மேற்கு திசைக் காற்றின் வேக மாறுபாடு காரணமாக நீலகிரி, கோவை மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் இன்று கனமழை பெய்ய வாய்ப்புள்ளதாக தமிழ்நாடு வானிலை மையம் தெரிவித்துள்ளது.
வட தமிழக மாவட்டங்கள், தேனி, திண்டுக்கல், தென்காசி, திருநெல்வேலி, கன்னியாகுமரி மாவட்டங்களில் இன்று முதல் 3 நாள்களுக்கு மிதமான மழைக்கு வாய்ப்பு உள்ளதாகவும், ஓரிரு இடங்களில் இன்று கனமழை பெய்ய வாய்ப்புள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
மேலும் படிக்க: Friendship Day 2022 Wishes: உலகப்போரால் உருவான நண்பர்கள் தினம்! தோள் கொடுக்கும் தோழமைக்காக ஒருநாள்! வரலாறு இதுதான்!
14.08.2022 முதல் 15.08.2022 வரை தமிழ்நாடு, புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளில் ஒரிரு இடங்களில் இடி மின்னலுடன் கூடிய இடங்களில் லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
கனமழை எச்சரிக்கை காரணமாக மக்கள் அனைவரும் கவனமாக இருக்கும்படி அறிவுறுத்தப்பட்டுள்ளனர். சென்னையை பொறுத்தவரை அடுத்த 48 மணி நேரத்திற்கு ஓரளவு மேகமூட்டத்துடன் காணப்படும். நகரின் ஒருசில இடங்களில் லேசான மழை பெய்யக்கூடும். அதிகபட்ச வெப்பநிலை 36-37 டிகிரி செல்சியஸ் மற்றும் குறைந்தபட்ச வெப்பநிலை 27-28 டிகிரி செல்சியஸ் அளவில் இருக்கக்கூடும்.
அதிகபட்ச வெப்பநிலை 36-37 டிகிரி செல்சியல் மற்றும் குறைந்தபட்ச வெப்பநிலை 27-28 டிகிரி செல்சியஸ் அளவில் இருக்ககூடும்.
அதிகபட்சமாக நடுவட்டம் 13, கூடலூர் பஜார், தேவாலா கலா 11 சென்டிமீட்டர், மேல் கூடலூர் 10, அவலாஞ்சி, குந்தா பாலம் தலா 6 சென்டிமீட்டர் மழையும் பெய்துள்ளது.
மேலும் படிக்க: Crime : வன்கொடுமை.. தலை துண்டிப்பு.. அரசுத் தேர்வுகளுக்கு படித்த பெண்ணுக்கு நடந்த கொடூரம்.. இளைஞனின் பரபரப்பு வாக்குமூலம்
கர்நாடக கடலோர பகுதிகள் மற்றும் அதனை ஒட்டிய மத்திய கிழக்கு அரபிக்கடல் பகுதிகளில் சூறாவளி காற்று மணிக்கு 45 முதல் 55 கிமீட்டர் வேகத்திலும் இடையிடையே 65 கிமீ வேகத்தில் வீசக்கூடும். எனவே மீனவர்கள் இபகுதிகளுக்கு செல்ல வேண்டாம் என்று அறிவுறுத்தப்படுகிறார்கள்.
மேலும் படிக்க:Ponvannan : "காருக்கு அழுவுறாங்க.. மனிதாபிமானம் எங்க இருக்கு?" : பிரதமர் மோடி குறித்து என்ன சொன்னார் நடிகர் பொன்வண்ணன்?
மேலும் செய்திகளை காண, ABP நாடு செய்திகளை Google News -ல் பின் தொடர இங்கே கிளிக் செய்யவும்
ABP நாடு செய்திகளை சமூக வலைத்தள பக்கங்களிலும் பின் தொடரலாம்