அக்னிபத் விமானப்படையில் சேர அக்னி வீரர்களைத் தேர்வு செய்ய நடத்தப்பட்ட தேர்வு முடிவுகள் இன்று வெளியாகின. இதை சரிபார்ப்பது எப்படி என்று பார்க்கலாம். இந்திய ராணுவ வீரர்களைத் தேர்வு செய்வதற்காக, அக்னிபத் என்று இந்தியில் அழைக்கப்படும் ‘அக்னி பாதை’ என்ற புதிய திட்டத்தை பாஜக தலைமையிலான மத்திய அரசு அண்மையில் அறிமுகம் செய்தது. இதற்காக மத்திய அமைச்சரவை, ஜூன் 14-ஆம் தேதி ஒப்புதல் அளித்தது.
அக்னிபாத் திட்டம் என்றால் என்ன?
அக்னி பாதை திட்டத்தின்கீழ் சேரும் வீரர்கள், அக்னி வீரர்கள் (அக்னி வீர்) என்று அழைக்கப்படுவார்கள். இந்த வீரர்கள் மொத்தம் 4 ஆண்டுகள் இந்திய ராணுவத்தின் முப்படை எனப்படும் தரைப் படை, கப்பல் படை, விமானப் படைகளில் பணியாற்றுவர்.
அக்னிபாத் திட்டம் மூலம், 17.5 வயது முதல் 21 வயது வரையிலான 45,000 இளைஞர்கள், நான்காண்டு பதவி காலத்துடன் ராணுவத்தில் சேர்க்கப்படுவார்கள். இந்த பதவி காலத்தில், அவர்களுக்கு 30,000 முதல் 40,000 ரூபாய் வரை ஊதியம் அளிக்கப்படும். அதுமட்டுமின்றி, மருத்துவ மற்றும் காப்பீட்டு பலன்கள் அவர்களுக்கு வழங்கப்படும்.
தற்போதைய கல்வித் தகுதி, உடற் தகுதி நடைமுறைகள் அப்படியே பின்பற்றப்படும். புதிய திட்டத்தில் பணியில் சேருவோர் ‘அக்னி வீரர்கள்’ என அழைக்கப்படுவர். இவர்கள் ஒப்பந்த அடிப்படையில் 4 ஆண்டுகள் இராணுவத்தில் சேவையாற்ற வேண்டும். அதன்பிறகு, ரூ.11 இலட்சம் முதல் 12 இலட்சம் வரை நிதி உதவியுடன் வெளியேற்றப்படுவார்கள். 25 விழுக்காட்டினர் மட்டுமே, இந்தியப் படையில் நிரந்தரப் பணி வாய்ப்பு பெறு
வார்கள்; 75 விழுக்காட்டினர் வெளியேற்றப்பட்டு விடுவார்கள். இதுதான், அக்னி பாதைத் திட்டம்.
அக்னி வீரர்களுக்கு 4 ஆண்டுகள் பணி
இதற்காக இந்தியா முழுவதும் அனைத்து வகுப்புகளிலும் இருந்து 46 ஆயிரம் வீரர்கள் தேர்ந்தெடுக்கப்பட உள்ளனர். 90 நாட்களுக்குள் அக்னி வீரர்கள் ஒப்பந்த அடிப்படையில் தேர்வு செய்யப்பட உள்ளனர். இது மொத்த ராணுவப் படைகளில் 3 சதவீதம் மட்டுமே. இதனால் ராணுவத்தின் பிற பிரிவினருக்கு எந்த பாதிப்பும் இருக்காது என்றும் மத்திய அரசு தெரிவித்துள்ளது.
4 ஆண்டுகால சேவைக்குப் பிறகு, பணிக்கால செயல்திறன் அடிப்படையில், அதிகபட்சமாக 25% பேர் இந்திய ராணுவத்தில் சேர்த்துக் கொள்ளப்படுவர். 4 ஆண்டு காலப் பணிக்குப் பிறகு வெளியேறும் வீரர்களுக்கு, சேவை நிதியும் திறன் சான்றிதழும் வழங்கப்படும்.
இதற்கிடையே விமானப் படைகளுக்கான ஆட்சேர்ப்பு அக்னி பாதை திட்டத்தின்கீழ் விமானப் படை அக்னி வீரர்களுக்கான விண்ணப்பப் பதிவு ஜூன் 24ஆம் தேதி தொடங்கியது. ஜூலை 5ஆம் தேதி வரை இதற்கு விண்ணப்பித்தனர். இவர்களுக்கான ஆன்லைன் தேர்வு ஜூலை 24ஆம் தேதி முதல் தொடங்கி நடைபெற்றது.
இந்நிலையில் அக்னிபத் விமானப்படையில் சேர அக்னி வீரர்களைத் தேர்வு செய்ய நடத்தப்பட்ட தேர்வு முடிவுகள் இன்று வெளியாகின. அதை சரிபார்ப்பது எப்படி என்று பார்க்கலாம்.
தேர்வு முடிவுகள் ஏற்கெனவே முன்பதிவு செய்யப்பட்ட தொலைபேசி எண்ளுக்குக் குறுஞ்செய்தியாக அனுப்பப்பட்டுள்ளன. அதேபோல இ-மெயில் முகவரிக்கும் தேர்வு முடிவுகள் அனுப்பப்பட்டுள்ளன.
அதேபோல Candidate Login வழியாகவும் தேர்வு முடிவுகளைக் காணலாம். இ-மெயில் முகவரி, கடவுச்சொல் ஆகியவற்றை உள்ளிட்டுக் காண வேண்டியது அவசியம் ஆகும்.
தேர்வு முடிவுகளைக் காண: https://agnipathvayu.cdac.in/avreg/controller/showSignIn
மேலும் செய்திகளை காண, ABP நாடு செய்திகளை Google News -ல் பின் தொடர இங்கே கிளிக் செய்யவும்
ABP நாடு செய்திகளை சமூக வலைத்தள பக்கங்களிலும் பின் தொடரலாம்