• CM Stalin: கள்ளச்சாராயம் அருந்தி உயிரிழந்தோர் குடும்பத்திற்கு தலா 10 லட்சம் நிவாரணம் - முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்


செங்கல்பட்டில் கள்ளச்சாராயம் அருந்தி உயிரிழந்த 5 பேரின் குடும்பங்களுக்கு தலா ரூ.10 லட்சம் நிவாரணம் வழங்க முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் உத்தரவிட்டுள்ளார். மேலும் படிக்க https://tamil.abplive.com/news/tamil-nadu/5-people-died-after-drinking-fake-liquor-in-chengalpattuchief-minister-stalin-announced-relief-117694/amp



  • Villupuram: 11 ஆக உயர்ந்த உயிரிழப்பு... கள்ளச்சாராயத்தால் அடுத்தடுத்து மரணம்... கண்காணிப்பு தீவிரம்


விழுப்புரம் மாவட்டம் மரக்காணம் அருகே எக்கியார் குப்பத்தில் நேற்று கள்ளச்சாராயம் விற்கப்பட்டுள்ளது. அந்த கள்ளச்சாராயத்தை அதே கிராமத்தை சேர்ந்த 44 பேர் வாங்கி குடித்துள்ளனர். கள்ளச்சாராயம் குடித்த அனைவருக்கும் வாந்தி, மயக்கம் ஏற்பட்டுள்ளது. இதையடுத்து, கள்ளச்சாராயம் குடித்த 44 பேரும் முண்டியபாக்கம், மரக்காணம், புதுச்சேரி ஜிப்மர் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை அளிக்கப்பட்டது. மேலும் படிக்க https://tamil.abplive.com/news/tamil-nadu/villupuram-11-people-died-after-drinking-fake-liquor-marakkanam-117668/amp



  • TN Spurious Liquor Death: கள்ளச்சாராய தடுப்பு விசாரணை சிபிசிஐடிக்கு மாற்றப்படும் - முதலமைச்சர் ஸ்டாலின்..!





கள்ளச்சாராய விற்பனை தடுப்பு தொடர்பான விசாணை சிபிசிஐடிக்கு மாற்றப்படும் என விழுப்புரம்  முண்டியம்பாக்கம் அரசு மருத்துவமனையில் முதலமைச்சர் ஸ்டாலின், மாவட்ட ஆட்சியர் மற்றும் காவல் அதிகாரிகளுடன் நடத்திய ஆலோசனைக்குப் பின்னர் செய்தியாளர்களைச் சந்திக்கையில் கூறினார்.  மேலும் படிக்க https://tamil.abplive.com/news/tamil-nadu/tamil-nadu-spurious-liquor-death-cm-mk-stalin-press-meet-case-transferred-to-cbcid-117703/amp



  • Ramadoss: ஆலமரமாக வேரூன்றிய கள்ளச்சாராய கட்டமைப்பு? 5 நடவடிக்கைகள் கட்டாயம் தேவை - ராமதாஸ்






கள்ளச்சாராய வழக்குகளை விசாரிக்க சிறப்பு நீதிமன்றங்கள் அமைக்கப்பட வேண்டும். 6 மாதங்களில் விசாரித்துத் தீர்ப்பு அளிக்கப்பட வேண்டும். தீர்ப்பு வழங்கப்படும் வரை பிணையில் வெளிவரமுடியாத வகையில் சட்டத் திருத்தம் செய்யப்பட வேண்டும். கள்ளச்சாராயக் குற்றங்களில் ஈடுபடுவோருக்கு வாழ்நாள் சிறைத் தண்டனை விதிக்கப்படும் வகையில் சட்டத்திருத்தம் செய்யப்பட வேண்டும். மேற்கண்ட நடவடிக்கைகளின் மூலம் கள்ளச் சாராயத்தை ஒழிப்பதுடன், அரசு மதுக்கடைகளையும் மூடுவதன் மூலம் தமிழகத்தை மதுவில்லா மாநிலமாக மாற்ற அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும். என்று ராமதாஸ் வலியுறுத்தியுள்ளார், மேலும் படிக்க https://tamil.abplive.com/news/tamil-nadu/illict-liquor-death-5-actions-must-be-required-ramadoss-117666/amp



  • 'கர்நாடக தேர்தல் முடிவுகளால் நாடாளுமன்றத் தேர்தல் பாஜகவிற்கு சாவலாக இருக்காது’ - வானதி சீனிவாசன்



கர்நாடக தேர்தலில் மக்கள் கொடுத்திருக்கக்கூடிய தீர்ப்பை நாங்கள் ஏற்றுக் கொள்கிறோம். எங்களுடைய ஆட்சி அமைக்க முடியாமல் போனதற்கான காரணங்களை நிச்சயமாக கட்சி ஆராயும். மக்களுடைய நம்பிக்கை பெறக்கூடிய வகையில் செயல் திட்டங்களை நிச்சயம் உருவாக்கும். வரும் பாராளுமன்றத் தேர்தலில் மக்கள் எதிர்பார்ப்புகளை பூரணமாக நிறைவேற்றுகின்ற வகையிலும், மக்களுடன் நெருக்கமான அணுகுமுறையையும் ஏற்படுத்த, கர்நாடக தேர்தல் முடிவு எங்களை தயார்படுத்தக்கூடிய விஷயமாக பார்க்கிறோம். தோல்விக்கு ஒரு குறிப்பிட்ட காரணம் என எந்த கட்சியாலும் சொல்ல முடியாது. பல்வேறு காரணங்கள் இருக்கலாம் என்று வானதி சீனிவாசன் தெரிவித்துள்ளார். மேலும படிக்க https://tamil.abplive.com/news/politics/vanathi-srinivasan-said-that-the-parliamentary-elections-will-not-be-a-disaster-for-the-bjp-due-to-the-karnataka-election-results-tnn-117566/amp