தமிழக ஆளுநர் ஆர்.என்.ரவி கடந்த 1-ந் தேதி தமிழக சட்டமன்றத்தில் ஒருமனதாக நிறைவேற்றிய நீட் தேர்வில் இருந்து விலக்கு கோரும் மசோதாவை திருப்பி அனுப்பினார். இந்த விவகாரம் பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியதைத் தொடர்ந்து, சென்னை, தலைமைச் செயலகத்தில் அமைந்துள்ள பேரவை வளாகத்தில் இன்று சிறப்பு சட்டமன்ற கூட்டத்தொடர் கூடியது. இந்த கூட்டத்தில், தமிழ்நாட்டிற்கு நீட் தேர்வில் இருந்து விலக்கு அளிக்க வேண்டும் என்று ஒருமனதாக தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.





முன்னதாக, தமிழ்நாடு சட்டமன்ற கூட்டத்தொடர் இன்று காலை தொடங்கியது. கூட்டம் தொடங்கியதும் பேரவைத் தலைவர் கூட்டம் தொடங்கியதற்கான காரணத்தை விளக்கமாக கூறினார். மேலும், ஆளுநர் பேரவைத் தலைவரான தமக்கு எழுதிய கடிதத்தின் தமிழாக்கத்தை அவை உறுப்பினர்களுக்கு படித்து காட்டினார். அதேசமயத்தில், பேரவையின் மரபின்படி உறுப்பினர்கள் ஆளுநர் திருப்பி அனுப்பிய நீட் விலக்கு சட்ட முன்வடிவு பற்றி மட்டுமே பேச வேண்டும் என்றும், ஆளுநரை பற்றி அவதூறாக பேச கட்டாயம் அனுமதிக்கப்படமாட்டாது என்று கூறினார்.


மேலும் படிக்க : TN Assembly Special Meeting: இதை 2019-இல் நீங்க செஞ்சுருக்கலாம்.. விஜயபாஸ்கருக்கு பதிலளித்த நிதியமைச்சர் பிடிஆர்


பின்னர், பேரவையில் சுகாதாரத்துறை அமைச்சர் மா.சுப்பிரமணியன் புதிய நீட் விலக்கு சட்டமுன்வடிவை அறிமுகப்படுத்தி பேசினார். அப்போது, அவர் ஆளுநர் தமிழக அரசு நிறைவேற்றி அனுப்பிய சட்டமுன்வடிவை உயர்மட்டக்குழுவின் அறிக்கை என்று கூறுவது அவமதிக்கும் செயல் என்று பேசினார். தமிழக அரசின் நீட் விலக்கு மசோதாவிற்கு முழு ஆதரவு அளிப்போம் என்றும், புதிய நீட் விலக்கு மசோதாவை ஆதரித்தும் அ.தி.மு.க., காங்கிரஸ், இந்திய கம்யூனிஸ்டு, மார்க்சிஸ்டு, ம.தி.மு.க., பா.ம.க., வி.சி.க, இந்திய யூனியன் முஸ்லீம் லீக், மனிதநேய மக்கள் கட்சி, கொங்குநாடு கட்சி, தமிழர் வாழ்வுரிமை கட்சி, புதிய பாரதம் ஆகிய சட்டமன்றத்தில் பங்குபெற்ற (பா.ஜ.க. தவிர)  அனைத்து கட்சிகளும் இந்த புதிய சட்ட முன்வடிவிற்கு ஆதரவு அளித்தன.




ஆனால், மத்தியில் ஆளுங்கட்சியான பா.ஜ.க.வைச் சேர்ந்த உறுப்பினர்கள் நயினார் நாகேந்திரன் தலைமையில் இந்த மசோதாவிற்கு எதிர்ப்பு தெரிவித்து வெளிநடப்பு செய்தனர். சட்டப்பேரவையில் 4 பா.ஜ.க. உறுப்பினர்கள் மட்டுமே இடம்பெற்றுள்ளதாலும், அவர்கள் நான்கு பேரும் வெளிநடப்பு செய்துவிட்டதாலும் சட்டப்பேரைவையில் இந்த தீர்மானம் ஒருமனதாக நிறைவேறியதாக சபாநாயகர் அப்பாவு பேசினார். மேலும், இந்த புதிய நீட் விலக்கு புதிய மசோதா இன்றே ஆளுநருக்கு அனுப்பி வைக்கப்படும் என்றும் சபாநாயகர் அப்பாவு கூறினார். இந்த நீட் விலக்கு புதிய சட்டமுன்வடிவு குறித்து பேரவையில் பேசிய முதல்வர், நீட் தேர்வு மாணவர்களை கொல்கிறது. அது மாணவர்களின் பலிபீடம் என்றும் பேசினார்.


மேலும் படிக்க : TN Assembly Special Meeting: ‛நீங்க வெளிநடப்பு செய்யுங்க... நாங்க...’ -துரைமுருகன்-நயினார் காரசார விவாதம்!


மேலும் செய்திகளை காண, ABP நாடு செய்திகளை Google News -ல் பின் தொடர இங்கே கிளிக் செய்யவும்


ABP நாடு செய்திகளை சமூக வலைத்தள பக்கங்களிலும் பின் தொடரலாம்


பேஸ்புக் பக்கத்தில் தொடர


ட்விட்டர் பக்கத்தில் தொடர


யூட்யூபில் வீடியோக்களை காண