தமிழ்நாட்டில் மாவட்ட 11 டாஸ்மாக் மேலாளர்கள் திடீர் பணியிடமாற்றம் செய்யப்பட்டுள்ளனர். அவர்கள் எங்கெங்கு மாற்றம் செய்யப்பட்டுள்ளன என்பது குறித்த பட்டியலும் வெளியாகியுள்ளது.


அதன்படி, திருநெல்வேலி டாஸ்மாக் மேலாளராக இருந்த ஷியாம் சுந்தர் கடலூர் மாவட்டத்திற்கு மாற்றப்பட்டுள்ளார். திண்டுக்கல் மாவட்ட மேலாளர் அய்யப்பன் கிருஷ்ணகிரி மாவட்டத்திற்கும், வடக்கு காஞ்சிபுரம் மேலாளர் மகேஷ்வரி தர்மபுரிக்கும், காஞ்சிபுரம் தெற்கு மேலாளர் கந்தன், திருநெல்வேலி மாவட்டத்திற்கும் மாற்றம் செய்யப்பட்டுள்ளனர்.






இதேபோல், கடலூர் மாவட்ட மேலாளராக இருந்த ரவிகுமார், விருதுநகர் மாவட்டத்திற்கு மாற்றம் செய்யப்பட்டுள்ளார். ராமநாதபுரம் மேலாளராக இருந்த ரவிச்சந்திரன், திண்டுக்கல் மாவட்டத்திற்கும், கிருஷ்ணகிரி மாவட்ட மேலாளராக இருந்த புஷ்ப லதா காஞ்சிபுரம் வடக்கு மாவட்டத்திற்கும் மாற்றப்பட்டுள்ளனர். தர்மபுரி மாவட்ட மேலாளர் கேசவன், வடக்கு காஞ்சிபுரம் மாவட்டத்திற்கு மாற்றப்பட்டுள்ளார். அரக்கோணம் மேலாளர் முருகன், தூத்துக்குடி மாவட்டத்திற்கும், விருதுநகர் மாவட்ட மேலாளராக இருந்த செங்கிழன், அரக்கோணம் மாவட்டத்திற்கும், தூத்துக்குடி மாவட்ட மேலாளர் அய்யப்பன் ராமநாதபுரம் மாவட்டத்திற்கும் மாற்றம் செய்யப்பட்டுள்ளனர்.


சன் டிவி ஓனரு.. ஜெயலலிதா சொந்தக்காரர்.. ஜாக்குலினை சுகேஷ் நெருங்கியது எப்படி?


மேலும் செய்திகளை காண, ABP நாடு செய்திகளை Google News -ல் பின் தொடர இங்கே கிளிக் செய்யவும்


ABP நாடு செய்திகளை சமூக வலைத்தள பக்கங்களிலும் பின் தொடரலாம்


பேஸ்புக் பக்கத்தில் தொடர


ட்விட்டர் பக்கத்தில் தொடர


யூட்யூபில் வீடியோக்களை காண