தமிழக முன்னாள் பால்வளத்துறை அமைச்சரான ராஜேந்திர பாலாஜி ஆவின் உள்ளிட்ட துறைகளில் வேலை வாங்கி தருவதாக கூறி 3 கோடி ரூபாய் வரை பணம் பெற்று மோசடி செய்ததாக வழக்குத் தொடரப்பட்டது. இந்த வழக்கில் ராஜேந்திர பாலாஜி கோரிய முன்ஜாமின் மனு தள்ளுபடி செய்யப்பட்டது. 


இதனைத்தொடர்ந்து அவர் தலைமறைவானார். இதனையடுத்து, அவரை கைது செய்ய தனிப்படைகள் அமைக்கப்பட்டு, கர்நாடகா, கேரளா உள்ளிட்ட மாநிலங்களுக்கு அனுப்பி வைக்கப்பட்டனர். கடந்த 20 நாட்களாக தேடுதல் வேட்டையில் போலீசார் தீவிரமாக ஈடுபட்டு வந்த நிலையில், இன்று கர்நாடகாவில் வைத்து போலீசார் அவரை சுற்றி வளைத்து கைது செய்தனர்.


 






இவருடன் அவர் தலைமறைவாக இருக்க உதவிய கிருஷ்ணகிரி மேற்கு மாவட்ட பாஜக பொதுச்செயலாளர் ராமகிருஷ்ணன், நாகேஷ், அதிமுக பிரமுகர் பாண்டியராஜன், கணேசன் ஆகியோரும் கைது செய்யப்பட்டுள்ளதாக முதற்கட்ட விசாரணை தகவல்கள் தெரிவிக்கின்றன.  


இதனையடுத்து, கர்நாடகா மாநிலத்தில் இருந்து அழைத்து வரப்பட்ட முன்னாள் அமைச்சர் தமிழக மாநில எல்லையான அத்திப்பள்ளி தனியார் மருத்துவக்கல்லூரி அருகே வைத்து வைத்து விருதுநகர் போலீசாரிடம் ஒப்படைக்கப்பட்டார். இதனையடுத்து அவர்கள் பாதுகாப்பாக விருது நகர் கொண்டு வரப்பட்டனர். 


மேலும் செய்திகளை காண, ABP நாடு செய்திகளை Google News -ல் பின் தொடர இங்கே கிளிக் செய்யவும்


ABP நாடு செய்திகளை சமூக வலைத்தள பக்கங்களிலும் பின் தொடரலாம்


பேஸ்புக் பக்கத்தில் தொடர


ட்விட்டர் பக்கத்தில் தொடர


யூட்யூபில் வீடியோக்களை காண