மயிலாடுதுறை மாவட்டம் குத்தாலம் தாலுக்கா கருப்பூர் கிராமத்தை சேர்ந்த கலியபெருமாள் - ஜெயம் தம்பதியினர் கடந்த 15 நாள்களுக்கு முன் காணாமல் போன தனது மகனை மீட்டுத் தர வலியுறுத்தி மயிலாடுதுறை காவல் கண்காணிப்பாளர் அலுவலகத்தில் புகார் மனு அளித்தனர். இவர்களது இளைய மகன் பாக்கியராஜ் என்பவருக்கு பாண்டிச்சேரியை சேர்ந்த ரம்யா என்பவருடன் கடந்த 2010ம் ஆண்டு திருமணம் நடைபெற்றுள்ளது.
திருமணத்துக்கு முன்பு ரம்யா பாண்டிச்சேரியில் அவரது தூரத்து உறவினர் முரளிதரன் என்பவரின் வீட்டில் வேலை பார்த்து வந்துள்ளார். திருமணத்திற்கு பிறகும் பாண்டிச்சேரிக்கு சென்று வாழ வேண்டும் என ரம்யா பாக்கியராஜிடம் வற்புறுத்தி உள்ளார். இதற்கு பாக்கியராஜ் உடன்படாததால் இருவருக்கும் இடையே பிரச்னை ஏற்பட்டுள்ளது. இதனிடையே பாக்யராஜ் குடும்பத்தினர் மீது ரம்யா வரதட்சணை கொடுமை புகார் அளித்துள்ளார். அதன்பின்னர் சமரசமாகி மயிலாடுதுறையில் தனியாக வீடு எடுத்து ரம்யாவுடன் வசித்து வந்துள்ளார் பாக்கியராஜ்.
Diwali Special Bus : தீபாவளி கொண்டாட்டம் : சென்னையில் இருந்து 1.66 லட்சம் பேர் சொந்த ஊர் பயணம்
இந்நிலையில் பாக்யராஜை கடந்த 15 நாள்களாக காணவில்லை. இதுகுறித்து பாக்யராஜின் பெற்றோர் பாலையூர் காவல் நிலையத்தில் புகார் அளித்திருந்தனர். ஆனால் அவரை கண்டுபிடித்து தர பாலையூர் காவல்துறையினர் இதுவரை எந்த நடவடிக்கையும் எடுக்காததால் மனம் உடைந்த வயோதிக தம்பதியினர் இன்று மயிலாடுதுறை மாவட்ட காவல் கண்காணிப்பாளர் நிஷாவை சந்தித்து அவரிடம் தனது மகனை மீட்டுத் தர வலியுறுத்தி கண்ணீர் மல்க கோரிக்கை விடுத்தனர். அவர்களிடம் நடவடிக்கை எடுப்பதாக மாவட்ட காவல் கண்காணிப்பாளர் நிஷா ஆறுதல் கூறி அனுப்பி வைத்தார்.
மயிலாடுதுறையில் பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி தமிழ்நாடு அரசு சுகாதார செவிலியர் சங்கத்தினர் மாவட்ட ஆட்சியர் அலுவலகம் முன்பு கண்டன ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.
மயிலாடுதுறையில் பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி தமிழ்நாடு அனைத்து சுகாதார செவிலியர் சங்கத்தினர் கண்டன ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். மாவட்ட ஆட்சியர் அலுவலகம் முன்பு நடைபெற்ற ஆர்ப்பாட்டத்திற்கு சங்கத்தின் மாவட்ட தலைவர் கலைச்செல்வி தலைமையில் ஏராளமான செவிலியர்கள் கலந்து கொண்டனர்.
Bigg Boss 16: பிக்பாஸ் நிகழ்ச்சிக்கு புது தொகுப்பாளர்...ரசிகர்கள் அதிர்ச்சி...என்ன தான் நடந்தது?
இந்த ஆர்ப்பாட்டத்தில் சுகாதார செவிலியர்களை மன உளைச்சலுக்கு உள்ளாக்கும் அரசாணை 288 மற்றும் 392 கைவிட வேண்டும், 30 ஆண்டுகளுக்கு மேலாக பதவி உயர்வு வாய்ப்பு இன்றி பணிபுரியும் மாநகர சுகாதார செயலாளர்களுக்கு பதவி உயர்வு வழங்க வேண்டும், இடம் மாறுதல் கலந்தாய்வில் கலந்து கொண்ட இடத்தை தேர்வு செய்த செவிலியர்களின் இடமாறுதலுக்கான உத்தரவு உடனே வழங்க வேண்டும் உள்ளிட்ட பல்வேறு கோரிக்கை வலியுறுத்தி ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.
மேலும் பல சுவாரஸ்யமான செய்திகளை :
Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் ABP நாடு செய்திகளை உடனுக்குடன் பெற