முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் உத்தரவின் பேரில் நாளை முதல் தமிழ்நாட்டில் உள்ள 300 ரேஷன் கடைகளில் தக்காளி விற்பனை செய்யப்படும் என தமிழ்நாடு அரசின் சார்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. ஏற்கனவே 82 ரேஷன் கடைகளில் தக்காளி விற்பனை செய்யப்படுகிறது என்பது குறிப்பிடத்தக்கது. 


கடந்த சில வாரங்களாகவே தக்காளி உள்ளிட்ட காய்கறிகளின் விலை உயந்ர்துள்ளது.  அதாவது ஒருகிலோ தக்காளியின் விலை அதிகபட்சமாக ரூபாய் 140 வரை விற்பனை செய்யப்பட்டது. இதனால் பொதுமக்கள் மிகவும் சிரமத்திற்கு ஆளாகினர். இதனால் எதிர்க்கட்சிகள் மற்றும் திமுக கூட்டணிக் கட்சிகள் சார்பில் விலையை குறைக்க கோரிக்கை வைக்கப்பட்டது. இதனால், நேற்று நடைபெற்றது. அதில் ரேஷன் கடைகளில் தக்காளி விற்பனை செய்ய முடிவு செய்யப்பட்டது. மேலும், அத்தியாவசிய பொருட்களை யாரேனும் கடத்துகிறார்களா எனவும் கண்காணிக்க உத்தரவு பிறப்பிக்கப்பட்டது. 




இந்நிலையில், தமிழ்நாடு முழுவதும் உள்ள ரேஷன் கடைகளில் 300 ரேஷன் கடைகளில் தக்காளி விற்பனை செய்யப்படவுள்ளதாக அறிவிப்பு வெளிவந்துள்ளது. தற்போது ரேஷன் கடைகளில் ரூபாய் 60க்கு விற்பனை செய்யப்படுகிறது.