,  தமிழ்நாடு காவல்துறை ஆணையர் சைலேந்திர பாபு, தலைமைச் செயலாளர் இறையன்பு,சென்னை ஆணையர் ககன்தீப் சிங் ஆகியோர் உடனிருந்தனர். 


முன்னதாக, வடகிழக்கு பருவமழையை முன்னிட்டு எடுக்கப்பட்டு வரும் முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் மற்றும் வெள்ளத்தடுப்பு நடவடிக்கைகள் குறித்து முதலமைச்சர் ஸ்டாலின் அனைத்து மாவட்ட ஆட்சித் தலைவர்களுடன் ஆலோசனை மேற்கொண்டார். 


தமிழ்நாட்டில் தற்போது பல்வேறு அணைகளிலும், ஏரிகளிலும் நீர் இருப்பு 50 சதவீதத்திற்கும் மேலாக பல இடங்களில் இருப்பதால், பெய்து வரும் மழையுடன் கூடுதல் நீர் சேர்ந்து அவைகள் மற்றும் ஏரிகளின் நீர் மட்டம் மேலும் உயர வாய்ப்புள்ளது. எனவே தாழ்வான பகுதிகளில் உள்ள குடியிருப்புப் பகுதிகளை எரிகள் மற்றும் கரையோரங்களையும் கண்காணித்து பொதுமக்களுக்கு எந்த வகையிலும் பாதிப்பு ஏற்படாத வகையில் அரசுத் துறைகள் செயல்பட வேண்டுமென கூட்டத்தில்  முதலமைச்சர்  அறிவுறுத்தினார். 



Caption


24 மணி நேரமும் புழல் மற்றும் செம்பரம்பாக்கம் ஏரிகளை கண்காணித்து, அதன் நீர் இருப்பு குறிந்த விவரங்களை உடனுக்குடன் சம்பந்தப்பட்ட அதிகாரிகள் தங்கள் உயர் அதிகாரிகளுக்கு தெரிவிக்க வேண்டும் என்றும் கேட்டுக் கொண்டார்.



Tamil Nadu rains: ஒரே இரவில் பேய் மழை.! எச்சரிக்கை விடுக்கத் தவறியதா வானிலை மையம்? திடீர் மழையா? கவனக்குறைவா?