மகனுக்கு சரியாக முடி வெட்டவில்லை என்று கூறி, சலூன் கடைக்கு பூட்டு போட முயன்ற காவலர் ஆயுதப்படைக்கு மாற்றப்பட்டுள்ளார்.


திருநெல்வேலி மாவட்டம் திசையன்விளை காவல் நிலையத்தில் முதல் நிலை காவலராக பணியாற்றியவர் நேவிஸ் பிரட்டோ. நேற்று இவரது மகன் திசையன்விளை ராமகிருஷ்ணா பள்ளி எதிரே உள்ள சலூன் கடைக்கு சென்றுள்ளார். தனக்கு பிடித்தது போல் முடிவெட்டி விட்டு வீடு திரும்பியுள்ளார். சிறுவன் வீட்டிற்கு சென்றபோது, அவரது தாய் முடிவெட்டிக் கொண்ட ஸ்டைலை பார்த்து ஆத்திரமடைந்தார். இதனால் தனது கணவரான காவலருக்கு தொலைபேசி மூலம் தொடர்பு கொண்டு இது பற்றி தகவல் தெரிவித்தார். 


இதனை அறிந்ததை அடுத்து சிறுவனின் தந்தை வீட்டிற்கு வந்து பார்த்துள்ளார். அப்போது சிறுவனுக்கு முடி வெட்டிருந்ததை பார்த்த ஆத்திரத்தில் சலூன் கடைக்கு மகனை அழைத்து சென்றுள்ளார். ஆனால் சலூன் கடை உரிமையாளரான சிவராமன் உணவு சாப்பிட சென்றுள்ளார். இதனை அடுத்து, அவரது தொலைப்பேசி எண்ணை பெற்றுக் கொண்ட அவர், சலூன் கடை உரிமையாளரை தகாத வார்த்தைகளால் பேசியதாக கூறப்படுகிறது.


இதனை அடுத்து, சலூன் கடைக்காரர் நேரில் வருவதாக கூறிய சில மணி நேரத்திலேயே கடையின் ஷட்டரை கீழே இழுத்து பூட்டு போட முயன்றுள்ளார். இதனை அருகில் இருந்தவர்கள் தடுக்க முயற்சித்தனர். மேலும், கடையின் உரிமையாளரான சிவராமனும் நேரில் வந்து அவரிடன் பேச முயன்றார். ஆனால் காவலர் கேட்காமல் அவரை தகாத வார்த்தைகளால் பேசியுள்ளதாக கூறப்படுகிறது. இந்த சம்பவத்தை அருகில் இருந்தவர்கள் வீடியோ எடுத்து இணையத்தில் பகிர்ந்துள்ளனர். 


இதனை அடுத்து கடை உரிமையாளரான சிவராமன் இந்த சிறுவனுக்கு முடி வெட்டவில்லை எனக் கூறினார். ஆனாலும் அதை காவலர் ஏற்றுக் கொள்ளவில்லை. விசாரணையில் சிறுவன் வேறு கடையில் தனது விருப்பப்படி நண்பர்களுடன் சென்று முடி வெட்டியுள்ளதாக கூறப்படுகிறது.  இந்த சம்பவம் தொடர்பாக சலூன் கடை உரிமையாளர் சிவராமன் காவல்நிலையத்தில் புகார் அளித்தார். புகாரின்படி போலீசார் விசாரணை நடத்தினர். 


இதனை அடுத்து, வள்ளியூர் துணை போலீஸ் சூப்பிரண்டு (பொறுப்பு) பரிந்துரையின் பேரில் சம்மந்தப்பட்ட காவலர் நேவிஸ் பிரிட்டோவை ஆயுதப்படைக்கு மாற்றும் செய்து  போலீஸ் சூப்பிரண்டு சரவணன் உத்தரவிட்டுள்ளார். இந்த சம்பவம் அப்பகுதியில் சிறிது நேரம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.




மேலும் படிக்க


Crime: 'வேலைக்கு வரமாட்டியா’ - நடுரோட்டில் 16வயது சிறுமியின் முடியை பிடித்து தரதரவென இழுத்து சென்ற கடைக்காரர்..


Roopa IPS vs Rohini IAS: ரோகினி சிந்தூரி அந்தரங்க புகைப்படத்தை வெளியிட்ட ரூபா ஐபிஎஸ்.. அடுத்தடுத்த குற்றச்சாட்டு! என்ன நடந்தது?