TN Weather Update: தமிழ்நாடு, புதுச்சேரியில் அடுத்த இரண்டு நாட்களுக்கு வெப்பநிலை  அதிகரிக்கும் என வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.


இதுதொடர்பாக சென்னை வானிலை ஆய்வு மையம் வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது, 


16.04.2023 முதல் 19.04.2023 வரை: தமிழ்நாடு மற்றும் புதுவை, காரைக்கால் பகுதிகளில் வறண்ட வானிலை நிலவக்கூடும்.


20.04.2023: தமிழ்நாடு மற்றும் புதுவை, காரைக்கால் பகுதிகளில் ஓரிரு இடங்களில் லேசானது / மிதமான மழை  பெய்யக்கூடும்.






அதிகபட்ச வெப்பநிலை : 


16.04.2023 மற்றும் 17.04.2023: தமிழ்நாடு மற்றும் புதுவையில் ஒருசில இடங்களில் அதிகபட்ச வெப்பநிலை இயல்பிலிருந்து 2 - 3 டிகிரி செல்சியஸ்  அதிகமாக இருக்கக்கூடும்.


சென்னை மற்றும் புறநகர் பகுதிகளுக்கான வானிலை முன்னறிவிப்பு:


அடுத்த 48 மணி நேரத்திற்கு வானம் ஓரளவு மேகமூட்டத்துடன் காணப்படும். அதிகபட்ச வெப்பநிலை 37-38 டிகிரி செல்சியஸ் மற்றும் குறைந்தபட்ச வெப்பநிலை 26-27 டிகிரி செல்சியஸ் அளவில் இருக்கக்கூடும். 


கடந்த 24 மணி நேரத்தில் பதிவான மழை அளவு (சென்டிமீட்டரில்):  ஏதுமில்லை என்று வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.


மீனவர்களுக்கான எச்சரிக்கை:  ஏதுமில்லை என்று வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.


கொளுத்தும் வெயில்


நடப்பாண்டு பிப்ரவரி மாத தொடக்கத்தில் இருந்தே தமிழகத்தில் வெயில் அதிகரிக்க தொடங்கியது.  கொளுத்தும் வெயில் காரணமாக சாலைகளில் அனல் காற்று வீசுகிறது. இதனால் வாகன ஓட்டிகள் மிகுந்த சிரமத்திற்கு ஆளாகின்றனர். சாலையில் நடந்து செல்லும் பொதுமக்கள் குடைபிடித்தபடியும், முகத்தில் துணிகளை கட்டிக்கொண்டும், பள்ளி- கல்லூரி மாணவிகள், பெண்கள் துப்பட்டா மற்றும் புடவையால் தலையில் போர்த்தியபடியும் செல்கின்றனர்.


மூத்த குடிமக்கள் பலரும் வெளியே தலைகாட்ட முடியாமல் வீட்டிற்குள்ளேயே முடங்குகின்றனர். நண்பகல் நேரங்களில் பல பகுதிகளில் மக்கள் நடமாட்டம் குறைந்து சாலைகள் வெறிச்சோடி காணப்படுகின்றன.  இந்நிலையில், கடந்த 24 மணி நேரத்தில் அதிகபட்சமாக சேலம் மாவட்டத்தில் 40.8 டிகிரி செல்சியஸ் வெப்பநிலை பதிவாகியுள்ளது குறிப்பிடத்தக்கது.




மேலும் படிக்க


TN Corona: அச்சுறுத்தும் கொரோனா; ராணிப்பேட்டையில் இனி மாஸ்க் கட்டாயம் - மாவட்ட ஆட்சியர் அதிரடி உத்தரவு...!


Arvind Kejriwal: சி.பி.ஐ. விசாரணைக்கு நேரில் ஆஜரான அரவிந்த் கெஜ்ரிவால்..! ஆம் ஆத்மி போராட்டம்..! டெல்லியில் பதற்றம்..!