காவிரி விவகாரம்


தமிழகத்திற்கு அக்டோபர் 16ஆம் தேதி முதல் 31ஆம் தேதி வரை 3,000 கனஅடி நீரை திறக்க, கர்நாடகாவுக்கு காவிரி ஒழுங்காற்று குழு பரிந்துரை செய்துள்ளது. கூட்டத்தில் ஆணையத்தின் உத்தரவுப்படி கர்நாடகம் காவிரியில் நீர் திறந்துவிட்டுள்ளதாக என்பது பற்றி விவாதிக்கப்பட்டது. பின்னர், விநாடிக்கு 13,000 கனஅடி விதம் 15 நாட்களுக்கு தண்ணீர் திறக்க கர்நாடகாவுக்கு உத்தரவிட தமிழக அரசு சார்பில் கோரிக்கை வைக்கப்பட்டது. மேலும், காவிரி ஒழுங்காற்று குழுவின் உத்தரவை கர்நாடக அரசு பின்பற்ற உத்தரவிடுமாறு தமிழக அரசு சார்பில் வலியுறுத்தப்பட்டது. மேலும் வாசிக்க...


நுகர்வோர் பாதுகாப்பு அமைப்பு குழு கூட்டம்


கரூர் மாவட்ட ஆட்சியர் அலுவலக கூட்டரங்கில் கூட்டத்தில் மாவட்ட ஆட்சித் தலைவர் பிரபுசங்கர் தலைமையில் நுகர்வோர் பாதுகாப்பு அமைப்புகளுடனான மூன்றாம் காலாண்டு குழுக்கூட்டம் நடைபெற்றது. இக்கூட்டத்தில் அனைத்து கோவில்களிலும் நெகிழிப் பைகள் உபயோகத்தை முற்றிலும் தடை செய்வதற்கான நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும்.  அரசு மருத்துவமனை சுற்றியுள்ள ஆக்கிரமிப்புகளை மாநகராட்சி மூலம் அகற்றுவதற்கான நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும். மேலும் வாசிக்க..


அகழ்வாய்வில் பழங்கால பொருட்கள்


தமிழர்களின் தொன்மையான வாழ்வியல் நாகரிகம் தான் 3 ஆயிரம் ஆண்டுகளுக்கு முன்பு உள்ளது என்பதை உலகறியச் செய்யும் வகையில் இரண்டாம் கட்ட அகழாய்வு பணிகளை தமிழக முதல்வர் கடந்த ஏப்ரல் மாதம் 6ம் தேதி காணொளி காட்சி மூலம் தொடங்கி வைத்தார். தமிழகத்தில் கீழடி, ஆதிச்சநல்லூர் உள்ளிட்ட பல்வேறு இடங்களில் அகழாய்வு செய்ய உத்தரவிடப்பட்டு பணிகள் நடந்து வருகிறது. வாழ்விடப்பகுதியில் 18 குழிகள் அமைக்கப்பட்டு அகழாய்வு பணிகள் நடந்து வருகிறது. இதுவரை 1900க்கும் மேற்பட்ட தொல்பொருட்கள் கண்டெடுக்கப்பட்டு உள்ளது. அதேபோல 1800க்கும் மேற்பட்ட குறியீடுகள் கொண்ட பானை ஓடுகள், வெண்மை நிறத்தினால் அலங்கரிக்கப்பட்ட பானை ஓடுகள், கருப்பு-சிவப்பு பானை ஓடுகள் உள்ளிட்டவைகளும் கிடைத்துள்ளன.மேலும் வாசிக்க..


மகாளய அமாவாசை


மகாளய அமாவாசையை முன்னிட்டு சதுரகிரி கோயிலுக்கு செல்ல பக்தர்களுக்கு 4 நாட்கள் அனுமதி அளிக்கப்பட்டுள்ளது.  சிறப்பு தினங்களில் 4 நாட்கள் மட்டுமே வனத்துறையால் பக்தர்கள் அனுமதிக்கப்படுவார்கள். இங்கு அகஸ்தியர் உள்ளிட்ட 18 சித்தர்கள் வாழ்ந்ததாக பக்தர்களால் நம்பப்படுகிறது. இதனிடையே அக்டோபர் 14 ஆம் தேதி மகாளாய அமாவாசை தினம் அனுசரிக்கப்படுகிறது. இதனை முன்னிட்டு சதுரகிரி மலைக்கு  இன்று (அக்டோபர் 12) முதல் 15 ஆம் தேதி வரை பக்தர்கள் அனுமதிக்கப்படுவார்கள். மேலும் வாசிக்க..


16 ஐ.பி.எஸ். அதிகாரிகள் பணியிட மாற்றம்


தென்காசி மாவட்ட காவல் கண்காணிப்பாளராக சுரேஷ் குமார் நியமிக்கப்பட்டுள்ளார். நீலகிரி மாவட்ட காவல் கண்காணிப்பாளராக சுந்தரவடிவேல் நியமிக்கப்பட்டுள்ளார். திருவாரூர் மாவட்ட காவல் கண்காணிப்பாளராக ஜெயக்குமார் நியமிக்கப்பட்டுள்ளார். கரூர் மாவட்ட காவல் கண்காணிப்பாளராக பிரபாகர் நியமிக்கப்பட்டுள்ளார். கன்னியாகுமரி  மாவட்ட காவல் கண்காணிப்பாளராக  ஆக சுந்தரவதனம் நியமிக்கப்பட்டுள்ளார். மேலும் வாசிக்க..


ஐ.ஏ.எஸ். அதிகாரிகள் இட மாற்றம்


தமிழ்நாட்டில் 9 ஐ.ஏ.எஸ். அதிகாரிகள் பணியிட மாற்றம் செய்து தமிழ்நாடு அரசு அறிவிப்பு வெளியிட்டுள்ளது. தூத்துக்குடி, கரூர், திருவள்ளூர் ஆகிய மாவட்டங்களின் புதிய ஆட்சியர்களை நியமித்து அரசாணை வெளியிடப்பட்டுள்ளது. நகர்ப்புற வளர்ச்சி மேலாண்மை வாரிய இணை நிர்வாக இயக்குநர் தங்கவேல், கரூர் ஆட்சியராக நியமிக்கப்பட்டுள்ளார். சிப்காட் நிறுவனத்தின் மேலாண்மை இயக்குநர் சுந்தரவள்ளி வேலைவாய்ப்பு மற்றும் பயிற்சி துறையின் ஆணையராக நியமிக்கப்பட்டுள்ளார். வேலைவாய்ப்பு மற்றும் பயிற்சி துறையின் ஆணையராக இருந்த வீரராகவா, தொழிற்கல்வி துறையின் ஆணையராக நியமிக்கப்பட்டுள்ளார். மேலும் வாசிக்க..


மேட்டூர் அணை நிலவரம்


தமிழ்நாடு மற்றும் கர்நாடகா மாநிலங்களில் பருவமழை இன்னும் தொடங்காமல் உள்ளது. இதனால் கர்நாடகாவில் இருந்து மேட்டூர் அணைக்கு வரும் நீரானது அதிகரித்தும், குறைந்தும் காணப்படுகிறது. நேற்று முன்தினம் அணைக்கு வினாடிக்கு 163 கன அடி தண்ணீர் வந்து கொண்டிருந்த நிலையில் நேற்றைய தினம் அணைக்கு வரும் நீரின் அளவு 3,528 கன அடியாக இருந்தது. இந்த நிலையில் இன்று காலை அணைக்கு வரும் நீரின் அளவு 9,345 கன அடியாக அதிகரித்துள்ளது.மேலும் வாசிக்க..