திருவாரூர் மாவட்டம், முத்துப்பேட்டை பேரூராட்சிக்கு உட்பட்ட அணைத்து பகுதிகளில் சமீப காலமாக நாய்கள் தொல்லை அதிகரித்து உள்ளது. இதனால் நகரம் முழுவதும் நூற்றுக்கணக்கான நாய்கள் கடைத்தெரு மற்றும் குடியிருப்புகளின் தெருக்களில் கூட்டம் கூட்டமாக பொதுமக்களையும், குழந்தைகளையும் விரட்டி அச்சுறுத்தி வருகிறது.
வாகனங்களில் செல்பவர்களை துரத்தி சென்று ஓட்டுபவர்களின் கவனத்தை திசை திருப்பி அதனால் விபத்துக்களும் ஏற்பட்டு வருகிறது. அதேபோல் அடிக்கடி டூவிலர்களில் செல்பவர்களை குறுக்கே வரும் நாய்கள்
மீது மோதி விபத்துக்குள்ளாகி பாதிக்கப்பட்டு வருகின்றனர். மேலும் நாய்களின் சிலவைகள் வெறி பிடித்து
காணப்பட்டதால் ஏராளமான மாடுகள், ஆடுகளை கடித்து குதறி சாகடித்து வருகிறது.
அதேபோல் நோய்வாய்ப்பட்ட நாய்கள் ஏராளமானவையும் நகரில் சுற்றி திரிகிறது. இதனால் மக்களுக்கு பல்வேறு வியாதிகளை பரப்பும் அபாயமும் உள்ளது. இதனால் நாளுக்கு நாள் நாய்களின் தொல்லையால்
முத்துப்பேட்டை மக்கள் பெரிதும் அவதிக்குள்ளாகி வருகிறார்கள். சில தினங்களுக்கு முன்பு ஒரு சாலையில் நடந்து சென்ற ஒரு இளைஞரை ஒரு நாய் கடிக்க நீண்டதூரம் துரத்தி சென்றது அதர்ச்சியை ஏற்படுத்தியது. இந்த
வீடியோ சமூக வலைத்தளத்தில் பரவி பரபரப்பை ஏற்படுத்தியது. இப்படி தொடர்ச்சியாக மக்களை அச்சுறுத்தி வரும் நாய்களை பேரூராட்சி நிர்வாகம் இனியும் காலதாமதம் ஏற்ப்படுத்தாமல் பிடித்து அப்புறப்படுத்த உரிய நடவடிக்கை எடுக்கவேண்டும் என இப்பகுதி மக்கள் கோரிக்கை விடுத்து வருகின்றனர்.
இந்தநிலையில், முத்துப்பேட்டை பேரூராட்சி 1-வது வார்டு தெற்குகாடு பகுதியில் சுற்றித்திரிந்த வெறி நாய் ஒன்று அப்பகுதியை சேர்ந்த ராகுல், நந்தினி, நாகம்மாள், கண்ணன், வடுவம்மாள், முத்து ஆகிய 6 பேரை கடித்து குதறியது. இதனையடுத்து காயம் அடைந்த 6 பேரும் அடுத்தடுத்து மருத்துவமனையில் சேர்க்கப்பட்டனர். அதேபோல் அப்பகுதியை சேர்ந்தவர்களின் இரண்டு ஆடுகளை அந்த வெறி நாய் கடித்து குதறி படுகாயம் ஏற்பட்டது. அதேபோல் அப்பகுதியை சேர்ந்த சாவித்திரி என்பவரது வீட்டில் வளர்த்த இரண்டு கோழிகளை கடித்து குதறி சாகடித்து. இதனால் அப்பகுதி மக்கள் பலரும் வெறி நாய்க்கு பயந்து வீட்டை விட்டு வெளியே வர வில்லை. தற்போது இப்பகுதியில் கடுமையான வெயில் காணப்படுகிறது.
இதன் மூலம் மேலும் சுற்றித்திரியும் நாய்களும் வெறி பிடிக்க வாய்ப்புகள் உள்ளது அதனால் இனி இதுப்போன்ற சம்பவம் தொடராமல் பேரூராட்சி நிர்வாகம் உடன் துரித நடவடிக்கை எடுக்க வேண்டும் என தெற்குகாடு பகுதியை சேர்ந்த மருது ராஜேந்திரன் மற்றும் அப்பகுதி மக்கள் கோரிக்கை விடுத்தனர்.