Madurai Mohan: ‘முண்டாசுப்பட்டி’ நடிகர் மதுரை மோகன் காலமானார்.. சோகத்தில் தமிழ் திரையுலகம்!

Madurai Mohan Passes Away: நடிகர் காளி வெங்கட்டின் பதிவில் ரசிகர்கள் மதுரை மோகனுக்கு இரங்கல் தெரிவித்து வருகின்றனர்

Continues below advertisement

Madurai Mohan: முண்டாசுப்பட்டி திரைப்படத்தில் நடித்த நடிகர் மதுரை மோகன் உடல்நலக் குறைவு காரணமாக இன்று காலமானார். 

Continues below advertisement

விஷ்ணு விஷால் கதாநாயகனாக நடித்த முண்டாசுப்பட்டி, ஹிப் ஹாப் ஆதியின் வீரன், சமுத்திரக்கனியின் வினோதய சித்தம் உள்ளிட்ட பல திரைப்படங்களில் நடித்துள்ள நடிகர் மோகன், இன்று தன் சொந்த ஊரான மதுரையில் உடல்நலக்குறைவு காரணமாக உயிரிழந்தார்.

கடந்த 40 ஆண்டுகளாக தமிழ் சினிமாவில் குணச்சித்திரக் கதாபாத்திரங்களில் நடித்து வந்த மதுரை மோகன் முண்டாசுப்பட்டி படத்தின் மூலம் தான் பிரபலமானார்.

இந்நிலையில் இவரது மறைவுக்கு பிரபல நடிகரும் முண்டாசுப்பட்டி படத்தில் உடன் நடித்தவருமான காளி வெங்கட் தனது எக்ஸ் பக்கத்தில் இரங்கல் தெரிவித்து பதிவிட்டுள்ளார்.
 
“ஐயா நடிகர் மதுரை மோகன் அவர்கள் இன்று காலை உடல்நலக்குறைவால் காலமானார் ஆழ்ந்த இரங்கலும் வருத்தமும். ஏறத்தாழ 40 ஆண்டுகாலமாக தமிழ் சினிமாவில் அடையாளம் காணப்படாத நடிகராக வலம் வந்தவரை “முண்டாசுப்பட்டி” படத்தின்மூலம் வாய்ப்பளித்த இயக்குனர் ராம்குமாருக்கு நன்றி எனப் பதிவிட்டுள்ளார்.

 

இந்நிலையில், காளி வெங்கட்டின் பதிவில் ரசிகர்கள் மதுரை மோகனுக்கு இரங்கல் தெரிவித்து வருகின்றனர்

Continues below advertisement