விருதுநகர் மாவட்டம் பாண்டியன் நகரை சேர்ந்த 22 வயது பெண்மணி ஒருவர் அதே பகுதியில் உள்ள கார்மெண்ட்ஸ் ஒன்றில் பணிபுரிந்து வந்துள்ளார். இவருக்கு விருதுநகர் மேல தெருவை சேர்ந்த திமுக நிர்வாகி ஹரிஹரன் பேஸ்புக் மூலம் அறிமுகமாகியுள்ளார். பால் பண்ணை நடத்தி வரும் ஹரிஹரன் அந்த பெண்ணை காதலிப்பதாகவும், திருமணம் செய்து கொள்வதாகவும் ஏமாற்றி உடலுறுவு கொண்டுள்ளார். அப்போது அந்த பெண்ணிற்கு தெரியாமல் தனிமையில் இருக்கும் வீடியோவை பதிவு செய்த ஹரிஹரன், தனது நண்பரான திமுக நிர்வாகி ஜுனைத் அகமதுவிற்கு அனுப்பியுள்ளார். 


 


அதை தொடர்ந்து அந்த பெண் நிர்வாணமாக இருக்கும் வீடியோவை பேஸ்புக், வாட்ஸாப்பில் வெளியிட்டுவிடுவதாக மிரட்டி ஜுனைத்தும் பாலியல் வன்கொடுமையில் ஈடுபட்டுள்ளார். வீடியோவை வைத்து மிரட்டி 8 நபர்கள் பாலியல் வன்கொடுமையில் ஈடுபட்டுள்ளனர், அதில் 9ம் வகுப்பு, 11 மற்றும் 12ம் வகுப்பு பயிலும் பள்ளி மாணவர்கள் நான்கு பேர் என்பது தான் மிக துயரமான விஷயம். இந்த சம்பவத்தில் தொடர்புடைய 8 நபர்களும் தற்போது விருதுநகர் போலீசாரால் கைது செய்யப்பட்டுள்ளனர்.


 






இந்நிலையில் இந்த விவகாரம் தொடர்பாக பாஜக மாநில தலைவர் அண்ணாமலை கருத்து தெரிவித்துள்ளார். இது தொடர்பாக அவர் தன்னுடைய ட்விட்டர் பக்கத்தில், “விருதுநகரில், ஒரு கும்பல் வீடியோ மூலம் பிளாக்மெயில் செய்து, 22 வயது பெண்ணை  கூட்டாக பலாத்காரம் செய்த அவலச் செய்தியறிந்து அதிர்ச்சியும் சோகமும் அடைந்தேன்.இதைவிட கூடுதல் அதிர்ச்சியளிக்கும் விஷயம் - இந்த வெட்கக்கேடான செயலுக்கு மூளையாக இருந்தது ஒரு உள்ளூர் திமுக பிரமுகர். இந்தக் குற்றவாளிகளை சட்டத்தின் முன் நிறுத்துவது அவசியமே, ஆனால், தற்போது  திமுக  அரசில் ஒட்டுமொத்த காவல் துறையை மேம்படுத்துவதே, மக்களுக்கு நம்பிக்கை கொடுக்கும். ஆகவே தமிழ்நாடு முதலமைச்சர் தனது கட்சிக்காரர்களின் பிடியிலிருந்து  உள்ளூர் காவல்துறையை சுதந்திரமாக செயல்பட அனுமதிப்பாரா?” எனப் பதிவிட்டுள்ளார். 


 





மேலும் படிக்க:பொள்ளாச்சி பாணியில் கொடூரம்.. திமுக நிர்வாகி உட்பட 8 பேர் கைது.


மேலும் செய்திகளை காண, ABP நாடு செய்திகளை Google News -ல் பின் தொடர இங்கே கிளிக் செய்யவும்


ABP நாடு செய்திகளை சமூக வலைத்தள பக்கங்களிலும் பின் தொடரலாம்


பேஸ்புக் பக்கத்தில் தொடர


ட்விட்டர் பக்கத்தில் தொடர


யூட்யூபில் வீடியோக்களை காண