பிற்படுத்தப்பட்ட மாணவிகளின் நலனுக்காக புதிதாக மூன்று கல்லூரி விடுதிகள் தொடங்கப்படும் என்று பிற்படுத்தப்பட்டோர் நலத்துறை அமைச்சர் ஆர்.எஸ்.  ராஜ கண்ணப்பன் அறிவித்துள்ளார்.


தமிழ்நாடு சட்டப்பேரவையில் பிற்படுத்தப்பட்டோர், கைத்தறி, சுற்றுச்சூழல் மற்றும் வனத்துறை மானியக் கோரிக்கை மீதான விவாதம் நடைபெற்றது.


அப்போது, ராஜ கண்ணப்பன் பிற்படுத்தப்பட்டோர் நலத்துறை சார்பிலான அறிவிப்புகளைத் தெரிவித்தார்.


பிற்படுத்தப்பட்டோர், மிகப் பிற்படுத்தப்பட்டோர் மற்றும் சீர்மரபினர் விடுதிகளுக்கு சிறப்பு பராமரிப்பு மற்றும் பழுதுபார்ப்பு பணிகள் மேற்கொள்ள ரூ.20 கோடி நிதி ஒதுக்கீடு செய்யப்படும். 


பிற்படுத்தப்பட்ட மாணவர் விடுதிகளுக்கு ரூ.16.13 கோடியில் சொந்தகட்டடம் கட்டப்படும். சென்னை எஸ்பிளனேடு பகுதியில் அமைந்துள்ள குறளக கட்டடத்தை இடித்துவிட்டு புதிதாக கட்டப்படும்.


தூத்துக்குடி காயல்பட்டினத்தில் பனைவெல்ல கிடங்கு, பனை ஓலைத் தொழிற்கூடம் அமைக்கப்படும். 


இட ஒதுக்கீடு விவகாரம் குறித்து எழுப்பப்பட்ட கேள்விக்கு பதிலளித்த அமைச்சர்,” இட ஒதுக்கீடு விவரகாரத்தில் எடுத்தேன் கவிழ்த்தேன் என முடிவெடுக்க முடியாது. தம்ழிநாட்டில் பல்வேறு சமூகங்கள் இருப்பதால் 10-நாளில் கணக்கெடுப்பை மேற்கொள்ள முடியாது.” என கூறினார்.


சட்டப்பேரைவில் முக்கிய அறிவிப்புகள்:


"நீலாங்கரை முதல் அக்கரை வரை, பொதுமக்கள் பயன்பாட்டிற்கான மிதிவண்டிப்பாதை அமைக்கப்படும்" -சட்டப்பேரவையில் அமைச்சர் சேகர் பாபு அறிவிப்பு!


சென்னை மாநகராட்சியில் விரைவில் வருகிறது ஒரே டிக்கெட் முறை - சட்டப்பேரவையில் அறிவிப்பு!


சென்னையில் இயங்கும் மாநாரப் பேருந்துகல்,மெட்ரோ இரயில், புறநகர் ரயில் போன்ற போக்குவரத்து சேவைகளில் இடையூறு இல்லாத பயணத்தை உறுதி செய்ய ஒருங்கிணைந்த OR பயணச்சீட்டு முறை மற்றும் பயணத்திட்டமிடலுக்கான் செயலி ரூ.15 கோடி மதிப்பில் உருவாக்கப்படும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது. 


12 பிற்படுத்தப்பட்டோர், மிகவும் பிற்படுத்தப்பட்டோர் சீர்மரபினர் மற்றும் சிறுபான்மையினர்  மாணவியர் விடுதிகளில் மாணவியரின் பாதுகாப்புக்காக ரூ. 12 லட்சம் செலவில் சிசிடிவி கேமரா பொருத்தப்படும். 


மலைப்பிரதேசங்களில் செயல்பட்டு வரும் 20 பிற்படுத்தப்பட்டோர் மற்றும் மிகவும் பிற்படுத்தப்பட்டோர் விடுதிகளுக்கு நீர் கொதிக்கலன்கள் 10 லட்சம் ரூபாய் செலவில் வழங்கப்படும். 


 கல்லூரி மாணவியர் விடுதிகளில் தங்கி பயிலும் மாணவியருக்கு 45 லட்சம் ரூபாய் செலவில் சுகாதார குட்டை தகளிகள் வழங்கப்படும். 




மேலும் வாசிக்க..


ராகுல் காந்தி தகுதி நீக்கம்...தண்டனைக்கு தடை விதிக்கப்படுமா? தீர்ப்பு எப்போது...சூரத் நீதிமன்றம் அறிவிப்பு..!


ஆன்மிக, கலாசார தலைநகராக தமிழ்நாடு உள்ளது: ஆளுநர் ஆர்.என். ரவி புகழாரம்..!