தமிழ்நாடு மாநில ஒருங்கிணைந்த பள்ளிக்கல்வி திட்ட இயக்குநரின் கடிதத்தில் தெரிவிக்கக்கப்பட்டுள்ளவாறு மாவட்ட வாரியாக தற்போது காலியாக உள்ள 500 ஆசிரியர் பயிற்றுநர் காலிப்பணியிடங்களை அரசு மற்றும் அரசு உதவி பெறும் உயர்நிலை மற்றும் மேல்நிலைப்பள்ளிகளில் உபரி ஆசிரியராகப் பணிபுரியும் ஆசிரியர்களில், பாடவாரியாக திறமையும், அனுபவமும், சேவை மனப்பான்மையும் உள்ள ஆசிரியர்களை தொடர்புடைய மாவட்ட முதன்மைக்கல்வி அலுவலரால் மாற்றுப்பணி வழங்கி காலிப்பணியிடங்களை நிரப்புமாறு பள்ளிக்கல்வி இயக்குனர் உத்தரவு பிறப்பித்துள்ளார்.


இது தொடர்பான அறிக்கையில், “ ஒருங்கிணைந்த பள்ளிக்கல்வியின் கீழ் உள்ள மாநில, மாவட்ட திட்ட அலுவலகங்கள், வட்டார மற்றும் குறுவள மையங்களில் பணிபுரியும் ஆசிரியர் பயிற்றுநர்களுக்கான பணிமாறுதல் வழிகாட்டுதல் நெறிமுறைகள் வழங்கப்பட்டுள்ளது. அவ்வரசாணையில் அரசாணை (நிலை) எண்.96 பள்ளிக்கல்வி (SSA) துறை நாள்.08.07.2014 இன்படி 2014 ஆம் ஆண்டில் நிர்னயிக்கப்பட்ட பணியிடங்களில் பணியாற்றிய 1387 ஆசிரியர் பயிற்றுநர்களில் 2014 ஆம் ஆண்டிற்குப்பின் (887+500 1387 ) பட்டதாரி ஆசிரியகளாக பள்ளிக்கல்வித்துறைக்கு பணிமாறுதலில் மற்றும் பணி உயர்வில் சென்றுள்ளனர் எனவும் இப்பணியிடங்களில் பாடவாரியாக / வட்டார அளவில் தேவையை கணக்கிட்டு தகுதி உள்ள 500 பட்டதாரி ஆசிரியர்களை பணியமர்த்த நடவடிக்கை மேற்கொள்ளப்பட வேண்டும் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.மேலும் இதே போல் ஒவ்வொரு ஆண்டும் பட்டதாரி ஆசிரியர்களாக பணிமாறுதல் செய்யப்படும் பணியிடக்ளுக்கு பாடவாரியாக திறமையும், அனுபவமும், சேவை மனப்பான்மையும் உள்ள ஆசிரியர்களை பணியமர்த்த நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும் எனவும் தெரிவிக்கக்கட்டுள்ளது.


மேற்கண்ட அரசாணைகளின் அடிப்படையில் பணிமாறுதல் மற்றும் பதவி உயர்வில் பள்ளிக்கல்வித்துறைக்கு சென்றுள்ளமையால் இன்னும் நிரப்பப்படாமல் உள்ள ஆசிரியர் பயிற்றுநர் பணியிடங்களை பாடவாரியாக திறமையும், அனுபவமும், சேவை மனப்பான்மையும் உள்ள ஆசிரியர்களை பணியமர்த்திட நடவடிக்கை மேற்கொள்ளுமாறு பார்வை தமிழ்நாடு மாநில ஒருங்கிணைந்த பள்ளிக்கல்வி திட்ட இயக்குநரின் கடிதத்தில் தெரிவிக்கக்கட்டுள்ளது.


எனவே, தமிழ்நாடு மாநில ஒருங்கிணைந்த பள்ளிக்கல்வி திட்ட இயக்குநரின் கடிதத்தில் தெரிவிக்கக்கப்பட்டுள்ளவாறு மாவட்ட வாரியாக தற்போது காலியாக உள்ள ஆசிரியர் பயிற்றுநர் காலிப்பணியிடங்களை அரசு மற்றும் அரசு உதவி பெறும் உயர்நிலை மற்றும் மேல்நிலைப்பள்ளிகளில் உபரி ஆசிரியராகப் பணிபுரியும் ஆசிரியர்களில், பாடவாரியாக திறமையும், அனுபவமும், சேவை மனப்பான்மையும் உள்ள ஆசிரியர்களை தொடர்புடைய மாவட்ட முதன்மைக்கல்வி அலுவலரால் மாற்றுப்பணி வழங்கி காலிப்பணியிடங்களை நிரப்புமாறு அனைத்து அறிவுறுத்தப்படுகிறது”  குறிப்பிடப்பட்டுள்ளது.  


Lollu Sabha Jeeva: இஷ்டத்துக்கு அடித்துவிட்ட லொள்ளு சபா ஜீவா.. மாமிசம் சாப்பிட்டா இப்படியெல்லாம் நடக்குமா? அறிவியல் சொல்வது என்ன?


Diwali Crackers: பட்டாசு வெடிக்க கட்டுப்பாடு...உச்சநீதிமன்றம் கிடுக்குப்பிடி...ரூல்ஸை தெரிஞ்சுக்கோங்க..!


Cauvery Issue: காவிரி விவகாரம், கோரிக்கையை நிராகரித்த உச்சநீதிமன்றம்? தமிழக அரசின் அடுத்த மூவ் என்ன?