தமிழ்நாடு நிதிநிலை அறிக்கையை சட்டப்பேரவையில் நிதியமைச்சர் பி.டி.ஆர். பழனிவேல் தியாகராஜன் பல்வேறு அறிவிப்புகளை வெளியிட்டார். அவற்றின் தொகுப்புகளை தெரிவித்தார்.



  • மொழிப்போர் தியாகிகள் தாளமுத்து மற்றும் நடராசன் ஆகியோருக்கு சென்னையில் நினைவிடம்

  • அம்பேத்கரின் படைப்புகள் தமிழில் மொழிபெயர்க்கப்படும். இதற்காக ரூபாய் 5 கோடி மானியமாக வழங்கப்படும்.

  • தமிழ் மொழியில் மென்பொருள்கள் உருவாக்கப்படுவதை ஊக்குவிக்க தமிழ் கணினி பன்னாட்டு மாநாடு நடத்தப்படும்.

  • தமிழர் பண்பாட்டு தலங்களை இணைக்க தமிழ் பண்பாட்டு கடல்வழிப் பயணங்கள் ஊக்குவிக்கப்படும்

  • 591 அகவை முதிர்ந்த தமிழ் அறிஞர்களுக்கு கட்டணமில்லா பேருந்து பயண அட்டையை அரசு வழங்கி வருகிறது.

  • சென்னையில் நடத்தப்பவும் சங்கமம் கலை விழா போன்று 8 முக்கிய நகரங்களுக்கு விரிவுபடுத்தப்படும்.

  • தஞ்சையில் மாபெரும் சோழர் அருங்காட்சியகம் ஒன்று அமைக்கப்படும்.

  • இலங்கை தமிழர்களுக்கு 2ம் கட்டமாக 3 ஆயிரத்து 959 வீடுகளை கட்ட வரும் நிதியாண்டில் 223 கோடி ரூபாயை அரசு வழங்கும்.

  • ராணுவத்திற்காக உயிர்த்தியாகம் செய்த தமிழ்நாட்டைச் சேர்ந்தவர்களுக்கு இழப்பீடு 20 லட்சம் ரூபாயில் இருந்து ரூபாய் 40 லட்சமாக அதிகரிக்கப்படும்.

  • 711 தொழிற்சாலைகளில் உள்ள 8.35 லட்சம் தொழிலாளர்களுக்கு மக்களைத் தேடி மருத்துவ திட்டம் விரிவுபடுத்தப்படும்.

  • கிண்டி கிங் மருத்துவமனையில் கலைஞர் நினைவு பன்னோக்கு மருத்துவமனை இந்தாண்டு திறக்கப்படும்.

  • பேராசிரியர் அன்பழகன் பள்ளி மேம்பாட்டு திட்டத்தின் கீழ் வரும் நிதியாண்டில் புதிய வகுப்பறைகள், ஆய்வகங்கள், கழிப்பறைகள் என மொத்தம் 1500 கோடி ரூபாய் செலவில் பணிகள் மேற்கொள்ப்படும்.

  • எண்ணும் எழுத்தும் திட்டம் வரும் நிதியாண்டில் ரூபாய் 110 கோடி செலவில் நான்காம் – ஐந்தாம் வகுப்புகளுக்கு இத்திட்டம் விரிவுப்படுத்தப்படும்.

  • சர்வதேச புத்தக கண்காட்சி வரும் ஆண்டிலும் நடத்தப்படும்.

  • பல்வேறு துறைகளின் கீழ் செயல்படும் அனைத்து பள்ளிகளும் பள்ளிக்கல்வித்துறையின் கீழ் கொண்டு வரப்படும்.

  • மதுரையில் மாபெரும் நூலகம் அமைக்கப்பட்டு வருகிறது. கலைஞர் நூற்றாண்டு நூலகம் என்ற இந்த நூலகம் ஜூன் முதல் செயல்படும்.

  • 54 அரசு பாலிடெக்னிக் ரூபாய் 2 ஆயிரத்து 783 கோடி மதிப்பிட்டில் திறன்மிகு மையங்களாக தரம் உயர்த்தப்படும்

  • ரூபாய் 120 கோடி மதிப்பில் சென்னை அம்பத்தூரில் தமிழ்நாடு உலகளாவிய புதுமை முயற்சிகள் மற்றும் திறன் பயிற்சி மையம் அமைக்கப்படும்.

  • இளைஞர்களுக்கு தொழிற்சாலைகளிலேயே பயிற்சி அளித்திட தொழிற்நிறுவனங்கள் ஊக்குவிக்கப்படும்.

  • தொழிற்சாலைகளின் திறன்பள்ளிகள் திட்டத்திற்கு 25 கோடி ரூபாய் வழங்கப்பட்டுள்ளது.

  • குடிமைப்பணிகள் தேர்வுக்கு தயாராகும் மாணவர்களில் தேர்வு செய்யப்பட்ட மாணவர்கள் முதல்நிலை தேர்விற்கு மாதத்திற்கு ரூபாய் 7 ஆயிரத்து 500 வீதம் 10 மாதங்களுக்கு ஊக்கத்தொகை வழங்கப்படும்.

  • முதல்நிலை தேர்வில் தேர்ச்சி பெறுவோருக்கு 25 ஆயிரத்திற்கு ரூபாய் ஊக்கத்தொகை வழங்கப்படும்.

  • சென்னையில் உலகளாவிய அதிநவீன விளையாட்டு நகரத்தை இந்த அரசு அமைக்கும்.

  • மதுரை, கோவை, திருச்சி, நீலகிரியில் மாணவர்கள் பயன்பெறும் வகையில் நான்கு புதிய விடுதிகள் நவீன வசதிகளுடன் 100 கோடி ரூபாய் மதிப்பீட்டில் கட்டப்படும்.

  • ஆதிதிராவிட மற்றும் பழங்குடியினருக்கான துணைத்திட்டம் சிறப்பாக செயல்படுவதை உறுதி செய்ய சிறப்பு சட்டத்தை இந்த அரசு இயற்றும்

  • அண்ணல் அம்பேத்கர் தொழில் முன்னோடிகள் திட்டம் அறிமுகப்படுத்தப்படும். இதற்கு ரூபாய் 100 கோடி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது.

  • மாற்றுத்திறனாளிகள் உதவித்தொகை ரூபாய் 1500ஆக அதிகரிப்பு.

  • செப்டம்பர் 15-ந் தேதி முதல் மாதந்தோறும் மகளிர் உரிமைத்தொகை ரூபாய் 1000 வழங்கப்படும் 


மேலும் படிக்க: TN Budget 2023 LIVE: சென்னை, மதுரை உள்ளிட்ட 7 மாநகராட்சிகளில் இலவச WIFI வசதி; பட்ஜெட்டில் அறிவிப்பு


மேலும் படிக்க: TN Budget 2023: மாற்றுத்திறனாளிகள் உதவித்தொகை அதிகரிப்பு.. இலங்கை தமிழர் முகாம்களில் 7 ஆயிரம் புதிய வீடுகள் - பட்ஜெட்டில் அறிவிப்பு