• ADMK - BJP: அதிமுக எம்.எல்.ஏக்கள் மத்திய அமைச்சர் நிர்மலா சீதாராமனுடன் திடீர் சந்திப்பு..!


கோவையில் நிகழ்ச்சி ஒன்றில் கலந்துக்கொள்வதற்காக மத்திய அமைச்சர் நிர்மலா சீதாராமன் வருகை தந்துள்ளார். அவர் நிகழ்ச்சிக்கு செல்வதற்கு முன் அதிமுக எம்.எல்.ஏக்கள் சந்தித்து பேசியுள்ளனர். அதிமுக எம்.எல்.ஏ அமுல் கந்தசாமி, வரதராஜ் ஜெயராமன், ஏ.கே செல்வராஜ் ஆகியோர் மத்திய அமைச்சரை சந்தித்துள்ளனர்.  மக்களவை தேர்தல் நடக்க இன்னும் சில மாதங்களே இருக்கும் நிலையில் தற்போது முதல் அரசியல் களம் சூடு பிடித்துள்ளது. இதில் முக்கிய திருப்பமாக கடந்த சில தினங்களுக்கு முன் அதிமுக மற்றும் பாஜக இடையே இருந்த கூட்டணி முறிந்தது. மேலும் படிக்க 



  • TN Rain Alert: இன்று 3 மாவட்டங்களில் கொட்டப்போகும் கனமழை.. எந்தெந்த மாவட்டங்களில்? இன்றைய வானிலை நிலவரம் இதோ..


03.10.2023: தமிழ்நாடு, புதுச்சேரி மற்றும் காரைக்கால் பகுதிகளில் ஒரிரு இடங்களில்  இடி மின்னலுடன் கூடிய லேசானது முதல் மிதமான மழை  பெய்யக்கூடும். கன்னியாகுமரி, திருநெல்வேலி மற்றும் தென்காசி மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் கனமழை பெய்யவாய்ப்புள்ளது. 04.10.2023 முதல் 09.10.2023 வரை: தமிழ்நாடு, புதுச்சேரி மற்றும் காரைக்கால் பகுதிகளில் ஒரிரு இடங்களில் லேசானது முதல் மிதமான மழை  பெய்யக்கூடும். மேலும் படிக்க 



  • Tamilnadu BJP: அதிமுகவிற்கு டாடா? தமிழ்நாடு கூட்டணிக்காக பாஜக போடும் 2 திட்டங்கள்..! நிர்மலா சீதாராமனுக்கு புதிய பொறுப்பா?


அதிமுக - பாஜக உடனான கூட்டணி கடந்த சில ஆண்டுகளாகவே நீடித்து வந்தாலும், இரு கட்சிகள் இடையேயும் கருத்து மோதல் ஏற்படுவது என்பது அவ்வப்போது ஏற்பட்டு வந்தது. குறிப்பாக எடப்பாடி பழனிசாமி மற்றும் அண்ணாமலை ஆகியோர், அடிக்கடி நேரடியாகவும், மறைமுகமாகவும் விமர்சித்துக் கொண்டது கூட்டணியில் அதிர்வலைகளை ஏற்படுத்தியது. இந்நிலையில் தான், பாஜக உடனான கூட்டணியை முறித்துக்கொள்வதாக அண்மையில் அதிமுக அறிவித்தது.  நாடாளுமன்ற தேர்தலை பாஜக இன்றியே, அதிமுக தலைமையிலான கூட்டணி எதிர்கொள்ளும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும் படிக்க 



தமிழ்நாடு முதலமைச்சர் மு.க ஸ்டாலின் தலைமையில் இன்று மற்றும் நாளை ஆகிய 2 தினங்கள்  மாவட்ட ஆட்சியர்கள் மற்றும் மாவட்ட காவல் கண்காணிப்பாளர்கள் மாநாடு நடைபெறும் என அறிவிக்கப்பட்ட நிலையில் அந்நிகழ்வானது தொடங்கியுள்ளது. இரண்டு நாள் நடைபெறும் மாநாட்டில் பல்வேறு முக்கிய விஷயங்கள் குறித்து ஆலோசிக்கப்பட உள்ளது. முதல் நாள் மாநாட்டில் காவல் கண்காணிப்பாளர்கள், அமைச்சர்கள், வனத்துறை அதிகாரிகள் கலந்துக்கொள்ள உள்ளனர். நாளை அனைத்து மாவட்ட ஆட்சியர்கள் கலந்துக்கொள்ள உள்ளனர். மேலும் படிக்க 



  • Latest Gold Silver: ஒரே வாரத்தில் ரூ. 2,160 குறைந்த தங்கம் விலை.. ஒரு சவரன் எவ்ளோ தெரியுமா? இன்றைய நிலவரம் இதோ..


இன்று (அக்டோபர் 3-ஆம் தேதி) சென்னையில் 22 கேரட் ஆபரணத் தங்கத்தின் விலை ரூ.528 குறைந்து சவரனுக்கு ரூ.42,320-க்கு விற்பனை செய்யப்பட்டு வருகிறது. 22 கேரட் ஆபரணத்தங்கத்தின் விலை ரூ.66 குறைந்து கிராமுக்கு ரூ. 5,290 க்கு விற்பனை செய்யப்படுகிறது.  சென்னையில் 24 காரட் தங்கத்தின் விலை சவரனுக்கு ரூ. 46,080 ஆகவும் கிராமுக்கு ரூ.5,760 ஆகவும் விற்பனை செய்யப்படுகிறது. மேலும் படிக்க