தமிழ்நாடு அரசின் 2023-2024ம் ஆண்டுக்கான பட்ஜெட்டை தமிழக நிதியமைச்சர் பி.டி.ஆர். பழனிவேல் தியாகராஜன் தாக்கல் செய்தார்.


சோழர் அருங்காட்சியகம், தாளமுத்து நடராஜனுக்கு சென்னையில் நினைவிடம் உள்ளிட்ட பல்வேறு அறிவிப்புகளை வெளியிட்ட நிதியமைச்சர் மாற்றுத்திறனாளிகள் உள்பட பலருக்கும் முக்கிய அறிவிப்புகளை வெளியிட்டார்.



  • மாற்றுத்திறனாளிகளுக்கான உதவித்தொகை ரூபாய் 1500 ஆக உயர்த்ப்பட்டுள்ளது.

  • கடுமையாக பாதிக்கப்பட்ட மாற்றுத்திறனாளிகளுக்கான உதவித்தொகை ரூபாய் 1500ல் இருந்து ரூபாய் 2500 ஆக உயர்த்தப்பட்டுள்ளது.

  • மாற்றுத்திறனாளிகளின் உதவித்தொகை திட்டத்திற்காக ரூபாய் 1444 கோடி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது.

  • சென்னை ஜவஹர்லால் நேரு திறந்தவெளி விளையாட்டு அரங்கத்தை மேம்படுத்த ₹25 கோடி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது.

  • ஆதிதிராவிடர், பழங்குடியினர் துறைக்கு ரூபாய் 3,513 கோடிக்கு ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது.

  • தமிழ்நாட்டில் உள்ள இலங்கை தமிழர் மறுவாழ்வு முகாம்களில் 7 ஆயிரத்து 461 வீடுகள் புதியதாக கட்டப்படும்.

  • சென்னையில் உள்ள அரசு ஸ்டான்லி மருத்துவமனையில் புதிய பன்னோக்கு சிகிச்சை மையம், செவிலியர் விடுதி கட்டப்படும்.

  • மருத்துவம் மற்றும் மக்கள் நல்வாழ்வுத்துறைக்கு ரூபாய் 18 ஆயிரத்து 661 கோடி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது.

  • மனிதவளமே மாநிலத்தின் மாபெரும் செல்வம் என்பதை உணர்ந்துள்ள இந்த அரசு அதை மேம்படுத்துவதற்கு அனைத்து முயற்சிகளையும் செய்து வருகிறது.

  • தமிழ்நாட்டில் உள்ள திறன்மிக்க பணியாளர்களே பன்னாட்டு முதலீட்டுகளை ஈர்ப்பதற்கு ஒரு முக்கிய காரணி என்பதை அறிந்துள்ளோம்.

  • இதனால், மின்னவேகத்தில் மாறி வரும் தொழில்சூழலுக்கு தேவைப்படும் மனிதவளத்தை உருவாக்குவதற்கு ரூபாய் 2 ஆயிரத்து 877 கோடி செலவில் 71 அரசு தொழிற்பயிற்சி நிலையங்களை தலைசிறந்த திறன் மையங்களாக மாற்றும் திட்டம் நடைபெற்று வருகிறது.

  • வரும் கல்வியாண்டிலே இப்பணிகள் முடிக்கப்பெற்று புதிய பாடப்பிரிவுகளில் மாணவர்கள் சேர்க்கை நடத்தப்படும்.முதலமைச்சரின் விரிவான மருத்துவ காப்பீடு திட்டத்தில் குடும்பம் ஒன்றிற்கு ரூபாய் 5 லட்சம் ரூபாய் காப்பீடு வழங்கப்பட்டு வருகிறது. 

  • நடப்பாண்டில் இதுவரை இல்லாத அளவிற்கு ரூபாய் 11.82 லட்சம் நோயாளிகளுக்கு ரூபாய் 993 கோடி மதிப்பிலான உயிர்காக்கும் சிகிச்சைகள் அளிக்கப்பட்டுள்ளன.

  • திருச்சி மகாத்மா காந்தி நினைவு அரசினர் மருத்துவமனையில் 110 கோடி ரூபாயில் புதிய கட்டிடங்கள் கட்டப்படும்.

  • சென்னை அம்பத்தூரில் ரூபாய் 120 கோடி செலவில் தமிழ்நாடு உலகளாவிய புதுமை முயற்சிகள் மற்றும் திறன் பயிற்சி மையம் அமைக்கப்படும்.

  • இளைஞர்களுக்கு தொழிற்சாலைகளிலேயே பயிற்சி அளித்திட திறன் நிறுவனங்கள் ஊக்குவிக்கப்படும்.

  • தொழிற்சாலைகளில் திறன் பள்ளிகள் என்ற இந்த திட்டத்திற்கு ரூபாய் 25 கோடி ரூபாய் இந்தாண்டில் வழங்கப்பட்டுள்ளது.

  • சிப்காட் தொழிற்பூங்காவில் 80 கோடி மதிப்பீட்டில் அதிநவீன திறன் மேம்பாட்டு மையம் நிறுவப்படும்.


ஆகிய அறிவிப்புகளை அவர் வெளியிட்டுள்ளார். 


மேலும் படிக்க: TN Budget 2023 LIVE: தமிழ்நாடு பட்ஜெட்டில், மருத்துவத்துறைக்கு 18,661 கோடி ரூபாய் நிதி ஒதுக்கீடு- நிதியமைச்சர் பழனிவேல் தியாகராஜன்


மேலும் படிக்க:AIADMK Walkout: பட்ஜெட் தாக்கல் செய்ய ஆரம்பித்ததும் அமளியில் ஈடுபட்ட அதிமுக வெளிநடப்பு! காரணம் என்ன?