இந்தியாவின் மிகப்பெரிய தொழில் நிறுவனம் டாடா குழுமம். டாடா குழுமத்தின் தலைவராக தற்போது என்.சந்திரசேகரன் பதவி வகித்து வருகிறார். இந்த நிலையில், அவர் இன்று தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலினை நேரில் சந்தித்து ஆலோசனை நடத்தினார்.


சென்னை, ஆழ்வார்பேட்டையில் உள்ள முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் இல்லத்தில் இந்த சந்திப்பு நடைபெற்றது. இந்த சந்திப்பின்போது. முதலமைச்சருடன் தொழில்துறை அமைச்சர் தங்கம் தென்னரசு, விளையாட்டுத் துறை அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் ஆகியோர் உடனிருந்தனர்.




தமிழ்நாட்டை தொழில் வளர்ச்சித்துறையில் முன்னேற்ற மாநில அரசு பல்வேறு முக்கிய நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறது. இந்த நிலையில், நாட்டின் மிகப்பெரிய தொழில் நிறுவனமான டாடா குழுமத்தின் தலைவர் முதலமைச்சரை சந்தித்திருப்பது முக்கியத்துவம் வாய்ந்ததாக கருதப்படுகிறது.


இந்த சந்திப்பின்போது தமிழ்நாட்டில் டாடா குழுமம் முதலீடு செய்வது தொடர்பாகவும். முதலீடுகளை அதிகரிப்பது தொடர்பாகவும், புதிய தொழில் வாய்ப்புகள், வேலைவாய்ப்புகள் அதிகரிப்பு உள்ளிட்டவை குறித்து ஆலோசிக்கப்பட்டிருக்கலாம் என்று எதிர்பார்க்கப்படுகிறது. உலகெங்கிலும் வேலையிழப்பு அபாயம் அதிகரித்துக் கொண்டிருக்கும் நிலையில், டாடா நிறுவனத்தில் பணிக்கு ஆட்கள் சேர்ப்பு மும்முரமாக நடைபெற்று வந்தது என்பது குறிப்பிடத்தக்கது.




கொரோனா பேரிடரின் அடுத்த அலை இந்தியாவை தாக்கும் என்ற அபாயம் உள்ள சூழலில், பொருளாதாரத்தில் மீண்டும் பெரிய பாதிப்பு  ஏற்படும் என்ற அச்சம் ஏற்பட்டுள்ளது. இந்த சூழலில், விரைவில் தமிழ்நாடு சட்டமன்றத்தில் நிதிநிலை அறிக்கையை தாக்கல் செய்யப்பட உள்ளது. இந்த நிலையில், முதலமைச்சர் – டாடா குழுமத் தலைவர் சந்திப்பு நிகழ்ந்திருப்பதால் நிதிநிலை அறிக்கையில் தொழில்துறை அறிவிப்பில் முக்கியத்துவம் வாய்ந்த அறிவிப்புகள் வெளியாகும் என்று எதிர்பார்க்கலாம்.


பிரதமர் மோடி தலைமையிலான மத்திய அரசும் விரைவில் தங்களது நிதிநிலை அறிக்கையை தாக்கல் செய்ய உள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.


மேலும் படிக்க: Officers Promotion and Transfer : பள்ளிக்கல்வித்துறை ஆணையர் நந்தகுமார் உட்பட 40-க்கும் மேற்பட்ட ஐஏஎஸ் அதிகாரிகளுக்கு பதவி உயர்வு - தமிழக அரசு அதிரடி..


மேலும் படிக்க: Special Buses : தொடர் விடுமுறை...வெளியூர்களில் இருந்து சென்னை திரும்பும் பயணிகளுக்காக சிறப்பு பேருந்துகள்... முழு விவரம்..


மேலும் படிக்க: