குண்டும் குழியுமான சாலை


விழுப்புரம் மாவட்டம் வானூர் அருகே உள்ள புதுவை எல்லையை ஒட்டி பகுதியான பூத்துறை  ஊராட்சி ஆகும். இந்த பகுதியில் சுமார் 2000-க்கும் மேற்பட்ட குடும்பங்கள் வசித்து வருகின்றனர். இந்த நிலையில் பூத்துறை கிராமத்தில் இருந்து புதுவைக்கு செல்வதற்கு மேட்டுப்பாளையம் பூத்துறை சாலை மிக முக்கிய சாலை ஆகும்.


இந்த சாலையை கிராம மக்கள் பயன்படுத்தி வருகின்றனர். இந்த நிலையில் இந்த பகுதியில் இரண்டுக்கும் மேற்பட்ட கல்லூரிகள் மற்றும் தமிழகப் பகுதியில் 50க்கும் தனியார் கம்பெனிகள் மற்றும் புதுவை மாநிலமான மேட்டுப்பாளையத்தில் சுமார் 300-க்கும் மேற்பட்ட தனியார் கம்பெனிகள் செயல்பட்டு வருகின்றனர். இந்த பகுதியில் பல ஆண்டுகளாக தார் சாலை அமைக்கப்படாததால் அந்த சாலை குண்டும் குழியுமாக காட்சியளிக்கிறது.


 



குண்டும் குழியுமான சாலை - பூத்துறை கிராமம்


மருத்துவமனை செல்லமுடியாமல் அவதி 


மேலும் இந்த பகுதியில் சாலை சரியில்லாததால் இந்த பகுதியில் வாகனங்கள் வருவதால் வாகனங்கள் அவ்வப்போது பழுதாகி வழியிலே நின்று விடுவதாகவும் வாகனங்களை சரி செய்வதற்கே அதிக அளவில் பணத்தை செலவு செய்வதாகவும் வாகன ஓட்டிகள் புகார் தெரிவிக்கின்றனர். பூத்துறையிலிருந்து புதுவை ஜிப்மர் மருத்துவமனைக்கு செல்வதற்கு குறைந்தபட்சம் 10 நிமிடம் ஆகும், ஆனால் தார் சாலை இல்லாததால் சுமார் ஒரு மணி நேரம் இந்த சாலையை கடந்து செல்ல வேண்டிய நிலை உள்ளதாக  பொதுமக்கள் புகார் தெரிவிக்கின்றனர்.




இரவு நேரங்களில் வழிப்பறி 


மேலும் இந்த பகுதிக்கு வரும் கல்லூரி மாணவர்களும் தனியார் கம்பெனியில் பணிபுரியும்  ஊழியர்களும் முக்கியமாக பெண் ஊழியர்களும் மின் வசதி மற்றும் தார் சாலை வசதி (ரோடு வசதி) இல்லாததால் மிகவும் சிரமத்திற்கு உள்ளாவதாகவும், இந்த பகுதியில் இரவு நேரங்களில் நடந்து அல்லது இருசக்கர வாகனத்தில் வரும் போது இருட்டை பயன்படுத்தி தொடர்ந்து வழிப்பறி கொள்ளை சம்பவம் நடைபெற்று வருவதாகவும் பொதுமக்கள் குற்றம் சாட்டுகின்றனர்.


 



பூட்டி கிடக்கும் ஆரோவில் சோதனை சாவடி 


பூட்டி கிடக்கும் சோதனை சாவடி 


மேலும் இந்த பகுதி புதுவை மாநிலத்தை ஒட்டி உள்ளதால் குடிமகன்களின் அட்டகாசம் அதிகரித்துள்ளதாகவும் பொதுமக்கள் தெரிவிக்கின்றனர். மேலும் இங்கு ஆரோவில் காவல் நிலையம் சார்பாக இந்தப் பகுதியில் இருக்கும் சோதனை சாவடி பெயரளவில் உள்ளதாகவும், அந்த சோதனை சாவடி எந்த நேரமும் பூட்டியுள்ளதாகவும் இதனால் மது பிரியர்கள் மது கடத்தல்  அதிகளவில் நடைபெறுவதாகவும் தகவல் வெளியாகியுள்ளது. மேலும் இந்த பகுதியில் மின்விளக்கு அமைத்து குறைந்த அளவு பேட்ச் ஒர்க் ஆவது செய்து தர வேண்டும் என கோரிக்கை வைக்கின்றனர்.