TN Weather Update : தமிழ்நாட்டில் 21 மாவட்டங்களில் கனமழைக்கு வாய்ப்பு! உங்க மாவட்டம் லிஸ்ட்ல இருக்கா?

தமிழ்நாட்டில் இன்று 21 மாவட்டங்களில் கனமழைக்கு வாய்ப்பு இருப்பதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தகவல் தெரிவித்துள்ளது.

Continues below advertisement

தமிழ்நாட்டில் கடந்த சில நாட்களாக மழை பெய்து வருகிறது. இந்த நிலையில், தமிழ்நாட்டில் இன்றும் 21 மாவட்டங்களில் கனமழைக்கு வாய்ப்பு இருப்பதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தகவல் தெரிவித்துள்ளது.

Continues below advertisement

சென்னை வானிலை ஆய்வு மையம் வெளியிட்ட செய்திக்குறிப்பின்படி, இன்று நீலகிரி, ஈரோடு, கோவை, திருப்பூர், தேனி, திண்டுக்கல், மதுரை, கரூர், திருச்சி, நாமக்கல், சேலம், தருமபுரி, கிருஷ்ணகிரி, வேலூர், திருப்பத்தூர், ராணிப்பேட்டை, திருவண்ணாமலை, கள்ளக்குறிச்சி, தென்காசி, திருநெல்வேலி, கன்னியாகுமரி மாவட்டங்களில்  ஓரிரு இடங்களில் கனமழை பெய்ய வாய்ப்புள்ளது.


தமிழ்நாட்டில் நாளை ( 6-ந் தேதி) நீலகிரி, கோவை, தென்காசி, திருநெல்வேலி, கன்னியாகுமரி மாவட்டங்களில் கனமழை முதல் மிக கனமழையும் ஈரோடு, திருப்பூர், தேனி, திண்டுக்கல், மதுரை, கரூர், திருச்சி, நாமக்கல், சேலம், தர்மபுரி, கிருஷ்ணகிரி, வேலூர், திருப்பத்தூர், ராணிப்பேட்டை, திருவண்ணாமலை, கள்ளக்குறிச்சி மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் கனமழை பெய்ய வாய்ப்பு உள்ளது,.

7-ந் தேதியான நாளை மறுநாள்  நீலகிரி, கோவை, வேலூர், திருப்பத்தூர், திருவண்ணாமலை, கள்ளக்குறிச்சி பகுதிகளில் கனமழை முதல் மிக கனமழையும்,  ஈரோடு, திருப்பூர், தேனி, திண்டுக்கல், மதுரை, கரூர், திருச்சி, நாமக்கல், சேலம், தருமபுரி, கிருஷ்ணகிரி, ராணிப்பேட்டை, தென்காசி, திருநெல்வேலி, கன்னியாகுமரி மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் கனமழையும் பெய்ய வாய்ப்புள்ளது.


வரும் 8-ந் தேதி நீலகிரி, கோவை, கிருஷ்ணகிரி, ஈரோடு, தருமபுரி, வேலூர், திருப்பத்தூர், ராணிப்பேட்டை, திருவண்ணாமலை ஆகிய மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் கனமழை  பெய்ய வாய்ப்புள்ளது என்று சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. சென்னை வானிலை ஆய்வு மையம் வெளியிட்ட செய்திக்குறிப்பில், சென்னையில் அடுத்த 48 மணி நேரத்திற்கு வானம் ஓரளவு மேகமூட்டத்துடன் காணப்படும் என்றும், ஒரு சில பகுதிகளில் இடி, மின்னலுடன் கூடிய லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும் என்றும் அறிவிக்கப்பட்டுள்ளது.

கர்நாடக மாநிலம் பெங்களூரில் நேற்று இரவு கொட்டித்தீர்த்த கனமழையால் அந்த நகரம் முழுவதும் மழைநீரால் மிதந்து வருகிறது. பல பகுதிகளிலும் வீடுகளுக்குள்ளும், குடியிருப்புகளுக்கும் மழைநீர் புகுந்து பொதுமக்கள் அவதிப்பட்டு வருகின்றனர். 

மேலும் படிக்க : Pakistan Flood : நாட்டையே புரட்டிப்போட்ட பெருவெள்ளம்.. பாகிஸ்தானில் 1300 பேர் உயிரிழப்பு.. 5 லட்சம் பேருக்கு இந்த கதி!!

மேலும் படிக்க : Rohingya : விஸ்வரூபம் எடுக்கும் ரோஹிங்கியா விவகாரம்...இந்தியாவின் உதவியை நாடும் வங்கதேசம்...என்ன நடக்கிறது?

Continues below advertisement
Sponsored Links by Taboola