தூத்துக்குடியில் இயங்கி வரும் ஸ்டெர்லைட் ஆலையால் சுற்றுச் சூழல் பாதிக்கப்பட்டு அந்த பகுதியில் வசித்து வரும் மக்கள் பல வகையான நோய்த்தாக்குதலுக்கு ஆளாகி வந்தனர். குறிப்பாக புற்றுநோய் பாதிப்பு ஏற்படுவதாகவும், சிறு குழந்தைகள் முதல் பெரியவர்கள் வரை ரத்தத்தில் ஆர்செனிக் கலந்திருப்பதாகவும் குற்றச்சாட்டு எழுந்தது. இந்த நிலையில் ஸ்டெர்லைட் ஆலையை நிரந்தரமாக மூட வேண்டும் என பொதுமக்கள் வலியுறுத்தி வந்தனர். பொது மக்களுடன் அரசியல் கட்சிகள் உட்பட பல அமைப்புகள் தொடர் போராட்டங்களில் ஈடுபட்டு வந்தனர். 2018ம் ஆண்டில் ஸ்டெர்லைட் ஆலையை மூட தொடர் போராட்டத்தில் ஈடுபட்டன இந்தப் போராட்டத்தின் நூறாவது நாளில், மாவட்ட ஆட்சியர் அலுவலகம் நோக்கி சென்ற மக்கள் மீது, அவர்களை கட்டுப்படுத்த காவல் துறை நடத்திய துப்பாக்கி சூட்டில் பள்ளி மாணவி உட்பட 13 பேர் உயிரிழந்தனர்.
இதையடுத்து தூத்துக்குடி துப்பாக்கிச் சூடு குறித்து விசாரிக்க நீதிபதி அருணா ஜெகதீசன் தலைமையில் விசாரணை ஆணையத்தை அமைக்க தமிழக அரசு உத்தரவிட்டது. இந்த விவகாரம் குறித்து விரிவான விசாரணை நடத்திய நீதிபதி அருணா ஜெகதீசன், விரிவான அறிக்கையைத் தாக்கல் செய்தார். இந்த அறிக்கை தமிழக முதல்வரிடம் கடந்த மே மாதம் தாக்கல் செய்யப்பட்ட நிலையில், அது சட்டசபையிலும் சமீபத்தில் தாக்கல் செய்யப்பட்டது. இந்த அறிக்கை தாக்கல் செய்த பின் இது தொடர்பாக பல்வேறு விவாதங்கள் முன்வைக்கப்பட்டது. தமிழக அரசு பல்வெறு நடவடிக்கைகள் மேற்கொண்டு வந்தது.தூத்துக்குடி துப்பாக்கி சூடு சம்பவம் தொடர்பாக அருணா ஜெகதீசன் ஆணையம் வெளியிட்டுள்ள அறிக்கையின் அடிப்படையில் மூன்று ஐபிஎஸ் அதிகாரிகள் உட்பட 17 காவல்துறை அதிகாரிகள்,காவலர்கள் மீது குற்றச்சாட்டு எழுந்தது.
குற்றச்சாட்டு கூறப்பட்ட காவல்துறையினர் மீது உரிய நடவடிக்கை எடுக்கப்படும் என முதலமைச்சர் சட்ட சபையில் தெரிவித்திருந்த நிலையில் 4 போலீசார் பணியிடை நீக்கம் செய்து தமிழக அரசு உத்தரவிட்டிருந்தது.
இந்த நிலையில் குற்றம் சுமத்தப்பட்ட 3 ஐ.பி.எஸ் அதிகாரிகள் தற்போது சென்னையில் பணியாற்றி வரும் நிலையில் அவர்களிடமும் துப்பாக்கி சூடு சம்பவம் தொடர்பான விளக்கம் கேட்க தமிழக உள்துறை முடிவு செய்துள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது.
Mayiladuthurai : மகனை கண்டுபிடிக்க காவல்துறை உதவவில்லை - எஸ்.பி.யிடம் வயதான தம்பதியினர் புகார் மனு
Sylendra Babu : ஆபரேஷன் மின்னல் என்றால் என்ன? DGP சைலேந்திரபாபு விளக்கம்
தீபாவளி களைகட்டிய நிலையில், திண்டிவனம் பகுதிகளில் ஆடுகள் திருட்டு - மக்கள் அதிர்ச்சி