சமுதாய அமைப்பாளர் (Community Organiser) பணிக்கு விண்ணப்பம்


விழுப்புரம் மாவட்ட இயக்க மேலாண்மை அலகின் மூலம் செயல்படுத்தப்படும் தமிழ்நாடு நகர்ப்புர வாழ்வாதார இயக்கத்தின்கீழ் காலியாக உள்ள 1 சமுதாய அமைப்பாளர் (Community Organiser) பணிக்கு விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகிறது. விண்ணப்பதாரர் கீழ்க்காணும் தகுதிகளை பெற்றிருக்க வேண்டும். இப்பணியிடமானது முற்றிலும் தற்காலிகமானதாகும்.


விண்ணபிக்க வேண்டியவர்களின் தகுதிகள் :


விண்ணப்பதாரர் 35 வயதுக்குட்பட்டவராக இருத்தல் வேண்டும்.


ஏதேனும் ஒரு பட்ட படிப்பு தேர்ச்சி பெற்றவராக இருக்க வேண்டும். (Graduate in any discipline)


கணினி இயக்க தெரிந்திருக்க வேண்டும் (MS Office).


தகவல்தொடர்புதிறன் மிக்கவராக இருத்தல் வேண்டும்.(Good Communication skill)


அரசு திட்டங்களில் குறைந்தபட்சம் ஒருவருடம் முன்அனுபவம் பெற்றவராக இருத்தல் வேண்டும்.


பகுதி அளவிலான கூட்டமைப்பு உறுப்பினராக இருத்தல் அவசியம். மேலும் விண்ணப்பதாரர் உறுப்பினராக உள்ள பகுதி அளவிலான கூட்டமைப்பிலிருந்து பரிந்துரை கடிதம் அல்லது தீர்மான நகல் பெற்று சமர்ப்பிக்க வேண்டும்.


இருசக்கர வாகனம் ஓட்டுநர் உரிமம் வைத்திருக்க வேண்டும்.


விண்ணப்பதாரர் சார்ந்துள்ள பகுதி அளவிலான கூட்டமைப்பு துவங்கப்பட்டு இரண்டு ஆண்டுகள் முடிந்திருக்க வேண்டும்.


TNSRLM/TNULM Pudhu Vaazhvu Project/IFAD project /IFAD Project ஆகிய திட்டங்களில் நிர்வாகம் அல்லது நிதி முறைகேடு காரணமாக நிறுத்தப்பட்டவராகவோ/நீக்கம் செய்யப்பட்டவராகவோ இருத்தல் கூடாது.


மேற்காணும் நிபந்தனைகளுக்குட்பட்டு, விண்ணப்பிக்க விரும்பும் நபர்கள் 10.09.2024 அன்று மாலை 5.00 மணிக்குள் நகர்ப்புர வாழ்வாதார மையம், மருத்துவமணை வீதி, விழுப்புரம் புதிய நகராட்சி அலுவலகத்தில் நேரிலோ அல்லது தபால் மூலமாகவோ பணி நியமனம் கோரும் விண்ணப்பத்தினை சுய விபரம் அடங்கிய அனைத்து ஆவண நகல்களுடன் சமர்ப்பித்திட வேண்டும் என மாவட்ட ஆட்சியர் சி.பழனி தெரிவித்துள்ளார்.