• ஆட்சியை விட ஜனநாயகத்திற்கே திமுக ஆதரவு; பாஜகவுக்கு தோல்வி பயம் : முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்




சென்னை திருவான்மியூரில் திமுக எம்.எல்.ஏ. கிருஷ்ணசாமி இல்ல திருமண விழா நடைபெற்றது. அதில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் பங்கேற்று மணமக்களை வாழ்த்தினார். பின்னர், விழாவில் பேசிய அவர், 'மத்தியில் ஆளும் பாஜக அரசு எதிர்கட்சிகளை மிரட்டுவது, எதிராக கருத்து கூறுபவர்களை அமலாக்கத்துறை சோதனை மூலம் அச்சுறுத்துவது உள்ளிட்ட செயல்களை கொண்டுள்ளது. இப்போது எதிர்கட்சி தலைவர்களின் செல்போன் ஒட்டு கேட்பதும் அரங்கேறி வருகிறது' என விமர்சித்துள்ளார். மேலும் படிக்க



  • வலுப்பெரும் வடகிழக்கு பருவமழை.. 13 மாவட்டங்களுக்கு கனமழை எச்சரிக்கை.. எந்தெந்த பகுதிகளில்?


இலங்கை மற்றும் அதனை ஒட்டியுள்ள பகுதிகளில் ஒரு வளிமண்டல கீழடுக்கு சுழற்சி நிலவுகிறது. மேலும், தெற்கு வங்கக்கடல் பகுதியில்  ஒரு வளிமண்டல கீழடுக்கு சுழற்சி நிலவுகிறது. இதன் காரணமாக இன்று  கன்னியாகுமரி, திருநெல்வேலி, தென்காசி, விருதுநகர், தேனி, திண்டுக்கல், நீலகிரி, கோயம்புத்தூர், மதுரை, சிவகங்கை, இராமநாதபுரம், புதுக்கோட்டை மற்றும் தஞ்சாவூர் மாவட்டங்களில் ஆகிய 13 மாவட்டங்களில் கனமழை பெய்யக்கூடும் என வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. மேலும் படிக்க



  • முடிந்தது தேவர் ஜெயந்தி: மீண்டும் மதுரை வங்கியில் ஒப்படைக்கப்பட்ட தேவர் தங்க கவசம்!


 முத்துராமலிங்க  தேவரின் ஜெயந்தி விழா மற்றும் குருபூஜை அக்டோபர் 28 முதல் 30 ஆம் தேதி வரை இராமநாதபுரம் மாவட்டத்தில் உள்ள பசும்பொன்னில் நடைபெற்றது. அவரது நினைவிடத்தில் உள்ள சிலைக்கு முந்தைய அதிமுக ஆட்சியில்  3.7 கோடி ரூபாய் மதிப்பில் 13 கிலோ எடையுள்ள தங்க கவசத்தை அளிக்கப்பட்டது. இது ஒவ்வொரு ஆண்டும் மூன்று நாள் நடைபெறும் விழாவில் அணிவிக்கப்படுவது வழக்கம் என்பது குறிப்பிடத்தக்கது. மேலும் படிக்க



  • தீபாவளிக்கு 2 மணி நேரம் மட்டும் தான் பட்டாசு வெடிக்க வேண்டும் - தமிழக அரசின் டைம் இதுதான்!


தீபாவளி பண்டிகை நவம்பர் 12 ஆம் தேதி கொண்டாடப்படுகிறது. இதனிடையே தீபாவளிக்கு 2 மணி நேரம் மட்டுமே பட்டாசுகளை வெடிக்கலாம் என தமிழக சுற்றுச்சூழல் துறை தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.  அன்றைய தினம் காலை 6 மணி முதல் 7 மணி வரையும், இரவு 7 மணி முதல் 8 மணி வரையும் பட்டாசு வெடிக்க அனுமதிக்கப்படும் என கூறப்பட்டுள்ளது. தீபாவளி நாளில் காற்றின் தரம் மாசு கட்டுப்பாட்டு வாரியத்தின் மூலம் தீவிரமாக கண்காணிக்கப்படும் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும் படிக்க



  • ’ஆடம்பர செலவுகள் வேணாம்; இதை மட்டும் பண்ணுங்க’ - தொண்டர்களை அலெர்ட் செய்த உதயநிதி


கழக நிகழ்ச்சிகளில் பட்டாசு வெடிப்பது, பூங்கொத்து அளிப்பது,  ஃப்ளெக்ஸ் பேனர் வைப்பது போன்ற தேவையற்ற ஆடம்பரங்களைத் தவிருங்கள் என தொண்டர்களுக்கு அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் அறிவுறுத்தி அறிக்கை வெளியிட்டுள்ளார். மேலும் இன்ஸ்டெண்ட் அரசியல் செய்யும் பாஜகவிடம் பொறுமை கிடையாது என காட்டமாக குறிப்பிட்டுள்ளார். மேலும் படிக்க