Villupuram: 11 ஆக உயர்ந்த உயிரிழப்பு... கள்ளச்சாராயத்தால் அடுத்தடுத்து மரணம்... கண்காணிப்பு தீவிரம்
விழுப்புரம் : மரக்காணம் அருகே எக்கியார் குப்பத்தில் கள்ளச்சாராயம் குடித்ததில் 11 ஆக உயிரிழப்பு அதிகரித்தது.

விழுப்புரம் மாவட்டம் மரக்காணம் அருகே எக்கியார் குப்பத்தில் நேற்று கள்ளச்சாராயம் விற்கப்பட்டுள்ளது. அந்த கள்ளச்சாராயத்தை அதே கிராமத்தை சேர்ந்த 44 பேர் வாங்கி குடித்துள்ளனர். கள்ளச்சாராயம் குடித்த அனைவருக்கும் வாந்தி, மயக்கம் ஏற்பட்டுள்ளது. இதையடுத்து, கள்ளச்சாராயம் குடித்த 44 பேரும் முண்டியபாக்கம், மரக்காணம், புதுச்சேரி ஜிப்மர் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை அளிக்கப்பட்டது.
ஜிப்மர் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வந்த சுரேஷ், சங்கர், தரணிவேல் ஆகிய 3 பேரும் சிகிச்சை பலனின்றி நேற்று முன்தினம் உயிரிழந்தனர். மேலும், சிலர் உயிருக்கு ஆபத்தான நிலையில் தீவிர சிகிச்சை பெற்று வந்தனர். இந்த சம்பவத்தை தொடர்ந்து விசாரணை நடத்திய போலீசார், கள்ளச்சாராய வியாபாரி அமரன் என்பவரை கைது செய்து சிறையில் அடைத்தனர். இதனிடையே, கள்ளச்சாராயம் குடித்து 3 பேர் உயிரிழந்த நிலையில் எக்கியார் குப்பத்தை சேர்ந்த பொதுமக்கள் போராட்டத்தில் ஈடுபட்டனர். இந்த சம்பவத்தில் உயிரிழந்தோரின் குடும்பத்திற்கு முதல்வர் மு.க.ஸ்டாலின் குடும்பத்திற்கு ரூபாய் 10 லட்சம் நிவாரணம் அறிவித்துள்ளர்,
Just In




இந்த நிலையில், கள்ளச்சாராயம் குடித்து ஆபத்தான நிலையில் நேற்று விழுப்புரம் முண்டியம்பாக்கம், திண்டிவனம் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த ராஜ மூர்த்தி, மலர்விழி, மன்னாங்கட்டி என்பவரும் சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார். இதனால், கள்ளச்சாராயம் குடித்ததில் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 6 ஆக உயர்ந்தது. இதை தொடர்ந்து இன்று காலை சிகிச்சையில் இருந்த விஜயன்,கேசவ வேலு, சங்கர் ஆகியோர் சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார். இதனால், கள்ளச்சாராயம் குடித்ததில் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 11 ஆக உயர்ந்தது. மரக்காணம் காவல் நிலைய ஆய்வாளர் அருள் வடிவழகன், உதவி ஆய்வாளர்கள் தீபன்,சீனுவாசன், மதுவிலக்கு அமலாக்கப்பிரிவு ஆய்வாளர் மரியா, உதவி ஆய்வாளர் சிவகுருநாதன் ஆகியோர் தற்காலிக பணி நீக்கம் செய்யப்பட்டுள்ளனர்.
இறந்தவர்களின் விவரம்
இறப்பு எண்ணிக்கை: 11
சிகிச்சை : 35.
தீவிர சிகிச்சை: 5.
சாதாரண சிகிச்சை : 30.
1. சங்கர் வயது 55 து/பெ சிவானந்தம் (புதுவை மாநில ஜிப்மர் மருத்துவமனை- )
2.தரணிவேல் வயது 50 த/பெ கோவிந்தன் (புதுவை மாநில ஜிப்மர் மருத்துவமனை)
3. சுரேஷ், யைது 45 த/பெ பெருமாள் (புதுவை மாநில பிம்ஸ் மருத்துவமனை-
4. ராஜமூர்த்தி, /50. த/பெ துரைராஜ்
5. மலர்விழி (60), க/பெ ராமு
6. மண்ணாங்கட்டி (48), த/ பெ சித்திரை (மரக்காணம் காலனி)
7. விஜயன், (55) த/பெ சக்கரபாணி.
8. சங்கர் (45) த/பெ எத்திராஜ். ( மரக்காணம் காலனி)
9. கேசவ வேலு (70) / த/பெ துரைராஜ் எக்கியார் குப்பம்
10. ராஜவேல் (38)
11. விஜயன் (63)