கரூர் மாவட்டம் அனைத்து கோவில்களிலும் நெகிழிப் பைகள் உபயோகத்தை முற்றிலும் தடை செய்வதற்கான நடவடிக்கையை மேற்கொள்ள வேண்டும் என நுகர்வோர் பாதுகாப்பு கூட்டத்தில் மாவட்ட ஆட்சித் தலைவர் பிரபுசங்கர் அலுவலர்களுக்கு அறிவுறுத்தினார்.



 

 

கரூர் மாவட்ட ஆட்சியர் அலுவலக கூட்டரங்கில் கூட்டத்தில் மாவட்ட ஆட்சித் தலைவர் பிரபுசங்கர் தலைமையில் நுகர்வோர் பாதுகாப்பு அமைப்புகளுடனான மூன்றாம் காலாண்டு குழுக்கூட்டம் நடைபெற்றது. இக்கூட்டத்தில் அனைத்து கோவில்களிலும் நெகிழிப் பைகள் உபயோகத்தை முற்றிலும் தடை செய்வதற்கான நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும்.  அரசு மருத்துவமனை சுற்றியுள்ள ஆக்கிரமிப்புகளை மாநகராட்சி மூலம் அகற்றுவதற்கான நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும். இலாலாபேட்டை பேருந்து றிறுத்த  நிழற்குடையில் அருகில் உள்ள குப்பைகளை அகற்றுவதற்கான நடவடிக்கை குறித்தும் 

 



 

 

 

கரூர் மாநகராட்சி 48வது வார்டுக்குட்பட்ட காளியப்ப கவுண்டனூர் சுடுகாட்டிற்கு அருகில் சுமார் ஒரு ஏக்கர் பரப்பளவில்  சுற்றுப்புறத்தில் உள்ள கழிவு நீர் நிரம்பியதை அகற்றுவது குறித்தும்,  அனைத்து மருத்துவமனை வளாகத்தில் உணவகங்கள் அமைத்து தரமான உணவுகள் வழங்குவது குறித்தும், கூட்டத்தில் விவாதிக்கப்பட்டது. துறை அலுவலர்கள்  உரிய நடவடிக்கைகள் மேற்கொள்ள வேண்டும் என மாவட்ட ஆட்சித் தலைவர் பிரபுசங்கர் அலுவலர்களுக்கு அறிவுறுத்தினார்.



 

 

தொடர்ந்து நடைபெற்ற நுகர்வோர் மாவட்ட  கண்காணிப்புக் குழுக்கூட்டத்தில் முன்னுரிமை அடிப்படையில் குடும்ப அட்டைகள்  வழங்குவதில் ஏதேனும் குறைகள் இருந்தால் அந்த குறைகளை தெரிவித்தால் மாவட்ட நிர்வாகத்தின் சார்பில் உரிய நடவடிக்கை மேற்கொள்ளப்படும் மாவட்ட ஆட்சியர் தெரிவித்தார். இந்நிகழ்ச்சியில் மாவட்ட வருவாய் அலுவலர் கண்ணன், மாவட்ட வழங்கல் அலுவலர் கௌசல்யா, கரூர் வருவாய் கோட்டாட்சியர்  ரூபினா, தமிழ்நாடு நுகர்பொருள் வாணிப கழக மண்டல மேலாளர் முருகேசன், அகில இந்திய நுகர்வோர் பாதுகாப்பு குழு தலைவர். புல்லட் கோபாலன், குளோபல் சமூக நல பாதுகாப்பு குழு திர.சொக்கலிங்கம், கிராமிய நாராயணன் மற்றும் அரசு அலுவலர்கள் உட்பட பலர் கலந்து கொண்டனர்.