வெளியூர்களில் பணியாற்றுபவர்கள் பண்டிகை காலங்களில் சொந்து ஊர்களுக்கு செல்வது என்பது வழக்கமான ஒன்றுதான். அதன்படி பள்ளி மாணவர்களுக்கு அரையாண்டு, கிறிஸ்துமஸ், புத்தாண்டு விடுமுறை இன்று முடிவடைகிறது. 10 நாட்களுக்கு பின், நாளை வழக்கம் போல் பள்ளிகள் திறக்கப்படுகின்றன. இதனால் சொந்த ஊர்களுக்கு சென்றுள்ள உள்ளவர்கள் சென்னைக்கு திரும்புவார்கள். இதற்கு ஏதுவாக இன்றும், நாளையும் சிறப்பு பேருந்துகளை இயக்கப்படுகின்றன.
சிறப்பு பேருந்துகள்
வெளியூர்களில் இருந்து வழக்கமாக சென்னைக்கு 2,100 பேருந்துகள் இயக்கப்படும். விடுமுறை நாட்கள் முடிந்து சென்னை திரும்பும் பயணிகளின் வசதிக்காக இன்றும், நாளையும் சிறப்பு பேருந்துகள் இயக்கப்படுகின்றன. அதன்படி, திருநெல்வேலி, நாகர்கோவில், தூத்துக்குடி, மதுரை, திருச்சி, விழுப்புரம், திருவண்ணாமலை, கும்பகோணம், தஞ்சாவூர், சேலம், கோவை, திருப்பூர், ஈரோடு, ஓசூர், பெங்களூர் உள்ளிட்ட பல்வேறு பகுதிகளில் இருந்து சென்னைக்கு இன்று 600 சிறப்பு பேருந்துகளும், நாளை 600 சிறப்பு பேருந்துகளும் இயக்கப்பட உள்ளன.
இதை தவிர, கோயம்புத்தூர், புதுச்சேரி ஆகிய முக்கிய நகரங்களுக்கு தினசரி இயக்கக் கூடிய பேருந்துகளுடன், கூடுதல் தேவைக்கேற்ப சிறப்பு பேருந்துகள் இயக்க அனைத்து போக்குவரத்து கழகங்களும் திட்டமிட்டுள்ளன. அனைத்து முக்கிய பேருந்து நிலையங்களிலும் போதிய அதிகாரிகள் நியமிக்கப்பட்டு பொதுமக்களின் பயணங்களுக்கு உரிய ஏற்பாடுகள் செய்ய தகுந்த உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.
600 சிறப்பு பேருந்துகள்
இது குறித்து போக்குவரத்துறை வெளியிட்டு செய்தி குறிப்பில் கூறியிருப்பதாவது, "ஆங்கிலப் புத்தாண்டு மற்றும் அரையாண்டு தொடர் விடுமுறை முடிந்து பயணிகள் சொந்த ஊர்களில் இருந்து சென்னை திரும்ப வசதியாக, சிறப்புப் பேருந்துகளை இயக்குதல் அடிப்படையில் இன்று, நாளை வரை திருநெல்வேலி, நாகர்கோவில், மதுரை, கோயம்புத்தூர், ஈரோடு, சேலம் மற்றும் திருச்சி ஆகிய முக்கிய நகரங்களிலிருந்து சென்னைக்கு தினசரி இயக்கக்கூடிய பேருந்துகளுடன் 600 பேருந்துகள் கூடுதலாக இயக்கப்படும்.
இது தவிர கோயம்புத்தூர், ஈரோடு, புதுச்சேரி ஆகிய முக்கிய நகரங்களுக்கு. தினசரி இயக்கக் கூடிய பேருந்துகளுடன், கூடுதல் தேவைக்கேற்ப சிறப்பு பேருந்துகள் இயக்க அனைத்து போக்குவரத்துக் கழகங்களும் திட்டமிட்டுள்ளன. அனைத்து முக்கிய பேருந்து நிலையங்களிலும் போதிய அதிகாரிகள் நியமிக்கப்பட்டு பொதுமக்களின் பயணங்களுக்கு உரிய ஏற்பாடுகள் செய்ய தகுந்த உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது. மேலும், இச்சிறப்பு பேருந்துகளுக்கு www.tnstc.in. மற்றும் tnstc official app ஆகிய இணையதளங்களின் மூலமாக இருபுறமும் முன்பதிவு செய்து பயணிக்க வழிவகை செய்யப்பட்டுள்ளது. எனவே. பொதுமக்கள் இந்த சேவையினை முழுமையாக பயன்படுத்திக் கொள்ளுமாறு கேட்டுக் கொள்ளப்படுகிறார்கள்” என்று குறிப்பிடப்பட்டுள்ளது.
மேலும் படிக்க
TN Ration Shop: ரேஷன் கடைகளில் அரிசிகளுக்கு தனித்தனி ரசீது.. தமிழகத்தில் இன்று முதல் அமல்..!