புலம்பெயர்ந்து வரும் ரோஹிங்கியா இன மக்கள் வங்கதேசத்திற்கு பெரிய சுமையாக மாறியுள்ளனர் என்றும், அவர்கள் தங்கள் தாய்நாட்டிற்கு திரும்புவதை உறுதிசெய்ய சர்வதேச சமூகத்தை அணுகி வருவதாகவும் வங்கதேச பிரதமர் ஷேக் ஹசீனா தெரிவித்துள்ளார்.






இந்த பிரச்னையைத் தீர்ப்பதில் இந்தியாவால் முக்கியப் பங்காற்ற முடியும் என்று அவர் நம்பிக்கை தெரிவித்துள்ளார்.


ஏஎன்ஐ செய்தி நிறுவனத்திறகு அவர் அளித்த பேட்டியில், "வங்கதேசத்தில் லட்சக்கணக்கான ரோஹிங்கியாக்கள் இருப்பது எனது ஆட்சிக்கு சவால்களை உருவாக்கியுள்ளது. உங்களுக்கு தெரியும், எங்களுக்கு இது ஒரு பெரிய சுமை. இந்தியா ஒரு பெரிய நாடு. நீங்கள் இடமளிக்க முடியும் ஆனால் உங்களிடம் அதிக இடம் இல்லை. 


ஆனால், நம் நாட்டில் 1.1 மில்லியன் ரோஹிங்கியாக்கள் உள்ளனர். எனவே, நாங்கள் சர்வதேச சமூகத்துடனும் நமது அண்டை நாடுகளுடனும் ஆலோசனை நடத்தி வருகிறோம். அவர்கள் தாயகம் திரும்புவதற்கு அவர்கள் சில நடவடிக்கைகளை எடுக்க வேண்டும். மனிதாபிமானத்தை மனதில் கொண்டு புலம்பெயர்ந்து வரும் மக்களை பராமரிக்க அரசு முயற்சித்தது.


இந்த ரோஹிங்கியாக்களுக்கு மனிதாபிமான அடிப்படையில் நாங்கள் தங்குமிடம் உள்பட அனைத்தையும் வழங்குகிறோம். இந்த கொரோனா சமயத்தில், அனைத்து ரோஹிங்கியா சமூகத்திற்கும் தடுப்பூசி போட்டோம். ஆனால், எவ்வளவு காலம் அவர்கள் இங்கேயே இருப்பார்கள்? அவர்கள் முகாமில் தங்கியுள்ளனர். 


நமது சுற்றுச்சூழலுக்கு ஆபத்து உள்ளது. அவர்களில் சிலர், போதைப்பொருள் கடத்தல், ஆயுத மோதல்கள், பெண்கள் கடத்தல் ஆகியவற்றில் ஈடுபடுகின்றனர். நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. எனவே அவர்கள் விரைவில் நாடு திரும்புவது நம் நாட்டிற்கும் மியான்மருக்கும் நல்லது. எனவே நாங்கள் அவர்களைப் பின்தொடர எங்களால் முடிந்தவரை முயற்சி செய்து வருகிறோம்.


நாங்கள் அவர்களுடனும், ஏசியான், ஐநா போன்ற சர்வதேச சமூகத்துடனும் இதுகுறித்து ஆலோசனை நடத்தி வருகிறோம். ரோஹிங்கியாக்கள் பல பிரச்சனைகளை எதிர்கொண்ட போது எங்கள் நாடு அவர்களுக்கு அடைக்கலம் கொடுத்தது. ஆனால், இப்போது அவர்கள் தங்கள் நாட்டுக்குத் திரும்பிச் செல்ல வேண்டும். இந்தியா ஒரு அண்டை நாடாக இருப்பதால், அவர்கள் அதில் பெரிய பங்கை வகிக்க முடியும் என நான் உணர்கிறேன்" என்றார்.