- Northeast Monsoon Rain: மக்களே உஷார் - தமிழ்நாட்டில் வடகிழக்கு பருவமழை தொடங்கியது - வானிலை மையம் அறிவிப்பு
தமிழ்நாட்டில் வடகிழக்கு பருவமழை தொடங்கிவிட்டதாக, வானிலை மைய தென்மண்டல தலைவர் பாலச்சந்திரன் அறிவித்துள்ளார். இதனால் மழை தீவிரமடைய வாய்ப்புள்ளதாக எச்சரித்துள்ளார். வங்கக்கடலில் குறைந்த காற்றழுத்தத் தாழ்வுப்பகுதி மற்றும் அரபிக்கடலில் புயல் காரணிகளால் தமிழ்நாட்டில் மழை தீவிரமடையும் எனவும் தெரிவித்துள்ளார்.
சென்னை நுங்கம்பாக்கத்தில் உள்ள மண்டல வானிலை ஆய்வு மையத்தில் செய்தியாளர்களிடம் பேசிய பாலச்சந்திரன். “ தமிழ்நாடு, புதுச்சேரி, காரைக்கால் பகுதிகளிலும் மற்றும் கேரளாவிலும் வடகிழக்கு பருவமழை தொடங்கியுள்ளது. தமிழ்நாட்டை பொருத்தவரையில் வடகிழக்கு பருவமழையின் ஆரம்பகட்டத்தின் தாக்கம் லேசானதாகவே இருக்கும். மேலும் படிக்க
- MK Stalin on Durga Stalin : ‘எனது மனைவி துர்கா, கோயிலுக்கு செல்வதை தடுக்க மாட்டேன்’ முதன்முறையாக மனம் திறந்த முதல்வர்..!
நீட் விலக்கு கையெழுத்து இயக்கத்தை தொடங்கி வைத்த அவர், தினந்தோறும் துர்கா எந்த கோயிலுக்கு செல்கிறார் என்பதை படம் பிடித்து விமர்சிப்பதை சிலர் தொழிலாக கொண்டுள்ளனர் என்றும் கோயிலுக்கு செல்வது அவரது தனிப்பட்ட உரிமை என்றும் அவர் குறிப்பிட்டுள்ளார். அதோடு, நாங்கள் ஆரிய ஆதிக்கத்திற்குதான் எதிரியே தவிர, ஆன்மீகத்திற்கு எதிரி அல்ல என்றும் முதல்வர் மு.க.ஸ்டாலின் பேசியுள்ளார். சமீபத்தில் சனாதனத்தை டெங்கு, மலேரியா போன்று ஒழிக்க வேண்டும் என்று உதயநிதி ஸ்டாலின் பேசியது இந்தியா முழுவதும் பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்திய நிலையில், முதல்வர் மு.க.ஸ்டாலினின் இந்த பேச்சு திமுக ஆன்மீகத்திற்கு எதிரி என்ற பரப்புரைகளுக்கு எதிரான பதிலடியாக அமைந்துள்ளது. மேலும் படிக்க
- CM Stalin: ”சாதிவாரி கணக்கெடுப்பை நடத்திடுக”.. பிரதமர் மோடிக்கு முதலமைச்சர் ஸ்டாலின் கடிதம்..!
தேசிய மக்கள் தொகை கணக்கெடுப்புடன், சாதிவாரி கணக்கெடுப்பு நடத்த வலியுறுத்தி முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் பிரதமர் மோடிக்கு கடிதம் எழுதியுள்ளார். சாதி வாரி கணக்கெடுப்பு நடத்தப்பட வேண்டும் என்கிற கோரிக்கை நாடு முழுவதும் தொடர்ந்து வலியுறுத்தப்பட்டு வருகிறது. மத்திய அரசின் பட்டியலில் மக்கள் தொகை கணக்கெடுப்பு விவகாரம் இருக்கும் நிலையில் அதனை மத்திய அரசுதான் மேற்கொள்ள முடியும். இதனிடையே சமீபத்தில் பீகாரில் சாதிவாரி கணக்கெடுப்பை நிதிஷ்குமார் தலைமையிலான அரசு அதிரடியாக எடுத்து கடந்த அக்டோபர் 2 ஆம் தேதி வெளியிட்டது. மேலும் படிக்க
- Special Bus: 4 நாட்கள் தொடர் விடுமுறை; சொந்த ஊர்களுக்கு படையெடுக்கும் மக்கள் - நிரம்பி வழியும் பேருந்துகள், ரயில்கள்
ஆயுதபூஜை மற்றும் விஜயதசமியை ஒட்டி வரும் செவ்வாய்க்கிழமை வரை விடுமுறை என்பதால், அடுத்த 4 நான்கு நாட்கள் விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது. இதனால், சென்னை உள்ளிட்ட தமிழ்நாட்டின் உள்ளிட்ட பல்வேறு பகுதிகளில் உள்ள மக்கள், தங்களது சொந்த ஊர்களுக்கு படையெடுக்க திட்டமிட்டுள்ளனர். கூட்ட நெரிசலை தவிர்க்கும் நோக்கில் சென்னையில் இருந்து வழக்கமாக இயக்கப்படும் 2,100 பேருந்துகளுடன், கூடுதலாக ஆயிரம் பேருந்துகள் இயக்கப்படுகின்றன. இதையடுத்து மாலை முதல் பேருந்து நிலையங்கள் மற்றும் ரயில் நிலையங்கள் நிரம்பி வழிகின்றன. மேலும் படிக்க
- Minister KN Nehru: "பெண்கள் அனைத்து நிலைகளிலும் முன்னேற்றம் அடைந்து வருகின்றனர்" -அமைச்சர் கே.என்.நேரு பெருமிதம்
சமூக நலத்துறை மற்றும் ஒருங்கிணைந்த குழந்தை வளர்ச்சிப் பணிகள் சார்பில் சேலம் மாநகராட்சி தொங்கும் பூங்காவில் சமுதாய வளைகாப்பு விழா நடைபெற்றது. இதில் நகராட்சி நிர்வாகத் துறை அமைச்சர் கே.என்.நேரு மற்றும் உணவு வழங்கல் துறை அமைச்சர் சக்கரபாணி ஆகியோர் கலந்து கொண்டு 100 கர்ப்பிணி தாய்மார்களுக்கு வளைகாப்பு நடத்தி, அரசின் சார்பில் சீர்வரிசைகள் மற்றும் 5 வகையான வளைகாப்பு உணவுகளை வழங்கினார்கள். மேலும் படிக்க