தமிழ்நாட்டில் ஓரிரு இடங்களில் வரும் 10 ஆம் தேதி வரை மழைக்கு வாய்ப்பு உள்ளதாக வானிலை மையம் தெரிவித்துள்ளது.
தற்போது, தமிழ்நாட்டில் பல்வேறு பகுதிகளில் பரவலாக மழை பெய்து வருகிறது. சென்னையில், கடந்த 2 தினங்களாக மழை பெய்து வருகிறது. இந்நிலையில், வரும் நாட்களில் வானிலை முன்னறிவிப்பு குறித்தான தகவலை வானிலை மையம் வெளியிட்டுள்ளது.
வானிலை மையம் வெளியிட்டுள்ள அறிவிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது”
வடக்கு ஆந்திரா மற்றும் அதனை ஒட்டிய கடலோரப் பகுதிகளின் மேல் வளிமண்டல கீழடுக்கு சுழற்சி நிலவுகிறது. மத்திய மேற்கு மற்றும் அதனை ஒட்டிய வடமேற்கு வங்கக்கடல் பகுதிகளில் 5 ஆம் தேதி வாக்கில் ஒரு காற்றழுத்த தாழ்வு பகுதி உருவாக கூடும்
6 நாட்களுக்கு மழை:
அடுத்த 6 நாட்களுக்கு, அதாவது வரும் 10 ஆம் தேதி வரை தமிழ்நாட்டில் ஓரிரு இடங்களிலும், புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளிலும் இடி மின்னலுடன் கூடிய லேசானது முதல் மிதமான மழைக்கு வாய்ப்பு உள்ளதாக வானிலை மையம் தெரிவித்துள்ளது.
சென்னை:
சென்னையை பொறுத்தவரை, அடுத்த 48 மணி நேரத்திற்கு வானம் ஓரளவும் மேகமூட்டத்துடன் காணப்படும். நகரின் ஒரு சில இடங்களில் லேசான மழை பெய்யக்கூடும் என வானிலை மையம் தெரிவித்துள்ளது.
— Tamilnadu Weather-IMD (@ChennaiRmc) September 4, 2024
மீனவர்களுக்கு எச்சரிக்கை:
வரும் 8 ஆம் தேதி வரிஅமன்னார் வளைகுடா, தென் தமிழக கடலோர பகுதிகள் மற்றும் அதனை ஒட்டிய குமரி கடல் பகுதிகளில் சூறாவளி காற்றானது மணிக்கு 35 கி.மீ முதல் 45 கி.மீ வேகத்திலும் இடையிடையே 55 கி.மீ வேகத்திலும் வீசக்கூடும் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
ஆகையால் , இந்த நாட்களில் மீனவர்கள் இப்பகுதிகளில் கடலுக்குச் செல்ல வேண்டாம் என அறிவுறுத்தப்படுகிறார்கள்.
இன்று இரவு 7 மணிவரை:
— Tamilnadu Weather-IMD (@ChennaiRmc) September 4, 2024
மேலும் , சமீபத்திய வானிலை அறிக்கை தெரிவித்துள்ளதவது “ சென்னை, திருவள்ளூர், செங்கல்பட்டு மற்றும் காஞ்சிபுரம் ஆகிய 4 மாவட்டங்களில் இரவு 7 மணிவரை மழைக்கு வாய்ப்பு உள்ளதாக வானிலை மையம் தெரிவித்துள்ளது.
Also Read: தொழிலாக மாறிப்போன வெடிகுண்டு சேகரிப்பு.. ஆபத்தை உணராத மக்கள்.. தீர்வு எப்போது ?