நீட் விலக்கு மசோதா தொடர்பாக தமிழ்நாடு சட்டப்பேரவையில் சிறப்புக் கூட்டம் இன்று நடைபெற்று வருகிறது. அதில் முதலில் சபாநாயகர் அப்பாவு இந்த மசோதாவை ஆளுநர் திருப்பி அனுப்பியது தொடர்பாக பேசினார். அதன்பின்னர் மீண்டும் மருத்துவத்துறை அமைச்சர் மா.சுப்ரமணியன் மீண்டும் இந்த மசோதா குறித்து பேசினார். அதைத் தொடர்ந்து திமுகவின் கூட்டணி கட்சிகளின் தலைவர்கள் பேசினார்கள். அதன்பின்னர் அதிமுகவைச் சேர்ந்த விஜயபாஸ்கர் பேசினார். 


அப்போது அவர், “இந்த நீட் விலக்கு மசோதா தொடர்பாக ஆளுநர் உச்சநீதிமன்ற தீர்ப்பை மேற்கோள் காட்டியுள்ளார். ஆகவே இந்த நீட் விலக்கு மசோதாவிற்கு உரிய சட்ட நிபுணர்களுடன் ஆலோசனை பெற்று மீண்டும் நிறைவேற்றினால் நல்லது” எனக் கூறினார். 






அவருக்கு நிதியமைச்சர் பிடிஆர் பழனிவேல் தியாகராஜன் ஒரு பதிலளித்தார். அதில், “நீங்கள் முறையாக சட்ட நிபுணர்களின் ஆலோசனையை பெற்று இந்த மசோதாவை நிறைவேற்ற வேண்டும் என்று கூறுகிறீர்கள். அப்படி 2019ஆம் ஆண்டு நீங்கள் நீட் விலக்கு தொடர்பாக ஒரு மசோதாவை நிறைவேற்றிய போது முறையாக சட்ட நிபுணர்களுடன் ஆலோசனை பெற்று இருந்தால் அந்த மசோதாவே நிறைவேறி இருக்கும்” எனக் கூறினார்.


 




அதன்பின்னர் நீட் தேர்வில் இருந்து விலக்கு கோரும் மசோதா மீண்டும் ஒருமனதாக சட்டப்பேரவையில் நிறைவேற்றப்பட்டது. நீட் விலக்கு மசோதாவிற்கு பாஜக தவிர மற்ற கட்சிகள் அனைத்தும் ஆதரவு அளித்துள்ளன.  நீட் விலக்கு மசோதா இன்றே ஆளுநருக்கு அனுப்பப்படும் என சபாநாயகர் தகவல் வெளியாகியுள்ளது. இந்த மசோதா நிறைவேற்றத்திற்கு பிறகு தமிழ்நாடு சட்டப்பேரவை நாள் குறிப்பிடப்படாமல் ஒத்திவைக்கப்பட்டது. 


மேலும் செய்திகளை காண, ABP நாடு செய்திகளை Google News -ல் பின் தொடர இங்கே கிளிக் செய்யவும்


ABP நாடு செய்திகளை சமூக வலைதள பக்கங்களிலும் பின் தொடரலாம்


பேஸ்புக் பக்கத்தில் தொடர


ட்விட்டர் பக்கத்தில் தொடர


யூடிபில் வீடியோக்களை காண