• Rain Alert: தமிழ்நாட்டில் இன்று 3 மாவட்டங்களில் மிக கனமழைக்கு வாய்ப்பு.. அடுத்த 7 நாள் நிலவரம் இதோ..


தென்கிழக்கு அரபிக்கடல் பகுதிகளில் ஒரு வளிமண்டல கீழடுக்கு சுழற்சி நிலவுகிறது. தென்தமிழக மாவட்டங்கள் மற்றும் வடதமிழக  கடலோர மாவட்டங்களில்  அநேக இடங்களிலும், வடதமிழக உள்  மாவட்டங்களில் ஓரிரு இடங்களிலும், புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளிலும் இடி மின்னலுடன் கூடிய லேசானது முதல் மிதமான மழை  பெய்யக்கூடும். மேலும் படிக்க

 



  • CM Stalin Global Investor Meet: ”முதலீடு மழையாக பெய்யும் என நம்புகிறேன்” - முதலீட்டாளர்கள் மாநாட்டில் முதலமைச்சர் ஸ்டாலின் உரை


சென்னை நந்தம்பாக்கத்தில் இரண்டு நாட்கள் நடைபெறும் உலக முதலீட்டாளர் மாநாட்டை, முதலமைச்சர் ஸ்டாலின் தொடங்கி வைத்தார். தொடர்ந்து நிகழ்ச்சியில் பேசிய அவர், ” பொதுவாக வெளிநாடுகளுக்கு செல்லும்போதுதான் நான் சூட் போடுவது வழக்கம். ஆனால் இங்கு எல்லா வெளிநாடுகளும் தமிழ்நாட்டிற்குள் வந்துவிட்ட காரணத்தால், இங்கே நான் கோட் சூட் அணிந்து வந்திருப்பது பொருத்தமாக உள்ளது. மேலும் படிக்க



  • VinFast MoU with Tamil Nadu: தமிழ்நாட்டில் ரூ.16 ஆயிரம் கோடி முதலீடு, யார் இந்த வின்ஃபாஸ்ட் நிறுவனம், கிடைக்கும் பலன்கள் என்ன?


தமிழ்நாடு தொழில்துறையை மேம்படுத்துவதற்கும், புதிய முதலீடுகள் மூலம் ஏராளமான வேலைவாய்ப்புகளை உருவாக்கும் நோக்கிலும், இன்று தொடங்கி அடுத்த இரண்டு நாட்களுக்கு உலக முதலீட்டாளர்கள் மாநாடு நடைபெற உள்ளது. இதில் பல்வேறு நாடுகளைச் சேர்ந்த தொழில்துறை பிரதிநிதிகள் பங்கேற்று, புதிய முதலீட்டிற்கான ஒப்பந்தங்களில் கையெழுத்திட உள்ளனர். அதில் ஒரு குறிப்பிடத்தக்க நிறுவனம் தான் வியட்நாமைச் சேர்ந்த மின்சார கார் உற்பத்தி நிறுவனமான வின்ஃபாஸ்ட். மேலும் படிக்க



  • Pongal Parisu Thogai 2024: மக்களே ரெடியா..! ரேஷன் கடைகளில் இன்று முதல் பொங்கல் பரிசுக்கான டோக்கன் விநியோகம்


தைத்திருநாளான பொங்கல் பண்டிகை வரும் ஜனவரி 15 ஆம் தேதி கொண்டாடப்படுகிறது. பொங்கல் பண்டிகை வெகு விமரிசையாக கொண்டாடப்படுவதை ஒட்டி,  பொங்கல் பண்டிகைக்காக ஆண்டுதோறும் ரேஷன் கடைகளில் குடும்ப அட்டைதாரர்களுக்கு பொங்கல் பரிசு வழங்கப்படுவது வழக்கம். மேலும் படிக்க



  • GIM 2024: முதல்வர் ஸ்டாலின் தலைமையில், தொழில்துறைக்கு சாதகமான சூழலில் தமிழ்நாடு : முகேஷ் அம்பானி பேச்சு


சென்னை நந்தம்பாக்கம் வர்த்தக மையத்தில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தலைமையிலான 3ஆவது முறையாக உலக முதலீட்டாளர் மாநாடு இன்று (டிச.7) தொடங்கியது. விழாவில் மத்திய தொழில் துறை அமைச்சர் பியூஷ் கோயல் சிறப்பு விருந்தினராக பங்கேற்றார். நிகழ்ச்சியில் 50-க்கும் மேற்பட்ட நாடுகளில் இருந்து வர்த்தக மற்றும் தொழில் நிறுவனங்களின் தலைவர்கள் கலந்து கொண்டுள்ளனர். மேலும் படிக்க