Gold, Silver Price: சென்னையில் ஆபரண தங்கத்தின் விலை புதிய உச்சத்தை எட்டியது.


சென்னையில் தங்கம் விலை புதிய உச்சம்:


அதன்படி, நேற்று ஒரு கிராம் ஆபரண தங்கம் 5 ஆயிரத்து 930 ஆக இருந்த நிலையில், இன்று 85 ரூபாய் உயர்ந்து 6 ஆயிரத்து 15 ரூபாய்க்கு விற்பனை செய்யப்படுகிறது. இதன் மூலம் ஆபரண தங்கத்தின் விலை சவரனுக்கு 680 ரூபாய் அதிகரித்துள்ளது. அதன்படி,  ஒரு சவரன் ஆபரண தங்கத்தின் விலை 46 ஆயிரத்து 720 ரூபாயிலிருந்து 48 ஆயிரத்து 120 ரூபாயாக அதிகரித்துள்ளது. கடந்த நான்கு நாட்களில் மட்டும் தங்கம் விலை சவரனுக்கு ஆயிரத்து 400 ரூபாய் அதிகரித்துள்ளது. சென்னயில் தங்கத்தின் விலை வரலாறு காணாத அளவில் உயர்ந்து இருப்பது, சாதாரண மக்களிடயே பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. வரும் மாதங்களில் ஒரு சவரன் ஆபரண தங்கத்தின் விலை 50 ஆயிரம் ரூபாயை கடக்கும் என வணிக வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.


வெள்ளி விலையும் அதிகரிப்பு:


24 கேரட் ஆபரணத் தங்கத்தின் விலை நேற்று ஒரு கிராம் 6,469 ரூபாயாக இருந்த நிலையில், இன்று 93 ரூபாய் அதிகரித்து 6 ஆயிரத்து 562 ரூபாய்க்கு விற்பனை செய்யப்படுகிறது. அதாவது 51 ஆயிரத்து 752 ரூபாயாக இருந்த ஒரு சவரன் தங்கத்தின் விலை (24 கேரட்) தற்போது 744 ரூபாய் அதிகரித்து 52 ஆயிரத்து 496 ரூபாய் ஆக உள்ளது. இதனிடையே, நேற்று ஒரு கிராம் வெள்ளி 77 ரூபாய்க்கு விற்கப்பட்ட நிலையில், இன்று ஒரு ரூபாய் 20 காசுகள் உயர்ந்து இன்று ரூ.78.20-க்கு விற்பனை செய்யப்படுகிறது. ஒரு கிலோ வெள்ளியின் விலை 78 ஆயிரத்து 200 ரூபாயாக உள்ளது.


கோயம்புத்தூர்


"தென்னிந்தியாவின்  மான்செஸ்டர்" என்றழைக்கப்படும் கோயம்புத்தூரில் (Gold Rate in Coimbatore ) 24 காரட் ஆபரணத் தங்கத்தின் விலை கிராம் ரூ.6,562 ஆகவும், 22 காரட் ஆபரணத் தங்கம் கிராமிற்கு ரூ.6,015 ஆகவும் விற்பனையாகிறது.


மதுரை 


மதுரை நகரில் (Gold Rate In Madurai ) 24 காரட் ஆபரணத் தங்கத்தின் விலை ரூ.6,562 ஆகவும், 22 காரட் ஆபரணத் தங்கம் கிராமிற்கு ரூ.6,015 ஆகவும் விற்பனையாகிறது.


திருச்சி


திருச்சியில் (Gold Rate In Trichy ) 24 காரட் ஆபரணத் தங்கத்தின் விலை கிராம் ஒன்றிற்கு ரூ.6,562 ஆகவும், 22 காரட் ஆபரணத் தங்கம் கிராமிற்கு ரூ.6,015 ஆகவும் விற்பனையாகிறது.


வேலூர் 


வேலூரில் (Gold Rate In Vellore) 24 காரட் ஆபரணத் தங்கத்தின் விலை கிராம் ஒன்றிற்கு ரூ.6,562 ஆகவும், 22 காரட் ஆபரணத் தங்கம் கிராமிற்கு ரூ.6,015 ஆகவும் விற்பனையாகிறது.