ஜெயலலிதா மரணம் தொடர்பாக ஆறுமுகசாமி ஆணையம் தனது விசாரணையை தீவிரப்படுத்தியுள்ளது. தமிழகத்தின் முன்னாள் துணை முதல்வரும், அ.தி.மு.க.வின் ஒருங்கிணைப்பாளருமான ஓ.பன்னீர்செல்வமும் நேற்று ஆஜராகி பரபரப்பான வாக்கமூலம் அளித்தார். இந்த நிலையில், இன்றும் ஆறுமுகசாமி ஆணையத்தில் ஆஜரான ஓ.பன்னீர்செல்வம் “ஜெயலலிதாவின் மரணத்தில் எனக்கு எந்த வித சந்தேகமும் இல்லை. அன்றும், இன்றும் சசிகலா மீது தனிப்பட்ட முறையில் மரியாதை உள்ளது” என்று கூறினார். அவரது வாக்குமூலம் அ.தி.மு.க.வினர் இடையே பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
Jayalalithaa Death: சசிகலாவுக்கு சப்போர்ட்..! விசாரணை ஆணையத்திற்கு முற்றுப்புள்ளியா? ஜெ. மரணத்தில் ஜகா வாங்கிய ஓபிஎஸ்
சுகுமாறன் | 22 Mar 2022 02:45 PM (IST)
ஜெயலலிதா மரணம் தொடர்பாக தனக்கு எந்த சந்தேகமும் இல்லை என்று ஆறுமுகசாமி ஆணையத்தில் ஓ.பன்னீர்செல்வம் கூறியிருப்பது பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
ஆறுமுகசாமி ஆணையத்தில் ஓ.பன்னீர்செல்வம்