Tamilnadu Power Shutdown: தமிழ்நாட்டில், மார்ச் 16 ஆம் தேதி எந்த இடங்களில் மின்தடை செய்யப்படும் என்பது குறித்து பார்ப்போம். மின்சாரம் வழங்குவதில், எவ்வித தடையும் இருக்கக் கூடாது என , அவ்வப்போது சில இடங்களில் மின்பராமரிப்பு பணிகளை, மின்வாரியம் மேற்கொள்வது வழக்கம். இதனால், எதிர்காலத்தில் மின்கசிவு உள்ளிட்ட மிகப்பெரிய பிரச்னைகள், ஏற்படாதவாறு முனனரே சரி செய்யப்படுவது வழக்கமாகும்.


தமிழ்நாட்டில் மின்தடை: 16-03-2025


தமிழ்நாட்டில், சில இடங்களில் மின்பராமரிப்பு பணி காரணமாக பல்வேறு இடங்களில் மின் தடையானது செய்யப்படுவதாக அறிவிப்பு வெளியாகியுள்ளது. 


இதனால், காலை 9 மணி முதல் மாலை 5 மணி வரையிலான கால அளவில் மின்சாரமானது சில பகுதிகளில் இருக்காது என தெரிவிக்கப்பட்டுள்ளது.


Also Read: சுனிதா வில்லியம்ஸ் பூமி திரும்புவது எப்போது? நாளை எண்ட்ரி கொடுக்கும் புதிய விண்வெளி வீரர்கள்.!


Also Read: TN Budget: இது வேற லெவல் அறிவிப்பா இருக்கே.! பட்ஜெட்டில் விண்வெளியில் புகுந்த தமிழ்நாடு...


Also Read: TN Budget: உலகெங்கும் ஒலிக்கப்போகும் தமிழ்! பட்ஜெட்டில் பணத்தை கொட்டும் தமிழ்நாடு அரசு: இவ்வளவா.!


மின்தடை செய்யப்படும் இடங்கள்:


இந்நிலையில், ( 16-03-2025 ) ஞாயிற்று கிழமை திருச்சி மாவட்டத்தில் மட்டும் மின் தடையானது செய்யப்படுவதாக மின்வாரியம் அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளது. 


கொல்லப்பட்டி:


சித்தாரபட்டி, கொல்லப்பட்டி, கலிங்கம், உடையான்பட்டி, சேனப்பநல்லூர், மெய்யம்பட்டி, நாகம்பட்டி, கங்காணிபட்டி, பாலிஷ்புரம், காமாச்சிபுரம், சங்கம் பட்டி, கோட்டையூர், கருப்பம் பட்டி, சொக்கநாதபுரம், கல்லிக்குடி, அய்யம்பாளையம்.


முத்தையாம் பாளையம் : 


வீட்டுவசதி வாரியம், அம்மாபட்டி, முத்தையம் பாளையம், நல்லியம் பாளையம், புளியம் பட்டி, மேலக்குன்னூர் பட்டி.


சிடபிள்யூஎஸ்எஸ்: 


கொத்தம்பட்டி, தெற்கு சேனப்பநல்லூர், கண்ணனூர்.


நல்லவன்னிப் பட்டி:


வீட்டுவசதி வாரியம், சுந்தர் ராஜ் புரம் காளியன் பட்டி, ஈச்சம் பட்டி, நல்லவன்னிப் பட்டி ஆகிய பகுதிகளில் (16-03-2025) ஞாயிற்று கிழமை காலை 9 மணி முதல் 5 மணிவரை மின்தடை செய்யப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.




மின் பராமரிப்பு :


தமிழ்நாடு முழுவதும் தமிழ்நாடு மின்சார துறை சார்பில் மின்சாரம் வழங்கப்பட்டு வருகிறது. மாதம் தோறும் ஒவ்வொரு துணை மின் நிலையத்திலும் பராமரிப்பு பணி மேற்கொள்வதற்காக ஒருநாள் மின் நிறுத்தம் செய்யப்படுவது வழக்கம். அந்த வகையில்  சென்னை மாவட்டத்தில் பல்வேறு இடங்களில் மின் நிறுத்தம் செய்யப்பட உள்ளன. 


மின் தடை வழங்கப்படும் நாளில், பராமரிப்பு பணியின் பொழுது,  சிறு சிறு பழுதுகள் ஏற்பட்டு இருந்தால் அதனை சரி செய்வது, மின்கம்பம்  மற்றும் மின்வழி தடங்களில் உள்ள மரக்கிளைகளை அப்புறப்படுத்துவது உள்ளிட்ட பல்வேறு பராமரிப்பு பணிகளில் மின்சார வாரிய ஊழியர்கள் ஈடுபடுவது வழக்கம். 


இதனால், பொதுமக்கள், தங்களது முக்கிய பணிகளை முன்னரே திட்டமிட்டு முடித்துக் கொள்ளுங்கள்.