தமிழ்நாடு முதலமைச்சர் மு.க ஸ்டாலின் தலைமையில் இன்று மற்றும் நாளை ஆகிய 2 தினங்கள்  மாவட்ட ஆட்சியர்கள் மற்றும் மாவட்ட காவல் கண்காணிப்பாளர்கள் மாநாடு நடைபெறும் என அறிவிக்கப்பட்ட நிலையில் அந்நிகழ்வானது தொடங்கியுள்ளது. இரண்டு நாள் நடைபெறும் மாநாட்டில் பல்வேறு முக்கிய விஷயங்கள் குறித்து ஆலோசிக்கப்பட உள்ளது. முதல் நாள் மாநாட்டில் காவல் கண்காணிப்பாளர்கள், அமைச்சர்கள், வனத்துறை அதிகாரிகள் கலந்துக்கொள்ள உள்ளனர். நாளை அனைத்து மாவட்ட ஆட்சியர்கள் கலந்துக்கொள்ள உள்ளனர்.


இந்த கூட்டம் சென்னை தலைமை செயலகத்தில் உள்ள நாமக்கல் கவிஞர் மாளிகையில் நடைபெறுகிறது. அதில் காலை 9.30 மணி முதல் 11.30 மணி வரை மாவட்ட ஆட்சியர்கள் மற்றும் காவல்துறை கண்காணிப்பாளர்கள் கூட்டம் நடைபெறுகிறது. அதனை தொடர்ந்து 12 மணி முதல் 1.30 மணி வரை மாவட்ட ஆட்சியர்கள் மற்றும் வனத்துறை அதிகாரிகள் கூட்டம் நடக்க உள்ளது. மாலை 5.30 மணி முதல் 7.30 மணி வரை காவல்துறை அதிகாரிகளின் கூட்டம் நடைபெற உள்ளது. அதேபோல் நாளை காலை அதாவது இரண்டாவது நாளில் காலை 9.30 முதல் 11.45 வரையிலும், 12 மணி முதல் 1.30 மணி வரையிலும், 5.30 முதல் 7.30 மணி வரையிலும் மாவட்ட ஆட்சியர்கள் கூட்டம் நடக்கிறது.


திமுக அரசு ஆட்சி பொறுப்பேற்றதிலிருந்து மக்கள் நலனுக்காக பல்வேறு திட்டங்களை நிறைவேற்றி வருகிறது. சமீபத்தில் கலைஞர் மகளிர் உரிமைத் தொகை திட்டம் அமலுக்கு வந்தது. மாதந்தோறும் மகளிருக்கு தமிழ்நாடு அரசு சார்பில் ரூ 1000 வழங்கப்படுகிறது. மேலும் திட்டங்களை ஆய்வு செய்யவும்,  அவற்றை மேலும் சிறப்பாக செயல்படுத்துவது குறித்தும் அறிவுரை வழங்குவதற்கும் இந்த மாநாடு நடைபெற உள்ளதாக தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது.


அதுமட்டுமின்றி சட்டப்பேரவையில் விதி எண் 110-ன் கீழ் வெளியிடப்பட்ட அறிவிப்புகள், நிதிநிலை அறிக்கை, வேளாண் அறிக்கை,  அமைச்சர்களின் துறை ரீதியிலான மானியக் கோரிக்கை அறிவிப்புகள் குறித்தும் அதிகாரிகளுடன் முதலமைச்சர் ஆலோசனை மேற்கொள்ள உள்ளார். இந்த திட்டங்கள் தொடர்பாகவும் இதனை செயல்படுத்துவது தொடர்பாகவும் அதிகாரிகளுக்கு அறிவுரை வழங்கப்பட உள்ளது. இந்த மாதம் வடகிழக்கு பருவமழை தொடங்க இருப்பதால் முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் குறித்தும், ஒவ்வொரு மாவட்டத்தில் நடக்கும் வளர்ச்சிப் பணிகள் குறித்தும் ஆலோசிக்கப்பட உள்ளது.


ஒவ்வொரு மாவட்டத்தில் மக்களின் தேவையை அறிந்து,  வரும் ஆண்டுகளில் அதனை  நிறைவேற்றும் நோக்கில் இந்த இரண்டு நாள் மாநாடு நடத்தப்படுகிறது. அதுமட்டுமின்றி தமிழ்நாட்டில் இருக்கும் சட்ட ஒழுங்கு பிரச்சனை குறித்து காவல்துறை அதிகாரிகளிடம் கேட்டறிய உள்ளார். முதல் நாளான இன்று தமிழ்நாடு முதலமைச்சர் மு.க ஸ்டாலின் துவக்க உரையாற்றுகிறார். அதேபோல் நாளைய மாநாட்டில் நிறைவுறையாற்றுகிறார். இந்த மாநாட்டில் காவல் துறை அதிகாரிகளுக்கிம் மாவட்ட நிர்வாகிகளுக்கும் முதலமைச்சர் மு.க ஸ்டாலின் பல்வேறு அறிவுரைகளை வழங்குவார் என கூறப்படுகிறது.


Producer V.A.Durai: விக்ரம், சூர்யா படங்களின் தயாரிப்பாளர் வி.ஏ.துரை மரணம்.. அதிர்ச்சியில் திரையுலகினர்..


Mettur Dam: மேட்டூர் அணையின் நீர்வரத்து 3,122 கன அடியில் இருந்து 1,560 கன அடியாக குறைவு..


Chennai Traffic Update : தாம்பரத்தில் தீராமல் தொடரும் தலைவலி.. தொடர் போக்குவரத்து நெரிசல்..