எதிர்கட்சித் தலைவர் எடப்பாடி பழனிசாமி, சென்னை திருவொற்றியூர் பகுதியில் நலதிட்ட உதவிகள் வழங்கியபின் செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது பேசிய அவர், ”அரசு துறைகள் ஒருங்கிணைந்து செயல்படாததே மழை வெள்ள பாதிப்புக்கு காரணம். பொய் சொல்வதற்கு நோபல் பரிசு கொடுக்க வேண்டுமென்றால் முதல்வருக்கும் அமைச்சர் மா.சுவிற்கு தரலாம். பொய் பேசியதால்தான் திமுக ஆட்சிக்கே வந்திருக்கிறது. உண்மை பேசியிருந்தால் ஆட்சிக்கு வந்திருக்க முடியாது. 


சேலம் திமுக இளைஞரணி மாநாட்டு பணிகளுக்கு செலழித்த நேரத்தை கூட அமைச்சர் கே.என்.நேரு சென்னைக்காக ஒதுக்கவில்லை. மழை நீர் வடிகால் பணிகள் 90% முடிந்துவிட்டதாக முன்னர் சொன்னவர்கள், இப்போது 51% நிறைவடைந்துவிட்டது என்கிறார்கள். 1240 கிலோ மீட்டர் வடிநீர் கால்வாய் பணி தொடங்கப்பட்டது அதிமுக ஆட்சியில்.ஆட்சி மாற்றத்தின் பின்னர் 2 அரை ஆண்டுகள் கிடப்பில் போட்டு,கமிஷன் வாங்குவதிலேயே குறியாக அமைச்சர்கள் இருந்தனர்.


ஒருமாத ஊதியத்தை முதல்வர் வழங்கியதை விட்டு கொள்ளையடுத்ததை மக்களுக்கு செலவு செய்ய சொல்லுங்கள். ஒருமாத சம்பளத்தை மழை வெள்ளத்தில் பாதிக்கப்பட்ட மக்களுக்கு வழங்கும் திமுக அரசு அமைச்சர்கள் கொள்ளையடித்ததை மக்களுக்கு திருப்பி தருவார்களா? மழை காலத்தில் திமுக அரசு மக்களுக்கு செய்த துரோகத்திற்கு நாடாளுமன்றத்தில் டெபாசிட் இழக்கும்.


முதலமைச்சர் சொல்கிறார் இந்தியாவுக்கே வழிகாட்டியான மாநிலாம் தமிழ்நாடாம் எதுல? ஊழல் செய்யுறதுல. கமிஷன், கலக்‌ஷன், கரப்ஷன் செய்வதிலே முதல் இடம். ஆகவே இன்னைக்கு மக்கள் கேட்கிறார்கள் ஐந்தாயிரம் கோடி செலவிட்டிருக்கின்றீர்களே இதில் எவ்வளவு பணிகள் நிறைவேற்றப்பட்டிருக்கிறது, எவ்வளவு பணிகள் பாக்கி இருக்கிறது என்று மக்கள் கேட்கின்றனர். இதில் பெரும் ஊழல் நடந்துள்ளதாக மக்களுக்கு பெரும் சந்தேகம் எழுந்துள்ளது. 


அதிமுக ஆட்சியில் திட்டமிட்டு செயல்பட்டோம். அதிமுக ஆட்சியின் போது பூமிக்கடியில் மின் கேபிள் புதைக்கப்பட்டது.  எவ்வளவு மழை பெய்தாலும், காற்றடித்தாலும் மின் தடை இல்லாமல் வழங்க வேண்டும் என்பதற்காக தான் கேபிள் புதைக்கப்பட்டது. அதையும் சரியான முறையில் பயன்படுத்தவில்லை. 


வடகிழக்கு பருவமழை வருகின்றபோது சென்னை மாநகரம் அவ்வப்போது பாதிக்கப்பட்டிருக்கிறது. இது எல்லோருக்கும் தெரியும். இந்த அரசு என்ன செய்திருக்கனும்? பால் பவுடர்களை பொட்டலம் போட்டு நியாய விலை கடை மூலமாக விநியோகம் செய்திருந்தால் பால் தட்டுப்பாடு ஏற்பட்டிருக்காது. புயல் வரும் என்று இந்திய வானிலை மையம் எச்சரிக்கை கொடுத்தும், இந்த அரசு மெத்தனமாக இருந்த காரணத்தினால் மக்கள் பாதிக்கப்பட்டனர்”. இவ்வாறு அவர் தெரிவித்தார். 


மேலும் படிக்க 


ஜன்னலை உடைத்து வீட்டிற்குள் நுழைந்த காட்டு யானைகள் ; நொடிப்பொழுதில் உயிர் தப்பிய குடும்பம்


Virat Kohli: 9 ஆண்டுகளுக்கு முன்பு இதே நாள்! டெஸ்ட் அணியின் கேப்டனான விராட் கோலி.. அடுக்கப்பட்ட ரெக்கார்ட்ஸ்!


Madurai Mohan: ‘முண்டாசுப்பட்டி’ நடிகர் மதுரை மோகன் காலமானார்.. சோகத்தில் தமிழ் திரையுலகம்!