இன்று வெளியான வானிலை அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது:


இன்று முதல் ( மார்ச் 5) முதல் வரும் 11ஆம் தேதி வரை : தமிழகம், புதுவை  மற்றும் காரைக்கால் பகுதிகளில் வறண்ட வானிலை நிலவக்கூடும்.


அதிகபட்ச வெப்பநிலை : 


இன்றும் ( மார்ச் 5) நாளையும்: தமிழகத்தில்  ஓரிரு  இடங்களில்  அதிகபட்ச   வெப்பநிலை இயல்பை விட 2 முதல் 3 டிகிரி செல்சியஸ் அதிகமாக  இருக்கக்கூடும். அதிக வெப்பநிலை மற்றும் அதிக ஈரப்பதம் இருக்கும் பொழுது  அசௌகரியம் ஏற்படலாம்.


சென்னை மற்றும் புறநகர் பகுதிகளுக்கான வானிலை முன்னறிவிப்பு:


அடுத்த 48 மணி நேரத்திற்கு வானம் ஓரளவு மேகமூட்டத்துடன் காணப்படும். அதிகபட்ச வெப்பநிலை 33-34 டிகிரி செல்சியஸை ஒட்டியும், குறைந்தபட்ச வெப்பநிலை 23-24 டிகிரி செல்சியஸை ஒட்டியும்  இருக்கக்கூடும். 



கடந்த 24 மணி நேரத்தில் பதிவான மழை அளவு (சென்டிமீட்டரில்):  ஏதுமில்லை.



மீனவர்களுக்கான எச்சரிக்கை: ஏதுமில்லை.


தமிழகத்தில் கடந்த சில திங்களாகவே வெயிலின் தாக்கம் அதிகரித்து காணப்படுகிறது. நேற்று தமிழகத்தில் இரண்டு இடங்களில் வெயில் சதம் அடித்தது. ஈரோட்டில் 102.2 டிகிரி பாரன்ஹீட், பரமத்தி வேலூரில் 100.4 பாரன்ஹீட் வெப்பம் பதிவாகியது. 


சென்னையில் அதிகபட்சமாக மீனம்பாக்கத்தில் 34 டிகிரி செல்சியஸும், நுங்கம்பாத்தில் 32.9 டிகிரி செல்சியஸும் பதிவானது. இந்நிலையில் அடுத்த சில நாட்களுக்கு வறண்ட வானிலையே இருக்கக்கூடும் என வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.  


மார்ச் மாதம் தொடங்கிய ஆரம்பத்திலேயே வெப்பநிலை சதம் அடித்துள்ளதால் வரும் நாட்களில் வெப்பநிலையின் தீவிரம் கடுமையாக  இருக்கும் என்று எதிர்பார்க்கப்படுகின்றது. 


 


மேலும் படிக்க 


7 கட்டங்களாக நடத்தப்படும் நாடாளுமன்றத் தேர்தல்: மார்ச் 14,15ல் வெளியாகிறது தேதி அட்டவணை?


Kanimozhi: தூத்துக்குடி தொகுதியில் மீண்டும் போட்டி.. விருப்ப மனுவை தாக்கல் செய்தார் கனிமொழி..!


Gold, Silver Price: அடேங்கப்பா..! தங்கம் விலை சென்னையில் புதிய உச்சம் - ஒரு கிராம் ரூ.6,015-க்கு விற்பனை