பீகாரின் தலைநகர் பாட்னாவிற்கு அருகில் உள்ள ஜெதுலி கிராமத்தில் வாகன நிறுத்துமிடம் தொடர்பாக ஏற்பட்ட மோதலில் இருவர் கொல்லப்பட்டனர். ஐந்து பேர் காயமடைந்தனர்.


ஞாயிற்றுக்கிழமை நடந்த சம்பவத்தில், அப்பகுதியில் வாகனம் நிறுத்துமிடம் தொடர்பான தகராறு இரு குழுக்களிடையே ஏற்பட்டுள்ளது. இது பயங்கர வாக்குவாதத்தில் கொண்டு சென்று, வன்முறை மோதலாக மாரியது. பின் ஒரு கும்பலை சேர்ந்தவர்கள் அங்குள்ள கட்டிடம் மற்றும் வாகனங்களுக்கு தீ வைத்தனர். முக்கிய குற்றவாளிகள் மற்றும் 6 பேர் கைது செய்யப்பட்டுள்ளதாகவும், இந்த விவகாரம் தற்போது கட்டுக்குள் இருப்பதாகவும்  கூறப்படுகிறது.


விபத்தில் காயமடைந்தவர்களை மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளனர். "நிலைமை கட்டுக்குள் உள்ளது. மற்ற குற்றவாளிகளைத் தேடும் பணி நடைபெற்று வருகிறது" என்று பாட்னா எஸ்.எஸ்.பி கூறியுள்ளார்.  இறந்தவருக்கு சொந்தமான வாகன நிறுத்துமிடத்திலிருந்து வாகனம் எடுக்கப்பட்ட பின்னர் துப்பாக்கிச் சூடு நடத்தப்பட்டது.


குற்றம் சாட்டப்பட்ட உமேஷ், தனது வாகனத்தில் இருந்து சரக்கை ஏற்றிக்கொண்டிருந்தார், இதன் காரணமாக, வாகன நிறுத்துமிடத்திற்கான பாதை தடைபட்டது. வாகன நிறுத்துமிடத்திற்கு செல்லும் பாதை தடையாக இருந்ததால் இரு தரப்பினருக்கும் இடையே கடும் வாக்குவாதம் ஏற்பட்டது. இந்த வாக்குவாதம் முத்திப்போன நிலையில், மோதல் ஏற்பட்டு, தீ வைக்கப்பட்டது. இதன் விளைவாக இருவர் உயிரிழந்தனர். கைது செய்யப்பட்ட நபர் உமேஷ் மற்றும் அவரது குடும்பத்தினர் துப்பாக்கிச் சூடு நடத்தியதாகக் கூறப்படுகிறது, இதில் ஐந்து பேர் சம்பவ இடத்திலேயே காயமடைந்தனர். கெளதம் குமார் மற்றும் ரோஷன் குமார் இருவரும் உயிரிழந்தனர். அப்பகுதி மக்களால் வாகனங்களுக்கு தீ வைக்கப்பட்டதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. இந்த சம்பவம் குறித்து விசாரணை மேற்கொள்ளப்பட்டு வருகிறது.