- Anbumani Ramadoss: வட மாநில தொழிலாளர்களுக்கு முன்னுரிமை கொடுப்பது தான் அரசின் நிலைப்பாடா? அன்புமணி ராமதாஸ் கேள்வி
தமிழ்நட்டில் வட மாநில தொழிலாளர்களுக்கு முன்னுரிமை அளிக்காமல் தமிழ் மக்களுக்கு முன்னுரிமை வழங்க வேண்டும் என வலியுறுத்தி பாமக தலைவர் அன்புமணி ராமதாஸ் அறிக்கை வெளியிட்டுள்ளார். இது தொடர்பான அறிக்கையில், “காஞ்சிபுரம் மாவட்டத்தில் உள்ள தொழிற்சாலைகளில் வட இந்தியத் தொழிலாளர்கள் குறைந்த ஊதியத்தில் அதிக வேலை செய்வதால் அவர்களுக்கு வேலைவாய்ப்பில் முன்னுரிமை அளிக்கப்படுவதாகவும், உள்ளூர் மக்கள் அதிக ஊதியமும், அதிக விடுமுறையும் கேட்பதுடன் குறைந்த அளவில் மட்டுமே வேலை செய்வதால் அவர்களுக்கு வேலையில் முன்னுரிமை அளிக்கப்படுவதில்லை என்றும் காஞ்சிபுரம் மாவட்ட ஆட்சியர் கலைச்செல்வி மோகன் கூறியிருக்கிறார். மேலும் படிக்க
- TN Rain Alert: தமிழ்நாட்டில் 4 நாட்களுக்கு கொட்டப்போகும் மழை..எந்தெந்த மாவட்டங்களில்? இன்றைய வானிலை நிலவரம் இதோ..
மேற்கு திசை காற்றின் வேகமாறுபாடு காரணமாக, அடுத்த 4 நாட்களுக்கு கனமழை இருக்கும் என வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. 07.10.2023: தமிழ்நாடு, புதுச்சேரி மற்றும் காரைக்கால் பகுதிகளில் ஒரிரு இடங்களில் இடி மின்னலுடன் கூடிய லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும். 08.10.2023 மற்றும் 09.10.2023: தமிழ்நாடு, புதுச்சேரி மற்றும் காரைக்கால் பகுதிகளில் ஒருசில இடங்களில் இடி மின்னலுடன் கூடிய லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும். மேலும் படிக்க
- தமிழக மீனவர்கள் மீது இலங்கை கடற்கொள்ளையர்கள் மீண்டும் கொலை வெறி தாக்குதல் - பல லட்சம் மதிப்புள்ள பொருட்களை அறுத்து சென்று அட்டூழியம்
- TTF Vasan: டிடிஎஃப் வாசனின் ஓட்டுநர் உரிமம் 10 ஆண்டுகளுக்கு ரத்து.. போக்குவரத்துத்துறை அதிரடி..
டிடிஎஃப் வாசனின் ஓட்டுநர் உரிமம் 10 ஆண்டுகளுக்கு ரத்து செய்யப்பட உள்ளதாக காஞ்சிபுரம் மாவட்ட வட்டார போக்குவரத்து துறை அறிவித்துள்ளது அவரது ரசிகர்களை அதிர்ச்சியில் ஆழ்த்தியுள்ளது. இருசக்கர வாகனத்தில் தொலைதூரப் பயணம் மேற்கொள்வது, உயர்ரக பைக்குகளில் சாகசங்கள் மேற்கொள்வது உள்ளிட்ட வீடியோக்களை யூடியூபில் பதிவு செய்து வருவது டிடிஎஃப் வாசனின் வாடிக்கையாக உள்ளது. இந்தநிலையில், டிடிஎஃப் வாசன் கடந்த 17ஆம் தேதி சென்னை பெங்களூர் தேசிய நெடுஞ்சாலையில் காஞ்சிபுரம் அடுத்த தாமல் பகுதியில் உயர்ரக பைக்கில் சென்று சாகசம் செய்ய முயன்று விபத்து ஏற்பட்டு காயமடைந்தார். மேலும் படிக்க
- ISRO Second Launchpad: இஸ்ரோவின் இரண்டாம் ஏவுதளம்.. குலசேகரப்பட்டினத்தில் நில விவரத்தை வெளியிட்ட மத்திய அரசு..
இந்திய விண்வெளி ஆய்வு நிறுவனம் ஆந்திரா மாநிலம் ஸ்ரீஹரிகோட்டாவில் இருந்து ராக்கெட்டுகள் விண்ணில் செலுத்தப்படுகிறது. அதேபோல் அங்கிருந்து இந்தியாவுக்கான செயற்கைகோள்கள் மட்டுமல்லாமல் வணிக ரீதியாக பிற நாட்டுச் செயற்கக்கோள்களும் விண்ணில் செலுத்தப்படுகிறது. ஆந்திரா மாநிலம் ஸ்ரீஹரிகோட்டாவில் அதாவது சதீஷ் தவான் விண்வெளி ஆய்வு மையத்தில் இரண்டு ஏவுதளங்கள் உள்ளன. சமீபத்தில் இஸ்ரோ நிலவின் தென் துருவத்தை ஆய்வு செய்வதற்காக சந்திரயான் 3 விண்கலத்தை விண்ணுக்கு அனுப்பி உலக நாடுகளை உற்று நோக்கச் செய்தது. மேலும் படிக்க