TN Corona : கடந்த சில வாரங்களாக கொரோனா தொற்று அதிகரித்து வரும் நிலையில், ராணிப்பேட்டை மாவட்டத்தில் பொது இடங்களில் முகக்கவசம் அணிவது கட்டாயம் என அறிவிக்கப்பட்டுள்ளது.


500-ஐ தாண்டிய பாதிப்பு


தமிழ்நாடு உள்ளிட்ட பல மாநிலங்களில் கொரோனா பாதிப்புகள் கடந்த சில வாரங்களாக அதிகரித்துள்ளது. குறிப்பாக தமிழ்நாட்டில் தினசரி கொரோனா பாதிப்பு நேற்று மீண்டும் 500-ஐ தாண்டியுள்ளது. கடந்த 10 நாட்களுக்கு முன் தினசரி பாதிப்பு 300க்கும் கீழ் இருந்த நிலையில் தற்போது அது 500-ஐ தாண்டியுள்ளது.


நேற்றைய தினம் தமிழ்நாட்டில் 502 பேருக்கு புதிதாக கொரோனா தொற்று பாதிப்பு உறுதி செய்யப்பட்டுள்ளது. இதனால்  தொற்று பாதித்து சிகிச்சை பெறுவோரின் எண்ணிக்கை 3,048 ஆக உயர்ந்துள்ளது. மேலும் 329 பேர் கொரோனாக்கான சிகிச்சை பெற்று வீடு திரும்பியுள்ளனர். இதன் மூலம் இதுவரை கொரோனாவில் இருந்து குணமடைந்தவர்களின் எண்ணிக்கை 35,60,598ஆக உயர்ந்துள்ளது.


அதேபோல் கடந்த சில நாட்களாக கொரோனா காரணமாக உயிரிழப்புகள் எதுவும் இல்லாமல் இருந்த நிலையில், நேற்றைய தினம் ஒருவர் கொரோனாவால் உயிரிழந்துள்ளனர் என தமிழ்நாடு சுகாதார துறை தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. திருப்பூர் மாவட்டத்தில் ஒருவர் நேற்று கொரோனாவால் உயிரிழந்துள்ளார். இதனால் தமிழ்நாட்டில் உயிரிழந்தவர்களின் மொத்த எண்ணிக்கை 38,055ஆக பதிவாகி உள்ளது.


மாவட்ட வாரியாக பார்த்தால், செங்கல்பட்டில் 28 பேர் கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டுள்ளனர். சென்னையில் மொத்தம் 136 பேர் கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டுள்ளனர். தமிழ்நாட்டில் தொற்று பரவும் சதவீதம் மெதுவாக உயர்ந்து வருகிறது. மார்ச் மாதம் தொற்று சதவீதம் 10% கீழ் இருந்த நிலையில், செங்கல்பட்டில் – 11.5%, கன்னியாகுமரி – 11.4%, சென்னை – 10.2%, திருச்சி – 9.3%, திருவள்ளூர் – 10.5%, ராணிபேட்டை – 9.5%, கோவை – 11.2%, திருவண்ணாமலை – 9.1 % ஆக பதிவாகியுள்ளது.


முகக்கவசம் கட்டாயம்


இந்நிலையில், ராணிப்பேட்டை மாவட்டத்தில் பொது இடங்களில் முகக்கவசம் அணிவது கட்டாயம் என  மாவட்ட ஆட்சியர் வளர்மதி அறிவித்துள்ளார். மேலும் அவர் கூறியதாவது, தனிமனித இடைவெளியை கடைபிடிப்பதுடன் அவ்வப்போது கிருமிநாசியை கொண்டு கைகளை சுத்தம் செய்ய வேண்டும்.


காய்ச்சல், உடல் சோர்வு, தலை வலி, உடல் வலி, தொண்டை வலி இருந்தால் மருத்துவமனைக்கு செல்ல வேண்டும். கொரோனா தொற்று இருப்பது உறுதி செய்யப்பட்டால், அதில் இருந்து குணமடையும் வரை தனிப்படுத்திக் கொள்ள வேண்டும் என மாவட்ட ஆட்சியர் வளர்மதி அறிவுறுத்தியுள்ளார். 




மேலும் படிக்க


India Corona Update: 24 மணிநேரத்தில் 10,093 பேருக்கு பாதிப்பு..! 23 பேர் உயிரிழப்பு...! இந்தியாவில் கொரோனா நிலவரம் என்ன?


Amarnath Yatra 2023: பக்தர்களே... புகழ்பெற்ற அமர்நாத் யாத்திரைக்கு செல்ல நாளை முதல் முன்பதிவு ஆரம்பம்..!