2022-ஆம் ஆண்டுக்கான தமிழ்நாடு சட்டப்பேரவையின் முதல் கூட்டத்தொடர் நேற்று ஆளுநர் உரையுடன் தொடங்கியது. இரண்டாம் நாளான இன்று கேள்வி நேரம் நடந்தது.


அதன்படி சட்டப்பேரவை உறுப்பினர்கள் கேட்ட கேள்விகளுக்கு முதலமைச்சரும், அமைச்சர்களும் பதிலளித்தனர். இந்த நிகழ்வானது முதல்முறையாக நேரலையாக ஒளிபரப்பப்பட்டது. இந்த நேரலை ஒளிபரப்புக்கு பல்வேறு தரப்பினர் தங்களது பாராட்டை தெரிவித்துவருகின்றனர். கேள்வி நேரத்தின்போது பேசிய எதிர்க்கட்சித் துணைத் தலைவர் ஓ.பன்னீர்செல்வம்,  “சேலம் கோழிக்கால் நத்தம் வடுகப்பட்டி வழியாக வைகுண்டத்திற்கு சாலை அமைக்க வேண்டும் என உறுப்பினர்கள் கேள்வி கேட்டு அமைச்சர்கள் பதில் அளித்திருக்கின்றனர்.


முதலில் வைகுண்டத்திற்கு சாலை அமைக்க வேண்டுமென்றால் கிருஷ்ண பரமாத்மாவிடம் அனுமதி பெற வேண்டும். அந்த அனுமதி பெற்றாகிவிட்டதா என்பதற்கு அமைச்சர் பதிலளிக்க வேண்டும்” என்றார். ஓபிஎஸ்ஸின் இந்தப் பேச்சுக்கு சபாநாயகர் அப்பாவு சிரித்தார்.


இதனையடுத்து பேசிய பொதுப்பணித் துறை அமைச்சர் எ.வ. வேலு, “மக்களின் தேவை அறிந்து 17,000 கோடி ரூபாய்க்கு சாலை பணிகள் நடந்துவருகின்றன.


ஆன்மீகத்தில் திளைத்திருக்கும் ஓ.பன்னீர்செல்வம் வைகுண்டத்திற்கு அனுமதிக்கப்படுமா என கேட்கிறார். இந்த ஆட்சியைப் பொறுத்தவரை அமைச்சர் சேகர்பாபு மூலம் 5.30 மணிக்கே வைகுண்டத்திற்கு வழிகாட்டும் வகையில் அறநிலையத் துறை சார்பாக பல பணிகள் செய்யப்படுகின்றன.


TN Assembly Session: “ஆளுநர் உரை, நமத்துபோன பட்டாசு” - பாஜக தலைவர் அண்ணாமலை காட்டம்


எப்போது இல்லாத அளவுக்கு ஆன்மீக மக்களுக்கான பணிகள் இந்த ஆட்சியில் நடந்துவருகிறது. சிவலோகத்திற்கும் சரி, வைகுண்டத்திற்கும் சரி வழிகாட்டும் பணியில் சேகர் பாபு ஈடுபட்டிருக்கிறார்” என்றார்.


மேலும் செய்திகளை காண, ABP நாடு செய்திகளை Google News -ல் பின் தொடர இங்கே கிளிக் செய்யவும்


ABP நாடு செய்திகளை சமூக வலைத்தள பக்கங்களிலும் பின் தொடரலாம்


பேஸ்புக் பக்கத்தில் தொடர


ட்விட்டர் பக்கத்தில் தொடர


யூட்யூபில் வீடியோக்களை காண  


மேலும் வாசிக்க: Former TN minister KT Rajendra balaji Arrest: ராஜேந்திர பாலாஜி கைது.. பதுங்க உதவிய பாஜக பிரமுகர்.. ஸ்கெட்ச் போட்டு தூக்கிய போலீஸ்..!


TN Lockdown: மீண்டும் ஊரடங்கு... கொந்தளிக்கும் மக்கள்... கொட்டும் கருத்துக்கள்... இது தமிழ்நாட்டின் குரல்!


Jallikattu 2022: பார்வையாளர்களை தவிர்க்க முடியாது... தவிர்த்தால் அது ஜல்லிக்கட்டாக இருக்க முடியாது! கிரிக்கெட் Vs ஜல்லிக்கட்டு!


PM Modi Punjab Visit: ”விமான நிலையம் வரை நான் உயிரோடு திரும்பியதற்கு பஞ்சாப் முதல்வருக்கு நன்றி” - பிரதமர் மோடி